தொல்காப்பியம் 1101 · பொருள் 4.16
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தலைவன் தலைவி இடையே புலத்தலும் ஊடலும் நிகழ்ந்த இடத்தும், அவற்றைத் தணிக்கச் சொல்லத்தக்க சொற்களைச் சொல்லுதல் தோழிக்கு உரியது.
இளம்பூரணர்
இதைத் தோழிக்கு உரிய மரபு என்று, கற்புக்குத் திருக்குறளையும் களவுக்குக் கலித்தொகையையும் சான்றாகக் காட்டுவார்.
நச்சினார்க்கினியர்
தலைவன் புலந்த இடத்தும் தலைவியின் குறிப்பறிந்து தோழியே பணிமொழி கூறுவாள் என்றும், பாடாண் திணைக் கைக்கிளையில் மட்டும் தலைவி தானே கூறுவாள் என்றும் விளக்குவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Where pulattal and ūṭal have arisen too,
- the words fit to be spoken belong to the friend.
What the poem says
When sulking (pulattal, ūṭal) arises between the couple, it is the tōḻi, the friend, who speaks the fitting words that calm it.
Iḷampūraṇar calls this a practice proper to the friend and gives examples from kaṟpu (Kuṟaḷ 1303, on refusing to embrace one who sulks) and from kaḷavu (Kalittokai 46). Nacciṉārkkiṉiyar connects it with the previous rule: even when the hero sulks, the friend speaks, with humble and loving words; so the heroine, reading his mind, does not speak herself, except in pāṭāṇ tiṇai, one-sided love, where she may.
உரை · Commentary
இளம்பூரணர்
இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று.
“அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் காமம் புலந்தாரைப் புல்லா விடல்” (குறள். 1303)
இது கற்பு.
“கலந்தநோய் கைமிகக் கண்படா வெம்வயிற் புலந்தாயு நீயாகிப் பொய்யானே வெல்குவை, யிலங்குதா ழருவியோ டணிகொண்ட நின்மலைச் சிலம்பு போற் கூறுவ கூறு மிலங்கே ரெல்வளை யிவளுடை நோயே”.
இது களவு. (கலித். ௪௬)
நச்சினார்க்கினியர்
இது, முன்னர்த், தலைவன் புலக்குமென்றார், அவ்விடத்துந் தோழியே கூற்றுநிகழ்த்துதற்கு உரியளென்கிறது.
(இ - ள்.) புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் - தலைவன் தலைவியையுந் தோழியையும் அச்சுறுத்தற்குச் செய்கையாகச் செய்துகொண்டு புலத்தலும் அதுநீட்டித்து ஊடலும் உடன் நிகழ்த்தியவழியும் ; சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய -சொல்லத் தகும் பணிமொழி தோழிக்கு உரிய (எ - று).
எனவே தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி தானே கூறப்பெறாளென்றவாறு. எனவே பாடாண்டிணைக் கைக்கிளையாயின் தலைவி கூறவும்பெறுமென்று கொள்க. உம்மை சிறப்பும்மை.
“தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவன் நரிதின்று பரிக்கும் ஊர யாவதும் அன்புமுதல் உறுத்த காதல் இன்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே”
“அலந்தாரை” (குறள். 1303)
என வரும்.
இவை கற்பில் தலைவி குறிப்பினால் தோழி கூற்று வந்தன.
“புலந்தாயு நீயாயிற் பொய்யானே வெல்குவை” (கலி. 46)
என்று களவில் தோழி கூறினாள் தலைவி குறிப்பினால்.
“கனைபெயல் நடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅன் புனையிழாய் என்பழி நினக்குரைக்குந் தானென்ப துளிநசைஇ வேட்கையான் மிசைபாடும் புள்ளில்தன் அளிநசை ஆர்வுற்ற அன்பினேன் யானாக” (கலி. 46)
எனத் தோழி சொல்லெடுப்பதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலும் ஈண்டு உரியவென்பதனாற் கொள்க.
“யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான்—தேனூறுங் கொய்தார் வழுதிக் குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு.” (முத்தொள்ளாயிரம், 104)
இதனுள் யானுணர்த்தத் தானுணரானெனப் பாடாண்டிணைக் கைக்கிளையுள் தலைவி கூறியது காண்க.