தொல்காப்பியம் 1094 · பொருள் 4.9

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 32

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
5
10
15
20
25
30

பொருள் · Meaning in TamilAI

பெறுவதற்கு அரிய திருமணம் முடிந்த பின், பெரியோர் சினந்து நோக்க இயலாத சிறப்பான இல்வாழ்க்கை பற்றிப் பேசுதல், முன்பு பட்ட துன்பம் நீங்கியதைக் கூறுதல், குற்றமற்ற தலைவியைக் குறித்துத் தெய்வத்துக்குச் செய்த நேர்த்திக்கடன், இல்லறப் பொறுப்பை ஒப்படைத்த தலைவியைத் தலைவன் மறந்து ஒழுகுதல், அவன் அடங்கா ஒழுக்கத்தால் வருந்தும் தலைவியைப் பொறுத்திருக்கச் செய்தல், பிழைத்து வந்த தலைவனை இடித்துரைத்துத் திருத்தி அவளிடம் சேர்த்தல், பணிவான மொழியால் வணங்குதல், அவன் புறத்தே பரத்தையரோடு விளையாடும் குற்றம், புதல்வனை நினையாததால் தலைவி தனிமையுற்று வருந்துதல், "அவள் நலத்தைத் திருப்பித் தா" என்றல், அவன் பேணா ஒழுக்கத்தால் நாணுதல், சூளுரை தவறியதைக் கண்டு வருந்துதல், பெரியோர் ஒழுக்கம் பெரிது எனச் சுட்டுதல், அளவுகடந்த ஊடலில் மூழ்கிய தலைவியின் பக்கம் நின்று அதைத் தணித்தல், தணியாத ஊடலுடைய தலைவியிடம் தலைவன் பக்கம் நின்று தானே சினத்தல், களவுக் காலத்தில் அரியவனாக இருந்தவன் இப்போது எளியவனானதைக் கண்டு இரங்குதல், பாணர், கூத்தர், விறலியர் வேண்டுதலுக்கு மறுமொழி, தலைவியிடம் சேருமாறு தலைவனைக் கண்ணோட்டமின்றித் திருப்பி அனுப்புதல், பிரியும் காலத்தில் முன்னின்று சொல்லும் மறுமொழி ஆகிய இவையும் பிறவும் தோழிக்கு உரிய கூற்றுகள் என்று புலவர் கூறுவர்.

இளம்பூரணர்

இவ்வாறு விளக்குவார்; ஊடல் மிகுந்தபோது "உப்பமைந்தற்றால் புலவி" என்னும் குறளையும் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

"பெரும்பொருள்" என்பதை வேள்விச் சடங்கோடு கூடிய வதுவை எனவும், "சிறப்பு" என்பதைத் தனக்கு உதவிய தோழியைத் தலைவன் புகழ்தல் எனவும் கொள்வார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After the great thing hard to win was achieved, that came
  2. in the excellence of a line none can blame;
  3. if she speaks of the end of their distress; in the vow to the god
  4. with the faultless heroine in view;
  5. if he forgets her in whose keeping he left the great and worthy charge;
  6. to her who is crushed by his unrestrained conduct,
  7. in the matter of showing her how to bear it;
  8. coming close to the husband who has strayed and come back,
  9. in making him over to her, set right;
  10. in bowing with words of humble kind;
  11. his delight in joining in play outside;
  12. if she grieves, not seeing the excellent son;
  13. in apportioning, 'Give back her fine beauty';
  14. in the matter of shame at his neglectful conduct;
  15. if she is distressed to see him slacken in his oath;
  16. declaring that the conduct of the great is weighty,
  17. if he errs, unworthy of having her; in that course,
  18. to the heroine sunk in a sulk beyond reason,
  19. in standing by her and dispelling it;
  20. to her who has a sulk that does not yield to persuasion,
  21. standing by the hero who must win her round,
  22. in the fitness of being angry herself;
  23. in the pity, at the time when he is easy to reach,
  24. for the pride he showed in the time when he was hard to reach;
  25. bards, dancers, singing women: in reply
  26. to the requests these spoke with respect;
  27. so that the hero who left may come to be with her,
  28. if, in her role of guarding, she turns him away without regard;
  29. in the time of parting, standing before him, the reply
  30. of proper form that she declared, included, and others too:
  31. all the utterances that come in these kinds
  32. belong to the friend, say the learned.

