தொல்காப்பியம் 1102 · பொருள் 4.17

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 3

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தலைவனின் பரத்தைமை ஒழுக்கத்தை நீக்க வேண்டியும், தலைவி மடம் என்னும் பண்பால் அதைத் தானே நீக்க இயலாதவள் என்பதாலும், "நீ அன்பில்லாதவன், கொடியவன்" என்று தலைவனிடம் இடித்துரைத்தலும் தோழிக்கு உரியது.

இளம்பூரணர்

இதுவும் தோழிக்கு உரிய இயல்பு என்று, "கொடியை காண் நீ" என வரும் கலித்தொகைப் பாடலைக் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

சொல்லத் தகாத சொல்லையும் தோழி கூறலாம் என்பது சிறப்பு விதி என்று கூறுவார்; இவர் பாடம் "பரத்தை மறுத்தல்" என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Both wishing to make him refuse the courtesans, and since the heroine
  2. has the quality of fitting innocence,
  3. she may also say, 'You have no love, you are cruel'.

What the poem says

Another licence of the friend, as Iḷampūraṇar reads it. Wanting the hero to give up his straying to courtesans (parattaimai), and because the heroine, in her innocence (maṭam), cannot herself drive the fault away, the tōḻi may say to the hero, "you have no love; you are cruel" (aṉpilai, koṭiyai), harsh words she would not normally use to him. His example is Kalittokai 125, where the refrain "see, you are cruel" recurs.

Nacciṉārkkiṉiyar agrees that the speaker is the friend, adding that this is a special rule allowing her even words not fit to be said. He reads "innocence" as the heroine's habit of taking the hero's words as true even when she knows of his straying. Nacciṉārkkiṉiyar reads parattai for parattaimai in the first line; the sense is unchanged.

உரை · Commentary

இளம்பூரணர்

இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று.

இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

“மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண் அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ;

இலங்கேர் எல்வளை ஏர்தழை தைஇ நலஞ்செய நல்கிய தொடர்பவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவாய் இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ.” (கலித். ௧௨௫)

என வரும்.

நச்சினார்க்கினியர்

இது, சொல்லத்தகுங் கிளவியேயன்றிச் சொல்லத்தகாக் கிளவியுந் தோழி கூறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது.

(இ - ள்.) பரத்தைமை மறுத்தல் வேண்டியும் - தலைவன் படிற்றுள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல் விரும்பியும்; கிழத்தி மடத்தகு கிழமை உடைமையானும்—தலைவி அவன் பரத்தைமை அறிந்தேயும் அவன் கூறியவற்றை மெய்யெனக்கொண்டு சீற்றங்கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன அறிந்தொழுகும் உரிமையுடையளாகிய எண்மையானும்: அன்பிலை கொடியை என்றலும் உரியள்—தலைவனை அன்பிலை யென்றலுங் கொடியை யென்றலுமுரியள் தோழி (எ - று.)

கொடுமை கடையாயினார் குணம். களவினுள் தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க.

“கண்டவ ரில்லென உலகத்துள் உணராதார்” (கலி. ௱௨௫) என்னும் நெய்தற்கலி கைகோள் இரண்டிற்குங் கொள்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1parattaimai maṟuttal vēṇṭiyum kiḻatti
maṭat taku kiḻamai uṭaimaiyāṉum
aṉpilai koṭiyai eṉṟalum uriyaḷ.