தொல்காப்பியம் 1114 · பொருள் 4.29

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 5

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
5

பொருள் · Meaning in TamilAI

வழியின் தன்மை, மேற்கொண்ட வினையின் விளைவு, ஏவிய பணியை முடித்தமை, வினாவுதலும் மறுமொழியும், வழியில் கண்ட பொருள்கள், அந்நிலத்துக் கருப்பொருளாகிய விலங்கு பறவைகள், இவை போன்று தோன்றும் பிறவும் இளையோர்க்கு உரிய கூற்றுகள் என்று கூறுவர்.

இளம்பூரணர்

நூற்பாவாலேயே பொருள் விளங்கும் என்பார்.

நச்சினார்க்கினியர்

வழியின் தன்மை, கண்ட பொருள், கருப்பொருள் ஆகியவை உடன்போக்கிலும் கற்பில் பிரிவிலும் வருவன என்பதால் இது இரண்டுக்கும் பொதுவிதி என்று கூறுவார்.

இளையோர் என்போர் தலைவனுக்கு ஏவல் செய்யும் இளைய பணியாளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The nature of the path and the outcome of the task,
  2. the completion of the errand, question and answer,
  3. the things seen on the way and the creatures of the land,
  4. and other such things fit to appear:
  5. these, they say, are the utterances of the young attendants.

What the poem says

The iḷaiyōr are the young attendants or servants who accompany the hero. Their utterances concern the nature of the path (its heat, coolness, ease or difficulty), the result of the work undertaken, the completion of an errand, asking what they should do and answering, the things they saw on the way, and iṟaicci, the beasts and birds of the region.

Iḷampūraṇar says the meaning is plain from the sūtra and cites Akanāṉūṟu 324. Nacciṉārkkiṉiyar elaborates: the attendants, who go ahead when the hero travels, report the state of the path, say what will bring the task to success, report errands done, answer questions, tell hero and heroine of omens seen on the road, and point out pairs of animals at play. He notes that the nature of the path, the things seen and iṟaicci apply both to elopement and to the separations of kaṟpu. Another reading has viṉaiyum in line 1 where our text has viḷaivum, "outcome"; viḷaivum gives the better sense.

உரை · Commentary

இளம்பூரணர்

இஃது இளையோர்க்குரிய கிளவியாமாறுணர்த்திற்று.

சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

“விருந்தும் பெறுகுநள் ....ஆய்ந்தே” [அகம். ௩௨௪)

எனவரும். பிறவுமன்ன.

நச்சினார்க்கினியர்

இஃது உழைக்குறுந்தொழிற்குங் காப்பிற்கும் (தொல். பொ, 171) உரியாராகிய இளையோர்க்குரிய இலக்கணங் கூறுகின்றது.

(இ—ள்.) ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனாயினுந் தானே யாயினும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாலராகிய இளையோர் தண்ணிது வெய்து சேய்த்து அணித்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும்; கருமத்து விளைவும் - ஒன்றாகச் சென்றுவந்து செய்பொருண் முடிக்குமாறு அறிந்து கூறுதலும்: ஏவல் முடிவும் - இன்னுழி இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்துவந்தமை கூறலும்; வினாவும் - தலைவன் ஏவலைத் தாங் கேட்டலும்; செப்பும்—தலைவன் வினாவாத வழியும் தலைவிக்காகவாயினுஞ் செப்பத் தகுவன தலைவற்கு அறுவுகூறுதலும்; ஆற்றிடைக் கண்ட பொருளும் - செல்சுரத்துக் கண்ட நிமித்தம் முதலிய பொருள்களைத் தலைவர்க்குந் தலைவிக்கும் உறுதிபயக்குமாறு கூறலும்: இறைச்சியும் - ஆண்டுமாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவனவற்றை அவ்விருவர்க்குமாயினுந் தலைவற்கேயாயினுங் காட்டியும் ஊறுசெய்யுங் கோண்மாக்களை அகற்றியுங் கூறுவனவும்: தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் - அங்ஙனம் அவற்குத் தோற்றுவித்தற்கமைந்த அவைபோல்வன பிற கூற்றுக்களும்; இளையோர்க்கு உரிய கிளவி என்ப - இளையோர்க்கு உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர் (எ - று).

தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிறபொருளுணர்ந்து வந்துரைப்பனவும் ஒற்றர்கண் அடங்கும் ஏவன் முடிவிற்கும் இஃதொக்கும். ‘சான்ற’ வென்றதனான் ஆற்றது பண்பு கூறுங்கால் இதுபொழுது இவ்வழிச்சேறல் அமையாதென விலக்கலுங் கருமங்கூறுங்காற் சந்துசெய்தல் அமையுமெனக் கூறுதலும் போல்வன அமையவாம், அவர் அவை கூறப்பெறாராகலின். பிறவாவன, தலைவன் வருவனெனத் தலைவிமாட்டுத் தூதாய்வருதலும், அறிந்து சென்ற தலைவற்குத் தலைவி நிலை கூறுதலும், மீளுங்கால் விருந்து பெறுகுவள் கொல்லெனத் தலைவி நிலையுரைத்தலும் போல்வன. இலக்கியம் வந்துழிக் காண்க.

“விருந்தும் பெறுநர் .... முல்லை மாலை நகர்புக றந்தே” (அகம் 324)

அவர்கள் தங்களுக்கு வளராப்பிள்ளை யென்றலுமாம். இது பெறுவளென்றது.

ஆற்றது பண்பும், ஆற்றிடைக்கண்ட பொருளும் இறைச்சியும் உடன்போக்கிலுங் கற்பிலுங் கூறுவனவாதலின் இச்சூத்திரங் கைகோள் இரண்டற்கும் பொதுவிதி.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟṟatu paṇpum karumattu viḷaivum
ēval muṭivum viṉāvum ceppum
āṟṟiṭaik kaṇṭa poruḷum iṟaicciyum
tōṟṟam cāṉṟa aṉṉavai piṟavum
5iḷaiyōrkku uriya kiḷavi eṉpa.