தொல்காப்பியம் 1097 · பொருள் 4.12

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 3

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்றிலும் குடும்பம் நல்வழியில் செல்லுமாறு, நல்லவற்றை எடுத்துரைத்தலும் தீயவற்றைக் கடிந்து விலக்குதலும் செவிலித்தாய்க்கு உரியவை என்று கூறுவர்.

இளம்பூரணர்

"முன்பு இவ்வாறு செய்தோர் நன்மை பெற்றனர், தீமை பெற்றனர்; இப்போது இன்னார் இவ்வாறு செய்து பயன் பெறவில்லை; இவ்வாறு செய்தால் பின்னர் இது விளையும்" என மூன்று காலத்தாலும் கூறுதல் என விளக்குவார்.

நச்சினார்க்கினியர்

இவரும் கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும் தீயவற்றை விலக்குதலும் என்றே கொள்வார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In past, present and future, so that the way may be followed,
  2. speaking of good things and forbidding the bad
  3. belongs to the foster-mother, they say.

What the poem says

In wedded life the cevili, the foster-mother, instructs: she tells of good things and forbids bad ones, drawing on past, present and future, so that the household may follow the right path.

Iḷampūraṇar explains the three times: she says that those before did thus and prospered, or did thus and suffered; that such a one now does so and gains nothing; and that whoever does so will later reap good or ill. His examples include a verse of Aṟaneṟiccāram listing what ruins a wife's good name, such as wandering away from her husband or going to festivals. Nacciṉārkkiṉiyar reads it in the same way: in all three times, as befits each family, she teaches kaṟpu and the other virtues and forbids what harms them; he cites Nālaṭiyār on the ideal wife.

உரை · Commentary

இளம்பூரணர்

என்—எனின். செவிலிக்குரிய கூற்று வருமாறுணர்த்திற்று.

(இ - ள்.) இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர் காலத்தினும் தன்குலத்தினுள்ளார் வழிகொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக்கு உரித்து என்றவாறு.

இறந்தகால முதலியவற்றாற் கூறுதலாவது முன்புள்ளார் இவ்வாறு செய்து நன்மை பெற்றார் இவ்வாறு செய்து தீமைபெற்றார் எனவும், இப்பொழுது இன்னோர் இவ்வாறு செய்து பயன்பெறா நின்றாரெனவும், இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவுங் கூறுதல்.

அவை, அறனும் பொருளும் இன்பமும் பற்றி நிகழும் : அவையாவன, தலைமகன்மாட்டும் உலகத்தார்மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல்.

அவை, மனையாளைப் பற்றி வருதலிற் காம தந்திரத்துட் பாரியாதிகாரமெனக் கூறப்பட்டன. அறம்பற்றி வருதல் திருவள்ளுவப்பயன் முதலிய சான்றோர் செய்யுட்களுள் அறப்பகுதியிற் கூறப்பட்டன.

உ-ம் வருமாறு :

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள் ௫௯)

எனவும்,

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை” (குறள். 55)

எனவும்,

“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.” (குறள். 51)

எனவும்,

“கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள்—உட்கி இடனறிந் தூடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்.” (நாலடி 384)

இதனுள், “கட்கினியாள்” என்றதனான் கோலஞ்செய்தல் வேண்டுமெனக் கூறியவாறாம்; எனவும்

“அடிசிற் கினியாளை அன்புடை யாளைப் படிசொற் பழிநாணு வாளை—அடிவருடிப் பின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால் என்துஞ்சுங் கண்கள் எனக்கு”

எனவும் வரும். இவை நல்லவை யுரைத்தல்.

“எறியென் றெதிர் நிற்பாள் கூற்றம் சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி—அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை” (நாலடி. ௩௬௩)

எனவும்,

“தலைமகனிற் றீர்ந்தொழுகல் தான்பிறர்இல் சேறல் நிலைமையில்தீப் பெண்டிரிற் சார்தல்—கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல் கோற்றொடியார் கோள்அழியும் ஆறு” (அறநெறிச்.94)

எனவும் வரும். இந்நிகரன அல்லவை கடிதலாம்.

பிறவும் அன்ன.

நச்சினார்க்கினியர்

இது, செவிலிகூற்று உணர்த்துகின்றது.

(இ-ள்.) கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள — மூன்று காலத்துந் தத்தங் குலத்திற்கு ஏற்கும்படியாக; நல்லவை உரைத்தலும் - முற்கூறிய கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும்; அல்லவை கடிதலும் - காமநுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும்; செவிலிக்கு உரிய ஆகும் என்ப - செவிலித்தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர் (எ - று)

“கட்கினியாள் …………பெண்.” (நாலடி. 384)

கட்கினியாள், இது காமம்; வகைபுனைவாள், இது கற்பு; உட்குடையாள், இஃது ஒழுக்கம்; ஊராண்மை, இது சுற்றமோம்பல்; ஊடியுணர்தல், அல்லவை கடிதல்.

“நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறும் மேலுறை சோரினும்—மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே யில்” (நாலடி 383)

என்னும் வெண்பா விருந்துபுறந்தருதல் கூறியதுமாம்.

இனி ‘ஆகு’ மென்றதனானே செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவுங் கொள்க.

‘கானங்தோழி’ (குறுந்தொகை 242), ‘மறியிடைப்படுத்த’ (ஐங்குறு 401), ‘வாணுதலரிவை’ (ஐங்குறு 404) இவை உவந்து கூறியன.

“பிரசங்கலந்த” (நற்றிணை. 110)

இது மனையறங் கண்டு மருண்டு உவந்து கூறியது. ‘அடிசிற்கினியாளை’ என்னும் பாட்டுச் செவிலிகூற்றன்றாயினுந் தலைவன் மனையறங் கண்டு கூறியதன் பாற்படுமெனக் கொள்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḻiviṉum nikaḻviṉum etirviṉum vaḻi koḷa
nallavai uraittalum allavai kaṭitalum
cevilikku uriya ākum eṉpa.