தொல்காப்பியம் 1121 · பொருள் 4.36

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 5

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
5

பொருள் · Meaning in TamilAI

காதல் நிலையை எடுத்துக் கூறுதல், ஆராய்ந்து கூறுதல், தலைவன் உள்ளக் குறிப்பைத் தலைவிக்கு விளங்கச் சொல்லுதல், பசுவோடு தொடர்புடைய நிமித்தங்களைக் கூறுதல், செல்லுதற்குரிய சொல்லும் செலவைத் தடுக்கும் சொல்லும், இவை போன்ற பிறவும் பார்ப்பானுக்கு உரியவை.

இளம்பூரணர்

"நீ பிரிந்தால் இவள் காமம் மிகும்" எனக் கூறுதல் காம நிலை உரைத்தல் எனக் கொள்வார்; இவை தோழிக்கும் பாங்கனுக்கும் பொருந்தும் என்பார்.

நச்சினார்க்கினியர்

காம மிகுதியை இழித்துக் கூறுதல் எனவும், பசு பால் கறத்தல், பால் நிறைதல் போன்ற நிமித்தங்களைக் கொண்டு நன்மை தீமை கூறுதல் எனவும் விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Speaking of the state of love, speaking after weighing,
  2. bringing out and telling the hero's intention,
  3. telling the omens that came with the cows,
  4. words for setting out and words to hold back the setting out,
  5. and others like them belong to the brahmin.

What the poem says

The pārppāṉ, the brahmin companion of the hero, has his own utterances. Iḷampūraṇar explains them: speaking of the state of love, telling the hero "if you leave, her love will grow"; tērnilai uraittal, speaking after weighing the matter; making the hero's intention clear to the heroine; reading omens, including those connected with cows; saying that the hero has gone; and urging him to put off his departure. By the rule that what is said of one party applies to others, he extends these to the friend and the companion too.

Nacciṉārkkiṉiyar reads the third line as eṭuttaṉar moḻital, and takes the first as rebuking the hero's excess of love as unworthy, the second as giving reasons so that he comes to understand, and the omens as whether cows yield milk or the milk-pots are full: good omens for his going, bad omens for staying. He glosses pārppāṉ as antaṇar, a gloss that is open to doubt.

உரை · Commentary

இளம்பூரணர்

இது, பார்ப்பார்க் குரிய கிளவி யுணர்த்திற்று.

(இ—ள்.) காமநிலை யுரைத்தலாவது—நீ பிரியின் இவள் காமமிகும் என்று கூறுதல்.

“அறனின்றி அயல்தூற்றும் அம்பலை” என்பதனுள்,

“உடையிவ ளுயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல இடைகொண்டியாம் இரப்பவும் எமகொள்ளாய் ஆயினை கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன” (கலித். ௩)

எனவரும்.

தேர்நிலை யுரைத்தலாவது—ஆராய்ச்சி நிலையாற் கூறுதல். அது வருமாறு:—

“வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு...... முயன்று செய்பொருளே” (கலி—எ)

கிழவோன் குறிப்பினை யெடுத்துக் கூறலும் என்பது—தலைவன் குறிப்பினைத் தலைவிக்கு விளங்கக் கூறலும் என்றவாறு.

ஆவொடு பட்ட நிமித்தங் கூறுதலும் என்பது—ஆவொடு பட்டநிமித்தங் கூறலும் என்றவாறு. ‘பட்ட நிமித்தம்’ என்றதனால் எல்லா நிமித்தமுங் கொள்க.

செல்வுறு கிளவி என்பது—செலவுற்ற சொல்லும் என்றவாறு. அஃதாவது தலைமகன் போயினான் என்று கூறுதல். இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் காண்க.

செலவழுங்கு கிளவி என்பது—செலவழுங்கல் வேண்டுமெனக் கூறுதல்.

“நடுவிகந்தொரீஇ......அதுமனும் பொருளே” (கலித். ௮)

எனவரும்.

