தொல்காப்பியம் 1089 · பொருள் 4.4

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

மக்களிடையே பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், பெரியோர் திருமணச் சடங்கை வகுத்தனர் என்று கூறுவர்.

இளம்பூரணர்

ஐயர் என்பதை முனிவர் என்பார்; செய்ததை மறைத்தல் பொய், செய்ததில் நிலைநில்லாது தவறி ஒழுகுதல் வழு. முதல் ஊழியில் கரணம் இன்றியே இல்வாழ்க்கை நடந்தது; இவை தோன்றிய பின்னரே கரணம் தோன்றியது என்பார்.

நச்சினார்க்கினியர்

ஐயர் என்பதை இருடிகள் எனக் கொண்டு, அவர்கள் மேலோர்க்கும் கீழோர்க்கும் வேறுவேறு கரணம் வகுத்தனர் என்பார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After falsehood and failing appeared,
  2. the elders laid down the rite, they say.

What the poem says

This nūṟpā gives the origin of the marriage rite: once poy "falsehood" and vaḻu "failing, lapse" had appeared among people, the aiyar established karaṇam.

Iḷampūraṇar explains aiyar as the sages (muṉivar). Falsehood is hiding what one has done, failing is not standing by what one has undertaken; since both appeared in the second age, he says, in the first age household life went on without the rite, and the rite was instituted afterwards because with it these two no longer occur. Nacciṉārkkiṉiyar takes aiyar as the ṛṣis and says they laid down separate rites for the higher and the lower orders; he reads "they say" as referring to the northern authors rather than to the first teacher. The two agree on the main point: formal marriage arose to guard against men who deny or abandon the women they have loved.

உரை · Commentary

இளம்பூரணர்

என்றது, கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) பொய்கூறலும் வழூஉப்பட வொழுகலும் தோன்றிய பின்னர் முனிவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் எ-று.

இரண்டுந் தோன்றுவது இரண்டாம் ஊழியின்கண்ணாதலின், முதலூழியிற் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம் இவை தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றினதென்பதூஉம் கூறியவாறாயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி யொழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவை யிரண்டும் நிகழாவாமாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று.

நச்சினார்க்கினியர்

இது வேதத்திற் கரணம் ஒழிய ஆரிடமாகிய கரணம் பிறந்தவாறும் அதற்குக் காரணமுங் கூறுகின்றது.

(இ-ள்.) பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் - ஆதி ஊழி கழிந்த முறையே அக்காலத்தந்தந் தொடங்கி இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற்காலத்தே; ஐயர் யாத்தனர் கரணம் என்ப - இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் கட்டினாரென்று கூறுவர். (எ-று).

ஈண்டு ‘என்ப’ (249) என்றது முதனூலாசிரியரையன்று, வட நூலோரைக் கருதியது. பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்திலேனென்றல்; வழுவாவது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல். அஃது அரசரும் வாணிகருந் தத்தம் வகையாற் செய்யத்தகுவன செய்யாது சடங்கொப்புமை கருதித் தாமும் அந்தணரோடு தலைமை செய்தொழுகுதலுங் களவொழுக்கத்தின் இழுக்குதல் போல்வனவும் அவர்க்கிழுக்கம். ஏனை வேளாளரும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்ப் பொய்யும் வழுவுந் தோன்றி வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக் கண்டு இருடிகள் மேலோர் மூவர்க்கும் வேறு வேறு சடங்கினைக் கட்டிக் கீழோர்க்குங் களவின்றியும் கற்பு நிகழுமெனவுஞ் சடங்கு வேறு வேறு கட்டினார் எனவே, ஒருவர் கட்டாமல் தாமே தோன்றிய கரணம் வேதநூற்கே உளதென்பது பெற்றாம். ஆயின் கந்தருவ வழக்கத்திற்குச் சிறந்த களவு விலக்குண்டதன்றோ எனின், ஒருவனையும் ஒருத்தியையும் எதிர்நிறீஇ ‘இவளைக் கொள்ள இயைதியோ நீ’ எனவும், ‘இவற்குக் கொடுப்ப இயைதியோ நீ’ எனவும் இருமுதுகுரவரும் கேட்டவழி அவர் கரந்த உள்ளத்தான் இயைந்தவழிக் கொடுப்ப வாகலின் அதுதானே ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம், களவொழுக்கம் நிகழாதாயினும் என்பது, கரணம் யாத்தோர் கருத்தென்பது பெற்றாம். இதனானே இயற்கைப்புணர்ச்சிக்கண் மெய்யுறு புணர்ச்சியையும் உள்ளப்புணர்ச்சியென்று கூறி அதன் வழிக் கற்பு நிகழ்ந்ததென்றுங் கூறவும்படும். இவ்வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந் நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்தபின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார்; அக் களவின் வழி நிகழ்ந்த கற்புங் கோடற்கென்று உணர்க.

மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையோடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி யங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பருஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணுமிமையார் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பம லறுகைத் தழங்குரல் வானின் தலைப்பெயற் கீன்ற மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித் தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர் வியர்ப் பாற்றித் தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் உவர் நீங்கு கற்பினெம் உயிருடம் படுவி முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப மறைதிறன் அறியா ளாகி ஒய்யென நாணினள் இறைஞ்சி யோளே பேணிப் பருஉப்பகை யாம்பற் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே (அகம். 136)

என வரும்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poyyum vaḻuvum tōṉṟiya piṉṉar
aiyar yāttaṉar karaṇam eṉpa.