What the poem says

The occasions of the tōḻi, the friend, in kaṟpu. Iḷampūraṇar reads them as follows. When the great thing hard to win, marriage, has been achieved, the friend speaks of the excellence of a married life that the elders cannot now look on in anger (Kuṟuntokai 178 is his example). She speaks of the end of their former distress; of the vow to the god made with the faultless heroine in view; of his forgetting his wife, who holds the great charge of the household, by straying to courtesans. She shows the wife, crushed by his conduct, reasons to bear it; she reproaches the returning husband and hands him back to the wife set right; she bows to him with humble words.

Further items: his delight in play outside with courtesans in river and grove; the wife's loneliness because he neglects their son; "give back the beauty you took"; the wife's shame at his neglect; distress when he breaks his oath; pointing out that the conduct of the great is weighty when his fault is unworthy of her. When the wife sulks beyond reason, the friend takes her side and dispels it; when the sulk will not yield, she takes his side and is angry with the wife, as in the Kuṟaḷ: "a sulk is like salt; too much spoils it". She pities him for the pride he showed in kaḷavu now that he is easily had. She answers the bards, dancers and singing women who plead for him, turns him away without regard so that he may return to the wife, and replies when he is about to depart.

Nacciṉārkkiṉiyar takes the "great thing" as the wedding with Vedic sacrifice, and ciṟappu as the hero's praise of the friend who helped them, with her modest reply; we follow Iḷampūraṇar in the lines. Another reading is cūḷnayattāl for cūḷvayiṉ tiṟattāl in line 15; the sense is not changed.

உரை · Commentary

இளம்பூரணர்

என் - எனின், கற்பின்கண் தோழிகூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பெறற்கரும் சிறப்பு முதலாக மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும் ஈறாக மொழியப்பட்டவை யாவும் தோழிக்குரிய என்று கூறுவர் புலவர் என்றவாறு.

பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின்கண்ணும் என்பது—பெறுதற்கு அரிய பெரும்பொருளை முடித்த பின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய மரபு காரணத்தால் தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழிகூற்று நிகழும் என்றவாறு.

பெரும்பொருள்—ஈண்டு வரைவிற்கேற்றது. தெறுதல்—அழல நோக்குதல்.

“அயிரை……பெரிய நோன்றனிர் நோகோ யானே” (குறுந். ௧௭௮)

எனவரும்.

அற்றமழிவு உரைப்பினும் என்பது—முற்காலத்துற்ற வருத்தத்தின் நீங்கினமை கூறினும் என்றவாறு.

“எரிமருள்………மலரணிந் தோயே” (ஐங்குறு. 294)

எனவரும்.

அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக்கடத்தினும் என்பது—குற்றமில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக்கடன் கொடுத்தற்கண்ணும் என்றவாறு.

“நெஞ்சமொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந் தாயவட் டெறுதரக் காக்கவெம் மகனெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே.”

“வாழி ஆதன்… எனவேட் டேமே” (ஐங்குறு. ௯)

“திண்டேர் நள்ளி……காக்கையது பலியே” (குறுந். ௨௱௰)

எனவரும்.

சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் என்பது—சீருடைய பெரும்பொருளாவது இற்கிழமை : அதனைத் தலைமகண்மாட்டு வைத்தவிடத்து அவளை மறந்து ஒழுகினவழியும் என்றவாறு.

அஃதாவது அறத்தினானாதல் பொருளினானாதல் அவனுக்காகிய இசையுங் கூத்தும் முதலியவற்றான் அத்திறம் மறத்தல். அவ்வழியுந் தோழிகூற்று நிகழும்.

“பொங்குதிரை………கண்பசந் ததுவே” (நற்றிணை ௩௫)

என வரும்.

அடங்கா வொழுக்கத் தவன் வயி னழிந்தோளை யடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும் என்பது - அடங்கா வொழுக்கத்தையுடைய தலைவன்மாட்டு மனன அழிந்தோளை அடங்கக்காட்டுதற்கு ஏதுவான பொருட்பக்கத்தினும் கூற்று நிகழும் என்றவாறு.

“இது மற்றெவனோ…………நமக்கே” (குறுந். ௧௮௧)

எனவரும்.

பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற்கண்ணும் என்பது—பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகன்மாட்டாக்கிக் கொடுத்தற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

“பகலில்…………மகிழ்நநின் பெண்டே.” (ஐங்குறு. ௫௭)

“கேட்டிசின்……….நெஞ்சே” (ஐங்குறு. ௫௯)

என வரும்.

வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும் என்பது—தாழ்ந்த இயல்பினையுடைய மொழியினான் வணங்குதற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

“உண்டுறைப்………கொளல்” (ஐந்திணையெழு. ௫௨) என வரும்.

