தொல்காப்பியம் 1105 · பொருள் 4.20

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

அருளை முன்னிறுத்தி, அன்பை உள்ளடக்கிய சொற்களைப் பொருள்படப் பேசுதல் தலைவிக்கும் உரியது.

இளம்பூரணர்

"பொருள்பட மொழிதல்" என்பதைப் பொய் கூறாது மெய்யே கூறுதல் என்பார்.

நச்சினார்க்கினியர்

தலைவன் பணிந்து பேசியதுபோலத் தலைவியும் பணிந்து பேசுவாள்; ஆனால் தன் அன்பை மறைத்து, "என் நெஞ்சு என்னை மீறி உன் ஏவலைச் செய்தது" என்பதுபோல வேறு பொருள்படக் கூறுவாள் என்று விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Words wrapped in love, with grace set in front,
  2. speaking them with meaning belongs to the heroine as well.

What the poem says

After the hero's submissive words (tol.1104), this rule allows the heroine too a kind of speech: kiḷavi "words" that hold love within (aṉpu poti) and put aruḷ, "grace, compassion", in front, spoken poruḷ paṭa, "with meaning".

Iḷampūraṇar glosses "with meaning" simply as speaking truth, not falsehood. Nacciṉārkkiṉiyar reads it more subtly: as the hero has spoken humbly, the heroine also speaks humbly, but hides her own love under another sense, saying for instance that her heart, beyond her control, did his bidding (Kalittokai 77). Iḷampūraṇar's text reads kiḻavōṭku urittē, without "as well"; Nacciṉārkkiṉiyar's gloss has kiḻavōṭkum, as our text does.

உரை · Commentary

இளம்பூரணர்

இது, தலைமகட்குரியதோர் இயல்புணர்த்திற்று.

(இ-ள்) பொருள்பட மொழிதலாவது பொய்யாக் கூறாது மெய்யே கூறல்.

உதாரணம் வந்த வழிக் காண்க.

நச்சினார்க்கினியர்

இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறுமென்கின்றது.

(இ—ள்.) அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி பிறர் அவலங் கண்டு அவலிக்கும் அருள் முன் தோற்றுவித்த அவ்வருள் பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பினைக் கரந்து சொல்லுங் கிளவி; பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே - பணிந்தமொழி தோற்றாது வேறோர் பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து (எ - று )

வேறு பொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கைகடந்து அவன் ஏவலைச் செய்ததென்றாற் போலக் கூறுதலுமாம்.

இது ‘தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்’ (தொல். பொ 11) எனப் பொருளியலுள் வழுவமைத்தற்கு இலக்கணம்.

“இணையிரண்டு” என்னும் மருதக்கலியுள்,

“மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல் வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல் வேண்டேன்மன் நோய் சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின்” (கலி. 77)

எனக் கூறிய தலைவி,

“கடைஇய நின்மார்பு தோயலம் என்னும் இடையு நிறையும் எளிதோநிற் காணின் கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ டுடன்வாழ் பகையுடை யார்க்கு” (கலி. 77)

என்புழி நிற்காணிற் கடவுபு கைத்தங்கா நெஞ்செனவே அவன் ஆற்றாமை கண்டருளி நெஞ்சு ஏவல்செய்ததென வேறோர் பொருள் பயப்பக் கூறித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க.

“கூர்முண் முள்ளி” (அகம். 26) என்பதனுட் “சிறுபுறங் கவையினன்” என அவன் வருந்தியது ஏதுவாகத் தான் மண்போன் ஞெகிழ்ந்தேனென அருண் முந்துறுத்தவாறும், இவை பாராட்டிய பருவமும் உளவென அன்புபொதிந்து கூறியவாறும், ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் நெஞ்சறைபோகிய அறிவினேற்கெனத் தன் அறிவினை வேறாக்கி அதன்மேலிட்டுக் கூறியவாறுங் காண்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruḷ muntuṟutta aṉpu poti kiḷavi
poruḷ paṭa moḻital kiḻavōṭkum urittē.