தொல்காப்பியம் 1096 · பொருள் 4.11
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
கற்பு, காதல், நல்ல ஒழுக்கம், மென்மையான பொறுமை, நிறை (மறையைக் காக்கும் உள்ளம்), திறமையோடு விருந்தினரைப் பேணுதல், சுற்றத்தாரைப் போற்றுதல் ஆகியவையும் இவை போன்ற பிறவுமான தலைவியின் சிறப்புகளை, தலைவன் முகம் மலர்ந்து ஏற்கும் முறையில் அவனுக்கு எடுத்துரைத்தல், மனையின் உள்ளே புகும் மரபுடைய வாயில்களுக்கு உரியது.
இளம்பூரணர்
இவ்வாயில்களைப் பாணர், கூத்தர் முதலாக எப்போதும் மனையில் பழகுவோர் என்பார்.
நச்சினார்க்கினியர்
இவ்வாயில்கள் விருந்து முதலிய வாயில்களைப் போல் எப்போதாவது வருபவர் அல்லர், அடிக்கடி அகத்துள் புகுபவர் என வேறுபடுத்திக் காட்டுவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Chastity and love and good conduct,
- gentle patience and restraint, and, with skill,
- tending guests and caring for kin,
- and other such excellences of the heroine,
- telling them to the hero in a way that wins his face
- belongs to the go-betweens of the tradition that enters the inner house.
What the poem says
The go-betweens who have free access to the inner house (akam pukal marapiṉ vāyil) may speak to the hero of his wife's virtues: her kaṟpu, love, good conduct, gentle patience, niṟai "restraint, keeping secrets", her skill in tending guests and her care for kin. They say this in a manner that wins his favour (mukam pukal), so that he receives it gladly.
Iḷampūraṇar takes these go-betweens as the bards and others who are always about the house, and notes that they may also speak among themselves, citing a rule of Ceyyuḷiyal. Nacciṉārkkiṉiyar distinguishes them from go-betweens such as guests, who only sometimes enter; he glosses kaṟpu as conduct that does not swerve from what her husband and elders taught her, and niṟai as a heart that keeps secrets from being known.
உரை · Commentary
இளம்பூரணர்
என்—எனின், அகம்புகல் மரபினவாய வாயில்கள் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று.
(இ-ள்.) கற்பு முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவுமாகிக் கிழவோள்மாட் டுளதாகிய தன்மைகளை முகம்புகு தன்மையானே தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின் வாயில்கட்குரிய என்றவாறு.
செய்யுளியலுள் “வாயி லுசாவே தம்மு ளுரிய” (சூ. ௧௯௧) என்பதனால், தலைமகற் குரைத்தலே யன்றித் தம்முள்தாம் கூறுதலும் உரியரென்று கொள்க.
“மதவலியானை………திருநுதற் பசப்பே” (அகம். ௩௫௪) எனவும்,
“கண்டிசின்…………புறங்கவ வினளே” (குறுந். ௩௫௯) எனவும்,
“யாயாகியளே…………கரப்பா டும்மே” (குறுந். ௯) எனவும்,
“முளிதயிர்…………முகனே” (குறுந். ௧௬௭) எனவும்,
“கானக்கோழி…………செம்மல் தேரே” (குறுந். ௨௪௨) எனவும்,
“பிரசங்கலந்த……சிறுமது கையளே” (நற்றிணை ௧௧௦) எனவும்,
“பாணர்முல்லை …..புதல்வனோடு பொலிந்தே” (ஐங்குறு. ௪௭௮)
எனவும் வரும்.
இவையெல்லாம் வாயில்கள் தம்முட் கூறின தலைவற்குக் கூறின வந்தவழிக் காண்க.
நச்சினார்க்கினியர்
இது, விருந்து முதலிய வாயில்கள் போலாது அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது.
(இ—ள்.) கற்பும்—கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கமும்; காமமும்-அன்பும்; நற்பால் ஒழுக்கமும்-எவ்வாற்றானுந் தங் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமும்; மெல் இயற் பொறையும்-வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் அவனைப்போலாது ஒருதலையாக மெல்லென்ற நெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறையும்; நிறையும்-மறை புலப்படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும்; வல்லிதின் விருந்து புறந்தருதலும்-வறுமையுஞ் செல்வமுங் குறியாது வல்லவாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ்வித்தலும்; சுற்றம் ஓம்பலும்-கொண்டோன் புரக்கும் நண்புடை மாந்தருஞ் சுற்றத்தாருங் குஞ்சர முதலிய காலேசங்களும் பல படை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்டலும்; அன்னபிறவுங் கிழவோள் மாண்புகள்-அவைபோல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமைகளை; முகம்புகல் முறைமையிற் கிழவோற்கு உரைத்தல்-அவன் முகம்புகுதும் முறைமை காரணத்தால் தலைவற்குக் கூறுதல்; அகம்புகல் மரபின் வாயில்கட்குஉரிய அகநகர்க்கட் புகுந்து பழகி அறிதன் முறைமையினையுடைய வாயில்களுக்குரிய, என்றவாறு.
அன்னபிறவான, அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக் கேற்ற வகையான் தலைமகள் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ்வுறுத்தலுங், காமக்கிழத்தியர் நண்புசெய்து நன்கு மதிக்கப்படுதலும், போல்வன. புகலுதல் - மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு முகம்புகல் முறைமையின்மையின்.
“கடல்பா டவிந்து தோணி நீங்கி” (அகம் ௫௰)
இதனுட் காமமிகுதியாற் கண் தாமே அழவுங் கற்பிற் கரக்குமெனத் தலைவி பொறையும் நிறையுந் தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவனெனக் கருதி. ‘இனி’ என்றதனாற் கற்பும் பெற்றாம்.
தலைவற்குக் கூறுவன வந்துழிக் காண்க.
‘வாயி லுசாவே தம்முளு முரிய’ (தொல். பொ. 512) என்பதனால் தலைவற்கு உரையாமல் தம்முட் டாமே உசாவுவனவும் ஈண்டே கொள்க.
“அணிநிற வெருமை யாடிய அள்ளல் மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வூரன் பாயலின் றுணையே.” (ஐங்குறு. 96)
இது, கற்புக் கூறியது.
“முளிதயிர் பிசைந்த” (குறுந். 167) என்பது அடிசிற்றொழிலின்கண் மகிழ்ச்சி வாயில்கள் தம்முட் கூறியது.
“கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ பழமை பயனோக்கிக் கொல்லோ—கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்றாருட் கேளா அடி நாயேன் பெற்ற வருள்.” (திணை, நூற். 134)
பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந்தமை தோழிக்கு விறலி கூறியது.