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியும் என்பது—புறப்பட்ட விளையாட்டினைத் தலைவன் பொருந்திய புகர்ச்சிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. புகர்ச்சி—குற்றம்.

“காலையெழுந்து……பிறத் தல்லே” (குறுந் 45) என வரும்.

சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் என்பது—இருவர்க்குஞ் சிறந்த புதல்வனை நினையாமையால் தலைமகன் தனிமையுறுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“நெடுநா……பிறந்த மாறே” (நற்றிணை. 40) எனவும்

“நூண்ஞாண்……தொடுத்து” (ஐந்திணையெழு. 94)

எனவும் வரும்.

மாணலந் தாவென வகுத்தற்கண்ணும் என்பது—நீ கொண்ட நலத்தினைத் தந்துபோ எனக் கூறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“விட்டென……உண்டவென் நலனே” (குறுந் 236)

என வரும்

பேணா வொழுக்கம் நாணிய பொருளினும் என்பது—தலைமகனைப் பேணாத ஒழுக்கத்தினால் தலைமகள் நாணிய பொருண்மைக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“யாயாகியளே…………கரப்பா டும்மே” (குறுந். ௯) என வரும்.

சூள்வயிற் றிறத்தாற் சோர்வுகண் டழியினும் என்பது—தலைமகன் சூளுற்ற சூளுறவிற் சோர்வுகண்டு அழிந்து கூறினும் கூற்று நிகழும் என்றவாறு.

“எம்மணங்கினவே…………சூளே” (குறுந். ௫௩) என வரும்.

பெரியோரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும் என்பது—பெரியோ ரொழுக்கம் பெரிதாகுமெனச் சொல்லித் தலைமகளைப் பெறுந்தகைமை யில்லாத பிழைப்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“வெள்ளிவிழுத்…………உலகத் தானே” (அகம் 286) என வரும்.

அவ்வழி யுறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும் என்பது—மேற் சொல்லியவாற்றாற் றலைவன் பிழைத்தவழி அவனா லுறுந்தகைமை யில்லாத புலவியின் மூழ்கிய தலைவி பக்கத்தாளாகி நின்று அதனைக் கெடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“மானோக்கி நீயழ நீத்தவன் ஆனாது நாணில னாயின் நலிதந் தவன்வயின் ஊடுவ தென்னோ வினி” (கலி. ௮௭) என வரும்.

உணர்ப்புவயின் வாரா வூடலுற்றோள்வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் என்பது—தலைவன் ஊடல் தீர்க்கவும் அதன்வழி வாராத ஊடலுற்றோள்வயின் அவ்வூடலைத் தீர்த்தல் வேண்டிய தலைவன் பக்கத்தாளாகி நின்று தலைவனை வெகுண்டு நின்றுண்டாக்கிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்” (திருக்குறள் ௲௩௱௨.)

என வரும்.

அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எளிமைக் காலத் திரக்கத்தானும் என்பது—தாமரியராகிய களவுகாலத்துத் தமது பெருமையைக் காட்டிய தாம் எளியராகிய கற்புக்காலத்து இரக்கத்தின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

பெருமைகாட்டிய விரக்கம் எனக் கூட்டுக. இதனாற் சொல்லியது, வாளாதே இரங்குதலன்றிப் பண்டு இவ்வாறு செய்தனை இப்பொழு திவ்வாறு செய்யாநின்றனை எனத் தமதுயர்ச்சியுந் தலைமகனது நிலையின்மையுந் தோற்ற இரங்குதலாயிற்று. இதுவும் புலவிமாத்திரமன்றித் தலைவ னீங்கி யொழுகும் ஒழுக்கம் மிக்கவழிக் கூறுவதெனக் கொள்க.

“வேம்பின் பைங்காய்…………அன்பின் பாலே” (குறுந் 196)

என வரும்

பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும் என்பது—பாணராயினுங் கூத்தராயினும் விறலியராயினும் இத்தன்மையர் விரும்பிச் சொல்லிய குறையுறும் வினைக் கெதிராகவுங் கூற்று நிகழும் என்றவாறு.

குறையுறும் வினை குறைவினை யென ஒட்டிற்று ; அது சொல்லிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று;

“புலைமகன் ஆதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினிப் பரியல் பகல்எஞ் சேரிக் காணின் அகல்வய லூரன் நாணவும் பெறுமே”

எனவும்,

“அணிநிறக் கெண்டை ஆடிடம் பார்த்து மணிநிறச் சிறுசீரல் மயங்குநம் பொய்கை விரைமல காற்றா விருந்தினம் யாமென முழவிமிழ் முன்றில் முகம்புணர் சேர்த்தி எண்ணிக் கூறிய இயல்பினின் வழாஅது பண்ணுக்கொளப் புகுவ கணித்தோ பாண செவிநிறை உவகையேம் ஆக இதநா ணன்மைக் குரைத்துச்சென் றீமே”

எனவும் வரும்.

