தொல்காப்பியம் 1092 · பொருள் 4.7

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

களவுக் காலத்தில் தலைவனோடு உடன்போக்கில் சென்ற தலைவி, பின்னர் மனையில் இருக்கும்போது, தலைவன் பிரியும் நிலையில், சுரத்திடையே தான் கண்ட விலங்கு, பறவை முதலிய கருப்பொருள்களையும், அவை தம் துணையிடம் அன்பு காட்டும் செயல்களையும் சுட்டி, அன்பைத் தூண்டும் சொற்களைச் சொல்லுதல், தலைவன் மேற்கொள்ளும் வினைக்கு அச்சமாக அமையும்.

இளம்பூரணர்

குறுந்தொகைப் பாடலைச் சான்றாகக் காட்டி, உடன்போகாத தலைவி இவ்வாறு கூற இயலாது என்பார்.

நச்சினார்க்கினியர்

தலைவன் தன் வினையை முடிக்காமல் திரும்பிவிடுவானோ என்பதே அச்சம் என்று இவரும் கொள்வார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heroine who united and went off with him, staying at home,
  2. pointing to the creatures and their doings on the wild path,
  3. her speaking of things that rouse love, this itself
  4. becomes a fear for the hero's undertaking.

What the poem says

This rule concerns a heroine who in her kaḷavu days eloped with the hero and so travelled with him through the wilderness. Later, living at home as his wife, when he is about to leave on some task she may speak of what they saw on that path: the iṟaicci, creatures of the land such as the elephant or the dove, and their doings, for instance a male caring tenderly for its mate. Such talk, which arouses his love, becomes accam, "fear", for the work he is going on: it may hold him back.

Iḷampūraṇar cites Kuṟuntokai 79, where she wonders whether he has reached the little hamlet where the dove calls to its mate, and he infers that a heroine who did not elope cannot speak in this way. Nacciṉārkkiṉiyar agrees in sense: the fear is that he may not complete the task he has taken up. He refers to a Kalittokai poem as the heroine's speech.

உரை · Commentary

இளம்பூரணர்

என்—எனின், இதுவும் தலைமகட்குரிய கிளவிக்கட்படும் இலக்கணம் நுதலிற்று.

(இ - ள்.) களவிற்புணர்ந்து உடன்போகிய தலைமகள் கற்புக்கடன் பூண்டொழுகுங் காலத்து மனைக்கணிருந்து தான் முன்னர் இடைச்சுரத்தில் தலைவனுடன் கண்ட கருப்பொருண் முதலியவற்றையும் அவற்றின் தொழிலையும் குறித்துக் கிழவன் அன்புறுதற்குத் தக்கவற்றைக் கூறுதலே தலைமகன் இயற்றுந் தொழிற்கு அஞ்சும் அச்சமாகும் என்றவாறு.

எனவே புணர்ந்துடன் போகாத தலைவி அங்ஙனமிருந்து கூறல் தலைவற்கு அவன் செய்வினைக்கண் அச்சமாகாதென்றவாறு.

‘கான யானை தோல்நயந் துண்ட பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை அலங்க லுலவை யேறி யொய்யெனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்ச் சேர்ந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் கொல்லே மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே.” (குறுந். 79)

இதனுள் அஞ்சியவாறு காண்க. பிறவுமன்ன.

நச்சினார்க்கினியர்

இது, தலைவி கூற்றின்கட் படுவதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ - ள்.) புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து - களவுக் காலத்துப் புணர்ந்து உடன் போகிய தலைவி கற்புக்காலத்து இல்லின்கண் இருந்து; இடைச்சுரத்து இறைச்சியும் அன்புறுதக்க வினையுஞ் சுட்டிக் கிளத்தல் தானே - தான் போகிய காலத்துக் காட்டின்கட் கண்ட கருப்பொருள்களையுந் தலைவன் தன்மேல் அன்பு செய்தற்குத்தக்க கருப்பொருளின் தொழில்களையும் கருதிக் கூறுதல்தானே; கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும் - தலைவன் எடுத்துக்கொண்ட காரியத்திற்கு முடித்தலாற்றான்கொலென்று அஞ்சும் அச்சமாம் (எ - று.)

எனவே, அருத்தாபத்தியாற் புணர்ந்து உடன் போகாத தலைவி மனைக்கணிருந்து தலைவன் கூறக்கேட்டு அக்கருப்பொருள்கள் தன்மேல் அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது; வருவரெனத் துணிந்து கூறுதலாமென்றாராயிற்று.

“கான யானை………வல்லுவோரே. (குறுந். 79)

புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை அழைக்கும் வருத்தங் கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சியவாறு காண்க.

“அரிதாய வறனெய்தி” என்னும் (11) கலிப்பாட்டுத் தலைவன் அன்புறுதக்கன கூறக் கேட்ட தலைவி அவற்றைக் கூறிப் புனைநலம் வாட்டுநர் அல்லரென வரவு கருதிக் கூறியவாறு காண்க. இதனுள் ஆற்றுவிக்குந் தோழி வருவர் கொல்லென ஐயுற்றுக் கூறலின்மையின் தோழி கூற்றன்மையும் உணர்க.

“புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன” (கலி. 3) என்றாற் போல்வன தலைவி கூற்றாய் வருவன உளவாயின் இதன்கண் அடக்குக.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṇarntu uṭaṉ pōkiya kiḻavōḷ maṉai iruntu
iṭaic curattu iṟaicciyum viṉaiyum cuṭṭi
aṉpuṟu takka kiḷattal tāṉē
kiḻavōṉ cey viṉaikku accam ākum.