தொல்காப்பியம் 1100 · பொருள் 4.15

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தலைவியின் ஊடல் தலைவன் தெளிவிக்கும் எல்லையைக் கடந்து நீண்டாலும், களவில் தலைவி செய்த குறி தவறினாலும், புலத்தலும் ஊடலும் தலைவனுக்கும் உரியவை.

இளம்பூரணர்

புலவி சிறிது நேரம் நிற்கும் பிணக்கு, ஊடல் அதனினும் மிக்கது என்று கூறுவார்.

நச்சினார்க்கினியர்

முதலாவது கற்பில் நிகழ்வது, குறி பிழைத்தல் களவில் நிகழ்வது எனப் பிரித்து, இவை பெரும்பாலும் கற்பில் நிகழ்வதால் இங்கே வைத்தார் என்பார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If the limit of persuading is passed, if the appointed signal is missed,
  2. pulattal and ūṭal belong to the hero too.

What the poem says

Sulking is usually the woman's part, but this rule gives it to the hero as well, in two situations: when the heroine's ūṭal goes beyond the point where his persuading can end it, and when the tryst signal that she set is missed, by her failing to come.

Iḷampūraṇar distinguishes the terms: pulavi (pulattal) is a brief estrangement, ūṭal is a stronger one, and the rule is otherwise plain; his example is Kuṟuntokai 19. Nacciṉārkkiṉiyar takes the first case as belonging to kaṟpu and the missed signal to kaḷavu: pulattal is a slight change of heart, ūṭal when it grows and lasts. Since both occur mostly in kaṟpu the rule is placed here, though kaḷavu also has them in a smaller measure; he cites Kalittokai 81 and 46.

உரை · Commentary

இளம்பூரணர்

என்-எனின். தலைமகன் புலக்குமிடம் கூறுதல் நுதலிற்று.

(இ·ள்.) புலவி அண்மைக் காலத்தது; ஊடல் அதனின் மிக்கது. பொருள் சூத்திரத்தான் விளங்கும்.

“எவ்வி இழந்த வறுமையர் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே” (குறுந். ௧௯)

எனவரும்.

நச்சினார்க்கினியர்

இது, தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது.

(இ - ள்.) உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகந்தனவாயினும்; செய்குறி பிழைப்பினும் - களவின்கட் டலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்; புலத்தலும் ஊடலுங் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ் வேறுபாடு மிக்கு நீடுநின்று தேற்றியக்கால் அது நீங்குதலுந் தலைவற்குரிய (எ - று).

எனவே, கற்பிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய, களவிற்கும் புலத்தலும் ஊடலுமுரிய வென்றார். புலவியும் ஊடலுங் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை உரியவென்கின்றார், அவை களவிற்குஞ் சிறுபான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோக்கி.

“எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்.” (குறுந். 19)

இது கற்பிற் புலந்தது.

“தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தரவு இல்லாயின்” (கலி. 81)

என்பது ஊடல். பிற இடத்தும் ஊடுதல் அறிந்துகொள்க.

“கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின் புலந்தாயும் நீயாயிற் பொய்யானே வெல்குவை” (கலி. 46)

என்பது குறிபிழைத்துழிப் புலந்தது.

“குணகடற் றிரையது பறைதபு நாரை” (குறுந். 128)

என்பதனுள் நாரை தெய்வங் காக்கும் அயிரை இரையை வேட்டாற்போல் நமக்கரியளாயினாளை நீ வேட்டா யென்பதனாற் குறிபிழைத்துழி ஊடினமை கூறிற்று, பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து கொள்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇarppu varai iṟappiṉum cey kuṟi piḻaippiṉum
pulattalum ūṭalum kiḻavōṟku uriya.