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்வயிற் கண்ணின்று பெயர்ப்பினும் என்பது—தலைவியை நீத்த கிழவனை அவளுடன் நிகழுமாறு படுத்தல் வேண்டி அவனைப் புறங்காத்த தன்னிடத்துற்ற தலைமகனைக் கண்ணோட்டமின்றிப் பெயர்த்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“மனையுறு கோழி……….தெருவே” (குறுந். 139)

என வரும்,

பிரியுங்காலை யெதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்பட என்பது—தலைவன் சேயிடைப் பிரியுங் காலத்து முன்னின்று சொல்லிய மரபுடை மாறுபாடும் என்றவாறு.

எனவே, அகத்திணையியலுட் கூறப்பட்டது களவுகாலத்தை நோக்கிக் கூறுதலான் அயலிதாகக் கூறப்பெறும் என்பதூஉம் இவ்வோத்தினுட் செலவழுங்குவித்தல் பார்ப்பார்க் குரித்தாகக் கூறுதலானுங் கற்பினுட் பிரிவு மரபு கெடாமற் கூறவேண்டும் என்பதூஉங் கருத்து. மரபினாற் கூறுதலாவது குற்றேவல் முறைமையாற் கூறுதல். பிரிவை அகத்திணையியலுள் வைத்ததனான், ஆண்டுக் கூறிய கிளவி இருவகைக் கைகோளிற்கும் பெரும்பான்மை யொக்கும் எனக்கொள்க. உடன்போக்கும் ஒக்குமோ எனின், கற்பினுள் உடன்போக்கு உலகியலுட் பெரும்பான்மையென்று கொள்க. இக்கூற்றுத் தலைமகன் மாட்டுந் தலைமகள்மாட்டுமாம்.

“அறனின்றி…………கானந் தகைப்ப செலவு” (கலித். ௩)

என வரும்.

இனித் தலைமகட்குக் கூறியதற்குச் செய்யுள்:—

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிதாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர்” (திருக்குறள் ௲௱௬௰)

எனவரும்

பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய வென்மனார் புலவர் என்பது—மேற்சொல்லப்பட்ட கிளவியன்றிப் பிற வாய்பாட்டாற் பாகுபட வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய என்றுரைப்பர் புலவர் என்றவாறு.

வகைபடவந்த கிளவியாவன :—பிரிந்த தலைமகன் வருவனெனக் கூறுதலும், பருவங்கண்டு கூறுதலும், வற்புறுத்தலும், நிமித்தங்கண்டு கூறுதலும், வந்தான் எனக்கூறுதலும், இந்நிகரனவும், மேற்சொல்லப்பட்ட இடங்களிற் கூற்று வேறுபாடாகி வருவனவுங் கொள்க, அவற்றிற் களவுக்குங் கற்பிற்கும் பொதுவாகி வருவன அகத்திணையியலுட்கொள்க. கற்பிற்கே உரித்தாகி வருவன ஈண்டுக் கொள்க.

“ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை ஏமாண் சிலையார்க் கினமா இரிந்தோடும் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும்.” (கைந்நிலை. ௧௮)

இது நிமித்தங் கண்டு கூறியது.

“வாளிலங் குண்கண் வையெயிற் றோயே ஞாலங் காவலர் வந்தனர் காலை அன்ன மாலைமுந் துறுத்தே.’

இது தலைவன் வந்தமை கூறியது. பிறவும் அன்ன.

நச்சினார்க்கினியர்

இது, முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது.

(இ-ள்) (பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த தெறற்கு அரும் மரபிற் சிறப்பின்கண்ணும்) பெறற்கு அரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த-தலைவனுந் தலைவியுந் தோழியும் பெறுதற்கரிதென நினைத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச் சடங்கான் முடிந்தபின்பு தோன்றிய; தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் தனது தெறுதற் கரிய மரபுகாரணத்தால் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும்; தோழி கூற்று நிகழும்.