இவை பார்ப்பார்க் குரிய வென்றவாறு. ‘ஒருபாற் கிளவி யேனைப் பாற்கண்ணும்’ (பொருளியல் - ௨௭) வரும் என்பதனால் தோழிமாட்டும் பாங்கன் மாட்டும் கொள்க.

நச்சினார்க்கினியர்

இது, பார்ப்பார்க்குரிய கிளவி கூறுகின்றது.

(இ—ள்.) காமநிலை உரைத்தலும்—தலைவனது காமமிகுதி கண்டு இதன் நிலை இற்றென்று இழித்துக் கூறுவனவும்; தேர்நிலை உரைத்தலும் — அங்ஙனங் கூறி அவன் தேருமாறு ஏதுவும் எடுத்துக் காட்டுங் கூறலும்; கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் - தலைவன் தாழ்ந்தொழுகியவற்றை அவன் குறிப்பான் அறிந்து வெளிப்படுத்தி அவற்கே கூறுதலும்; ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்—வேள்விக்கபிலை பாற்பயங்குன்றுதலானுங், குன்றாது கலநிறையப் பொழிதலானும்; உளதாய நிமித்தம் பற்றித் தலைவற்கு வரும் நன்மை தீமை கூறுதலும்; செலவுறு கிளவியும்—அவன் பிரியுங்கால் நன்னிமித்தம் பற்றிச் செலவு நன்றென்று கூறுதலும்; செலவு அழுங்கு கிளவியும்—தீயநிமித்தம்பற்றிச் செலவைத் தவிர்த்துக் கூறுதலும்; அன்ன பிறவும் - அவை போல்வன பிறவும்; பார்ப்பார்க்கு உரிய—அந்தணர்க்கு உரிய. (எ—று.)

‘தேர்நிலை’ யென்றதனால் தேர்ந்து பின்னுங் கலங்கினுங் கலங்காமல் தெளிவுநிலை காட்டலுங் கொள்க. ‘அன்னபிறவும்’ என்றதனான், அறிவர் இடித்துக் கூறியாங்குத் தாமும் இடித்துக் கூறுவனவும், வாயிலாகச் சென்று கூறுவனவுந் தூதுசென்று கூறுவனவுங் கொள்க. ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல்’ என்பதனாற் களவியலிற் கூறாதனவும் ஈண்டே கூறினார். அஃது இப்பேரறிவு உடையையாயின் இனையையாகற்பாலை யல்லையெனக்காமநிலை யுரைத்தலுங் கற்பினுள் “இல்லிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழே” எனத் தலைவன் நினையுமாற்றாற் காமநிலை யுரைத்தலும் அடங்கிற்று. ஏனையவற்றிற்கும் இருவகைக் கைகோளிற்கும் ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. ‘பார்ப்பான் பாங்கன்’ என உடன் கூறினமையிற் பாங்கற்கும் ஏற்பனவும் கொள்க. இவையெல்லாந் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருஞ் செய்த பாடலுட் பயின்ற போலும். இக்காலத்தில் இலக்கியமின்று பாங்கன் கூறுவன ‘நோய்மருங் கறிநரு’ ளடக்கிக் கொண்டு, எடுத்து மொழியப்படுதலன்றிக் கூற்று அவண் இன்மை உணர்க. அது,

“வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனும் நீட்டித்தா யென்று கடாங்கடுந் திண்டேர் பூட்டு விடாஅ நிறுத்து” (கலி. 66)

எனவும் வரும்.

இன்னும் சான்றோர் கூறிய செய்யுட்களில் இது போல வருவன பிற அனைத்தும் உய்த்துணர்ந்து கொள்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāma nilai uraittalum tēr nilai uraittalum
kiḻavōṉ kuṟippiṉai eṭuttuk kūṟalum
āvoṭu paṭṭa nimittam kūṟalum
celavu uṟu kiḷaviyum celavu aḻuṅku kiḷaviyum
5aṉṉavai piṟavum pārppārkku uriya.