தொல்காப்பியம் 1099 · பொருள் 4.14

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தலைவனும் தலைவியும் அறிவர் வகுத்த எல்லைக்குள் அவர் சொல்வழி நிற்பவர் ஆதலால், அவர்களிடம் குற்றம் கண்டபோது இடித்துரைத்து வாழ்க்கை எல்லைக்குள் நிறுத்துதலும் அறிவர்க்கு உரியது.

இளம்பூரணர்

தலைவனுக்குக் கூறியதற்குக் குறுந்தொகைப் பாடலையும், தலைவிக்குக் கூறியதற்கு அகநானூற்றுப் பாடலையும் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

ஊடல் தணியாத தலைவனையும் தலைவியையும் இருவரையும் அறிவர் கழறுவர் என்று விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rebuking and holding within bounds is also theirs,
  2. since the hero and the heroine stand within their bounds.

What the poem says

The wise (aṟivar) may also rebuke the couple and hold them within proper limits, because both hero and heroine live under their guidance. When they see a fault in either, they reprove it and set the bounds of household life.

Iḷampūraṇar's examples are Kuṟuntokai 295, addressed to the hero, and an Akanāṉūṟu poem addressed to the heroine. Nacciṉārkkiṉiyar says this is a special rule for the wise: they chide both the husband whose sulk does not yield to persuasion and the wife whose sulk does not yield, and he cites the Kuṟaḷ that household life without a wife's worth is nothing.

உரை · Commentary

இளம்பூரணர்

என் - எனின். அறிவர்க்குரியதோர் மரபு உணர்த்திற்று.

(இ - ள்.) கழறிய எல்லையின்கண்ணே நிறுத்தலும் அறிவர்க்குரிய ; தலைவனும் தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின் என்றவாறு.

“உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்” (குறுந். ௨௯௫)

இது தலைமகற்குக் கூறியது.

“துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை” (அகம். ௩௧௯)

இது தலைவிக் குரைத்தது.

நச்சினார்க்கினியர்

இஃது அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ·ள்.) கிழவனுங் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்—தலைவனுந் தலைவியும் அவ்வறிவரது ஏவலைச்செய்து நிற்பராதலின் ; இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் - அவரைக் கழறி ஓரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் (எ - று.)

அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையுங் கழறுப.

“உடுத்துந் தொடுத்தும்” (குறுந். 295)

இது, தலைவனைக் கழறியது.

“மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில்.” (குறள். 52)

இது, தலைவியைக் கழறியது.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭittu varai niṟuttalum avaratu ākum
kiḻavaṉum kiḻattiyum avar varai niṟṟaliṉ.