தொல்காப்பியம் 1113 · பொருள் 4.28
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தலைவன் இருக்கும் நாட்டுக்குச் சென்று அவனிடம் கூறுதலும், தலைவியின் நிலையை அவனுக்கு உரைத்தலும் கூத்தருக்கும் பாணருக்கும் பொருந்திய கூற்றுகள்.
இளம்பூரணர்
"அவள் நிலை உரைத்தல்" எனப் பிரித்து, பாசறையில் இருக்கும் தலைவனுக்குத் தலைவியின் வருத்தத்தைக் கூறுதல் என்பார்.
நச்சினார்க்கினியர்
"அவண் நிலை", "நிலம் பெயர்ந்து உறைதல்" எனப் பாடம் கொண்டு, தொலைவில் தங்கிய தலைவன் மீளும் நிலையைத் தலைவிக்குக் கூறுதல் என விளக்குவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Speaking after going to another land, speaking of her state:
- these framed ones belong to both the dancers and the bards.
What the poem says
Two utterances shared by the kūttar, dancers, and the pāṇar, bards. Iḷampūraṇar reads them as nilam peyarntu uraittal, going to the land where the hero is and telling him, and aval nilai uraittal, telling him the state of the heroine; his example is a Kalittokai pālai poem in which her grief is described to the hero in his camp.
Nacciṉārkkiṉiyar reads the second as avaṇ nilai uraittal and the first as nilam peyarntu uṟaital: he explains them as telling the heroine of the hero who stays in a distant land and of his return, and as words of the bards and dancers, who unlike the friend cannot dissuade the hero from leaving, but praise the god and show the heroine's grief. His example is Akanāṉūṟu 14, where the bard tells her he has seen the hero returning. The readings differ in wording; we follow Iḷampūraṇar.
உரை · Commentary
இளம்பூரணர்
இது, மேற்கூறப்பட்ட கூத்தர்க்குஞ் சொல்லாத பாணர்க்கும் உரிய கிளவி உணர்த்திற்று.
(இ-ள்.) நிலம் பெயர்ந்துரைத்தல் என்பது—தலைவன் பிரிந்தவிடத்துச் சென்று கூறுதல்.
அவள்நிலை யுரைத்தல் என்பது—அவள் நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல்.
“அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோல்” என்னும் பாலைக் கலியுள்,
“தணியாநோய் உகந்தானாத் தகையவள் தகைபெற அணிகிளர் நெடுந்திண்டேர் அயர்மதி பணிபுநின் காமர் கழலடி சேரா நாமஞ்சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே” (கலித். ௩௰)
எனப் பாசறைக்கண் தலைவற்குத் தலைவி வருத்தங் கூறியவாறு காண்க.
நச்சினார்க்கினியர்
இஃது, அதிகாரப்பட்ட கூத்தரோடு பாணர்க்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ—ள்) நிலம் பெயர்ந்து உறைதல் வரைநிலை உரைத்தல்—தலைவன் சேட்புலத்துப் பிரிந்துறைதலைத் தலைவிக்காக வரைந்து மீளும் நிலைமை கூறுதல்; கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய — கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்பமைந்தன உரிய (எ—று).
யாப்பமைதலாவது, தோழியைப் போலச் செலவழுங்குவித்தல் முதலியன பெறாராகலின், யாழெழீஇக் கடவுள் வாழ்த்தி அவளது ஆற்றாமை தோன்றும் வகையான் எண்வகைக் குறிப்பும்பட நன்னயப்படுத்துத் தலைவற்குக் காட்டல் போல்வன.
“அரக்கத் தன்ன செந்நிலப் ...... முனைநல் லூரன் புனை நெடுந்தேரே.” (அகம் - 14)
இதனுள், தலைவி யிரக்கந்தோன்றக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர் மீள நினையாநின்றேனாக அவர் மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க.
கூத்தர் கூற்று வந்துழிக் காண்க.