தலைவியையுந் தலைவனையும் வழிபாடாற்றுதலின் ‘தெறற் கரு மரபின்’ என்றார். தெறுதல்-அழன்று நோக்குதல். சிறப்பு, இவளை நீ ஆற்றுவித்தலின் எம் உயிர் தாங்கினேம் என்றாற் போல்வன. அவை எம்பெருமானே அரிதாற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ வென்றானும் நின் அருளால் இவள் ஆற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோவென்றானுங் கூறுவனவாம்.

“அயிரைபரந்த அந்தண் பழனத்து” (குறுந். 178)

இதனுண் முலையிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீரென, யான் நோவாநின்றேன், இங்ஙனம் அருமை செய்தலால் தேற்றுதற்கு உரியேனாகிய என்னைச் சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு காண்க.

“பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப் புன்கா னாவற் பொதிப்புற விருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கா லலவன் கொண்டகோட் கசாந்து கொள்ளா நரம்பி னிமிரும் பூசல் இரைதேர் நாரை யெய்திய விடுக்குந் துறைகெழு மாந்தை யன்ன விவள்நலம் பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் கட்கழி செருக்கத் தன்ன காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.” (நற்றிணை. 35)

இதனுள் தலைவி கனியாகவுந் தும்பி தோழியாகவும் அலவன் தன்மேல் தவறிழைக்குந் தமராகவும் தலைவன் இரைதேர் நாரையாகவும் உள்ளுறையுவமங் கொள்வுழித் தலைவி பொருட்டு யாய்க்கு அஞ்சி யொழுகினேனை நீ காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோவெனத் தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு காண்க. ‘பண்டும் இற்றே’ என்றது பண்டையின் மிகவும் வருந்தினாளென்றாள். இவள் கண் நீண்டு பசந்தது, களவின்கண் நீங்காது அளியாநிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள் அறாஉங்காலத்துப் பிறந்த வேறுபாடுபோலுங் காமவேறுபாடோ, அவ்விரண்டும் அல்லவே, இஃது ஓர் அமளிக்கண் துயிலப்பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த மிக்க வேறுபாடன்றோ? இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறென்னை என்றாளென்க.

அற்றம் அழிவு உரைப்பினும்-களவுக்காலத்துப்பட்ட வருத்தம் நீங்கினமை கூறினும் :

‘எக்கர் ஞாழ லிகந்துபடு பெருஞ்சினை’ (ஐங்குறு. 148) “எரிமருள் வேங்கை யிருந்த தோகை (ஐங்குறு. 294)

என வரும்.

அற்றம் இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின் அப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் இடத்தும்:

“நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந் தாயவட் டெறுவது தீர்க்க வெமக்கெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே.”

‘கிழவோற் சுட்டிய தெய்வக்கடம்’ என்று பாடம் ஓதி “வாழி யாதன் வாழி யவினி” (ஐங்குறு. 6)

என்பது உதாரணங் காட்டுவாரும் உளர்.

சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் தலைமையுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்தகாலத்துத் தலைவன் அறஞ்செயற்கும் பொருள் செயற்கும் இசையுங் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்குந் தலைவியை மறந்து ஒழுகினும்:

“கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறுந் தேர்வண் கோமான் தேனூ ரன்னவிவள் நல்லணி நயந்துநீ துறத்தலின் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே.” (ஐங்குறு. 55)

இதனுள், துறத்தலினெனப் பொதுவாகக் கூறினாள் அற முதலியவற்றைக் கருதுதலின்.

அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும் - புறத்து ஒழுக்கத்தை உடையனாகிய தலைவன்மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப் புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அன்புடையரென அவ் வேறுபாடு நீங்க நெருங்கிக் கூறுதலையுடைத்தாகிய பொருளின்கண்ணும் :

“செந்நெற் செறுவிற் கதிர்கொண்டு கள்வன் தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற் கெல்வளை ஞெகிழச் சாஅய் அல்ல லுழப்ப தெவன்கொ லன்னாய்.” (ஐங்குறு. 27)

இதன் உள்ளுறையாற் பொருளுணர்க.

பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும் — பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச், சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின்கண் ஊடல்நீங்குந் தன்மை உளதாக்கிக் கூட்டும் இடத்தும் :

“நகைநன் றம்ம…………பெரிதே” (அகம். 346)

“கேட்டிசின்…………நோமெ னெஞ்சே” (ஐங்குறு. 59)

எனவரும்.

வணங்கியன் மொழியான் வணங்கற்கண்ணும்—தாழும் இயல்பினையுடைய சொற்களால் தோழி தாழ்ந்து நிற்கும் நிலைமைக் கண்ணும் :

“உண்டுறைப்…………கொளல்” (ஐந். எழு. 54)

எனவரும். “பகலிற் றோன்றும்……பெண்டே” (ஐங்குறு. 57) இதுவும் அதன்பாற்படும்.

