தொல்காப்பியம் 1120 · பொருள் 4.35
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
பாசறையில் புறத்தோருடன் கூடுதல் பொருந்துவது ஆகும்.
இளம்பூரணர்
இது முந்தைய நூற்பாவுக்குப் புறனடை என்று, புறத்தோர் என்பவர் பணிப்பெண்டிரும் கணிகையரும் என விளக்குவார்.
நச்சினார்க்கினியர்
"புறந்தோர் ஆங்கண் புரைவது என்ப" எனப் பாடம் கொண்டு, அகத்திணைத் தலைவர் அல்லாத அடியோர், வினைவலர் ஆகியோரைப் பாசறையில் பெண்ணோடு சேர்த்துப் பாடுதல் பொருந்தும் என்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the outsiders there, union is fitting.
What the poem says
A supplement to the previous rule. In the war camp, union with puṟattōr, "outsiders", is acceptable. Iḷampūraṇar reads puṇarvatu ākum and explains the outsiders as the women outside the household, such as maidservants and courtesans (tātiyar, kaṇikaiyar).
Nacciṉārkkiṉiyar reads puṟantōr āṅkaṇ puraivatu eṉpa and takes puṟantōr as the servants and attendants who belong to akappuṟam, the fringe of love poetry: in the war camp it is fitting for poets to show them with women. Thus he limits the ban of tol.1119 to the heroes of akam proper. Neither reading is fully satisfying; we follow Iḷampūraṇar in the line and note the other reading here.
உரை · Commentary
இளம்பூரணர்
இது மேலதற்குப் புறனடை.
(இ—ள்) மேற் சொல்லப்பட்ட பாசறைக்கட் புறப்பெண்டிர் புணர்ச்சி பொருந்துவது என்றவாறு.
பொருந்துவது என்றதனாற் கூட்டமென்று கொள்க. அவராவார் தாதியருங் கணிகையரும்.
நச்சினார்க்கினியர்
இஃது எய்தியது இகந்து படாமற் காத்தது.
(இ—ள்) புறத்தோர் ஆங்கண் - அடியோரும் வினைவலபாங்கினோருமாகிய அகப்புறத் தலைவருடைய பாசறையிடத்தாயில்; புரைவது என்ப—அவரைப் பெண்ணோடு புணர்த்துப் புலனெறி வழக்கஞ் செய்தல் பொருந்துவது என்று கூறுவர் ஆசிரியர் (எ—று)
இப் பாசறைப்பிரிவை வரையறுப்பவே ஏனைப் பிரிவுகளுக்குப் புணர்த்தலும் புணராமையும் புறத்தோர்க்கு வரைவின்றாயிற்று.