தொல்காப்பியம் 1098 · பொருள் 4.13
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
முன் நூற்பாவில் செவிலிக்கு உரியதாகச் சொன்ன நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் ஆகிய கூற்றுகள் அறிவர்க்கும் உரியவை.
இளம்பூரணர்
அறிவர் என்போர் முக்காலத் தன்மைகளையும் உணர்ந்து நல்வழி காட்டும் சான்றோர் என்று கொள்வார்.
நச்சினார்க்கினியர்
இவரும் இவ்வாறே கொள்வார்; அறிவர் முன்னோர் பாடிய அறம் பொருள் இன்பம் பற்றிய செய்யுள்களை எடுத்துக் கூறுவர் என்றும், அவை புறப்புறப் பொருள் என்றும் சேர்த்துக் கூறுவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The utterances just stated belong also to the wise.
What the poem says
The speech assigned to the foster-mother in the previous rule, telling of good things and forbidding bad, is also proper to the aṟivar, "the wise ones", the elders and learned men who know the ways of the three times and guide the household.
Iḷampūraṇar says simply that the utterances of the previous nūṟpā also belong to the wise; Nacciṉārkkiṉiyar agrees, and adds that what they speak are the teachings of earlier poets on virtue, wealth and pleasure, citing Kuṟaḷ verses such as the one on the wife at whose word "the rain falls", and that these count as puṟappuṟam, matters lying outside akam proper.
உரை · Commentary
இளம்பூரணர்
என் - எனின்- அறிவர் கூற்று நிகழுமாறுணர்த்திற்று,
(இ-ள்·) மேற் செவிலிக்குரித்தாகச் சொல்லப்பட்ட கிளவி அறிவர்க்கும் உரிய என்றவாறு.
உதாரணம் மேற்காட்டப்பட்டன.
நச்சினார்க்கினியர்
இஃது அறிவரது கூற்றுக் கூறுகின்றது.
(இ - ள்.) முற்கூறிய நல்லவை யுணர்த்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்கு முரிய (எ—று.)
என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம் பொருளின்பங்களாற் கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம்.
“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை” (குறள். 55)
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள். 56)
“மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.” (குறள். 51)
இவை நல்லவை யுணர்த்தல்.
“எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி—அட்டதனை உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை” (நாலடி.363)
‘தலைமகனின் தீர்ந்தொழுகல் தான்பிறரில் சேறல் நிலைமையில் தீப்பெண்டிர்ச் சார்தல்—கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல் கோற்றொடியார் கோளழியு மாறு.” (அறநெறி. 94)
இவை அல்லவை கடிதல், இவை அறிவர் கூற்றாதலின் புறப்புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க.