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தையரிடத்தே உண்டாம் விளையாட்டினைத் தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சிக்கண்ணும் :

விளையாட்டாவது யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலாம்.

‘பகுவாய் வராஅல்’ (அகம் 36) இதனுள் கொள்வா ரார்ப்பினும் பெரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க.

சிறந்த புதல்வனை நேராது புலம்பினும்—யாரினும் சிறந்த புதல்வனை வாயிலாகக்கொண்டு சென்றுழி அவற்குந் தலைவி வாயில் நேராமல் தலைவன் வருந்தினும் :

“பொன்னொடு குயின்ற பன்மணித் தாலித் தன்மார்பு நனைப்பத் தன்றலையு மிஃதோ மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி புலர்த்தகைச் சாந்தம் புலர்தொறு நனைப்பக் காணா யாகலோ கொடிதே கடிமனைச் சேணிகந் தொதுங்கு மாணிழை யரிவை நீயிவணேரா வாயிற்கு நாணுந் தந்தையொடு வருவோன் போல மைந்தனொடு புகுந்த மகிழ்நன் மார்பே”

எனவரும்.

மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும்—இவள் இழந்த மாட்சிமைப்பட்ட நலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலைவனை வேறுபடுத்தற்கண்ணும்;

“யா[?]ர…………நலந்தந்து சென்மே” (நற்றிணை. 395)

எனவரும்.

“நுண்ஞாண் வலையிற்……தொடுத்து” (ஐந். எழு. 66)

இதுவும் அதன்பாற்படும்.

பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் - பரத்தை தலைவியைப் பேணாது ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின்கண்ணும் : தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும்.

“பொய்கை நீர் நாய்ப் புலவுநாறு இரும்போத்து” (அகம் 385)

இதனுள், யான் நினக்குத் தோழியாவேனெனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு தான் நாணினேனென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க.

இன்னுந் தலைவனது பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின் கண்ணுமெனவுங் கூறுக.

“யாயா கியளே மாஅ யோளே” (குறுந். 9)

என வரும்.

இவை இரண்டும் பொருள்.

சூள் நயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியினும் : நயத்திறத்தாற் சூள் சோர்வு கண்டு அழியினும்-கூடுதல் வேட்கைக் கூறுபாட்டால் தான் சூளுறக்கருதிய சூளுறவினது பொய்ம்மையைக் கருதித் தலைவி வருந்தினும்: தோழிக்குக் கூற்று நிகழும்.

“பகல்கொள் விளக்கோ டிரானா ளறியா வென்வேற் சோழர் ஆமூர் அன்னவிவள் நலம்பெறு சுடர் நுதல் தேம்ப எவன் பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே.” (ஐங்குறு. 56)

இதனுள் இவள் நுதல் தேம்புப்படி நீ தேற்றிய சொல்லெனவே சோர்வுகண்டு அழிந்தாளென்பது உணர்ந்தும் இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தருமெனத் தோழி தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க.

‘காடுற நிவந்த” (அகம். 266) என்னும் மணிமிடை பவளத்தைத் தோழி கூற்றாகக் காட்டுவாரும் உளர்.

(பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பினும்) பெரியோர் பெறுதகை இல்லாக் கிளந்து—நன்மக்கள் பெறுந்தகைமை இல்லறமாயிருக்குமென்றுஞ் சொல்லி; பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பிழைப்பினும் - நன்மக்கள் ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்கு மென்றுஞ் சொல்லித் தான் தலைவனை வழிபாடு தப்பினும்: தோழிக்குக் கூற்று நிகழும்.

பெரியோரையுங் கிளந்தென்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக.

“வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை” (அகம். 286)

இதனுள் ‘அற’ னென்றது இல்லறத்தை; ‘தற்றகவுடைமை நோக்கி’ யென்றது, தன்னால் அவ்வறனும் பொருளுந் தகுதிப்பாடுடையவாந் தன்மையை நோக்கி என்றவாறாம்; ‘முன்னியது’ என்றது புறத்தொழுக்கத்தை; ‘பெரியோரொழுக்க மனைய’ வென்றது பெரியோர் ஒழுக்கம் பெரிய வென்றவாறு.

இது முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள்பற்றி நும்மனோர் மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றாம். அதனாற் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத் தேருங்காலை அரியவாயிருந்தனவெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின் அவனை வழிபாடு தப்பினாளாயிற்று. உள்ளுறையுவமம் இதற்கு ஏற்குமாறுணர்க.

அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும் - தலைவன் அங்ஙனம் பிறழ்ந்த இடத்து அவன் சென்று சேருந் தகைமை இல்லாமைக்குக் காரணமாகிய புலவியின்கண் அழுந்திய தலைவிபக்கத்தாளாய் நின்று அவள் புலவியைத் தீர்த்தற்கண்ணும் :

‘மானோக்கி நீயழ நீத்தவ னானாது நாணில னாயி னலிதந் தவன்வயின் ஊடுத லென்னோ வினி.” (கலி 87)

“உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீள விடல்.” (குறள், 1302)

“காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர் மரீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.” (குறுந். 45)

(உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்) உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்—தலைவன் தெளிவிக்கப்படுந் தன்மைக்கணில்லாத ஊடல் மிகுத்தோளிடத்து;

உணர்ப்புப் ‘புணர்ப்புப்’போல் நின்றது.

உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று - ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன்வயத்தாளாய் நின்று; தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்—தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம் போந்தன்மை உண்டாக்கிய தகுதிக் கண்ணும்:

“துறைமீன்………அறியா ரம்மவஃ துடலு மோரே.” (அகம். 316)

இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க.

(அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத்தானும்) எண்மைக் காலத்து - தாம் எளியராகிய கற்புக்காலத்திலே; அருமைக் காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தானும்—களவுக்காலத்துத் தமது பெருமையை உணர்த்திய வருத்தத்தின் கண்ணும்:

“வேம்பின் பைங்காயென்’ (குறுந். 196)

பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் - பாணருங் கூத்தரும் விறலியருமென்று சொல்லுகின்ற இம் மூவரும்; பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் - விரும்பிக்கூறிய குறையுறும் வினைக்கு எதிராகவும்: கூற்று நிகழும்.

‘எதிரு’ மென்றது அவர் வாயில்வேண்டியவழித் தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல நேர்தலுங் கூறியதாம்.

‘புலைமகனாதலின்…நாணவும் பெறுமே.”

இது பாணர்க்கு வாயின் மறுத்தது.

“விளக்கின்………. போர்வையஞ்சொல்லே” (நற்றிணை 310)

இது விறலிக்கு வாயின் மறுத்தது. மறுப்பாள்போல் நேர்வ வந்துழிக் காண்க.

(நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்) நீத்த கிழவனை—பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனை; நிகழுமாறு படீஇ—தானொழுகும் இல்லறத்தே படுத்தல்வேண்டி; காத்த தன்மையில்—புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையினாலே; கண் இன்று பெயர்ப்பினும்-கண்ணோட்டமின்றி நீக்கினும்:

“மனையுறை கோழி………தெருவே” (குறுந். 139)

இதனுள் ‘அம்பலொடு வார’ லெனவே பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி போலத் தாயர் மகளிரைத் தழீஇக்கொண்டாரென்றலிற் புறம் போயும் பயமின்றெனக் காத்த தன்மை கூறிற்று.

(பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்) பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய- தலைவன் கற்பிடத்துப் பிரியுங்கால் தெய்வத்தன்மையின்றி முன்னின்று வெளிப்படக் கூறிய; மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் முறையுடைத்தாகிய எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப் பிறவற்றுக்கண்ணும்;

‘எதிரும்’ என்ற உம்மை, எச்சவும்மை. ‘பிற’ ஆவன தலைவன் வரவுமலிந்து கூறுவனவும், வந்தபின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்து மொழிவனவுந், தூது கண்டு கூறுவனவுந், தூது விடுவனவுஞ் சேணிடைப் பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தங்காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம்.

“பா அலஞ்செவி” என்னும் பாலைக்கலியுள்,

“பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு எந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வது அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே.” (கலி : 5)

இதனுட், ‘புரிந்தனை’ யென இறப்பும் ‘இறக்கு’மென எதிரும் மரபில் தப்பாமல் வந்தவாறு காண்க.

“வேனில்…………பொருளே” (ஐங்குறு. 309)

இஃது எதிரது நோக்கிற்று.

“புறவணி நாடன் காதன் மடமகள்” (ஐங்குறு. 424)

இதுவும் அது.

இனிப் ‘பிற’ வருமாறு:

“பார்வைவேட்டுவன்……நமக்கே.” (நற்றிணை. 212)

இது தலைவிக்கு வரவு மலிந்தது.

“நீலத்தன்ன…………மார்பே.” (அகம். 314)

இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறுந் தலைவற்குக் கூறியது.

“மடவமன்ற காரென……மதித்தே.” (குறுந். 66)

இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது.

“என நீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே.” (கலி. 26)

இது, தூது வந்தமை தலைவிக்குக் கூறியது.

“கைவல் சீறியாழ்ப் பாண நுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே எம்மின் உணரா ராயினுந் தம்வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யா ராகுதல் நோகோ யானே.” (ஐங்குறு. 472)

இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது.

தூதுவிட்டது வந்துழிக் காண்க.

“பதுக்கைத் தாய” (ஐங்குறு, 362)

இது, சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறியது

“ஆமா சிலைக்கு மணிவரை” (கைந்நிலை, 18)

இது நிமித்தங் காட்டிக் கூறியது.

இன்னும் அதனானே நமர் பொருள்வேண்டுமென்றார் அதற்கு யான் அஞ்சினேனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க.

“கன்னவில் தோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தார் ஏந்திழாய்—பின்னர் அமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினேன் அஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”

இன்னுந் தோழி கூற்றாய்ப் பிறவாற்றான் வருவனவெல்லாம் இதனான் அமைக்க.

‘அன்னை வாழிவேண் டன்னை” (ஐங்குறு. 104)

இது, புதல்வற்பெற்றுழித் தலைவன் மனைக்கட்சென்ற செவிலிக்கு அறத்தொடு நின்று வதுவைகூட்டிய தோழி அவன் ஊர் காட்டிக் கூறியது.

வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் புலவர் — தோழிகூற்றாய்த் தலைவிகூற்றினுள் அடங்குவதன்றித் தோழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாகவந்த கிளவிகளெல்லாந் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர் (எ - று.)

இச் சூத்திரத்துக்கண் ஏழனுருபும் அவ்வுருபு தொக்கு நின்று விரிந்தனவுஞ் செயினென்னும் வினையெச்சமும் உரியவென்னுங் குறிப்புவினை கொண்டன. அவற்றை இன்னவிடத்தும் இன்னவிடத்தும் இன்னதுசெய்யினும் உரியவென்று ஏற்பித்து முடிக்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1peṟaṟku arum perum poruḷ muṭinta piṉ vanta
teṟaṟku aru marapiṉ ciṟappiṉkaṇṇum
aṟṟam aḻivu uraippiṉum aṟṟam illāk
kiḻavōṭ cuṭṭiya teyvak kaṭattiṉum
5cīruṭaip perum poruḷ vaittavaḻi maṟappiṉum
aṭaṅkā oḻukkattu avaṉvayiṉ aḻintōḷai
aṭaṅkak kāṭṭutaṟ poruḷiṉ kaṇṇum
piḻaittu vantu irunta kiḻavaṉai neruṅki
iḻaittu āṅku ākkik koṭuttaṟkaṇṇum
10vaṇaṅku iyal moḻiyāṉ vaṇaṅkaṟkaṇṇum
puṟampaṭu viḷaiyāṭṭup pulliya pukaṟciyum
ciṟanta putalvaṉait tērātu pulampiṉum
māṇ nalam tā eṉa vakuttaṟkaṇṇum
pēṇā oḻukkam nāṇiya poruḷiṉum
15cūḷvayiṉ tiṟattāl cōrvu kaṇṭu aḻiyiṉum
periyōr oḻukkam peritu eṉak kiḷantu
peṟu takai illāp piḻaippiṉum av vaḻi
uṟu takai illāp pulaviyuḷ mūḻkiya
kiḻavōḷpāl niṉṟu keṭuttaṟkaṇṇum
20uṇarppuvayiṉ vārā ūṭal uṟṟōḷvayiṉ
uṇarttal vēṇṭiya kiḻavōṉpāl niṉṟu
tāṉ vekuṇṭu ākkiya takutikkaṇṇum
arumaik kālattup perumai kāṭṭiya
eḷimaik kālattu irakkattāṉum
25pāṇar kūttar viṟaliyar eṉṟu ivar
pēṇic colliya kuṟaiviṉai etirum
nītta kiḻavaṉai nikaḻumāṟu paṭīiyar
kātta taṉmaiyiṉ kaṇ iṉṟu peyarppiṉum
piriyum kālai etir niṉṟu cāṟṟiya
30marapu uṭai etirum uḷappaṭa piṟavum
vakai paṭa vanta kiḷavi ellām
tōḻikku uriya eṉmaṉār pulavar.