தொல்காப்பியம் 1119 · பொருள் 4.34
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
எண்ணுதற்கு அரிய போர்ப் பாசறையில் தலைவர் தம் மனைவியரோடு கூடார்.
இளம்பூரணர்
பகைவரை வெல்லும் எண்ணம் மேற்கொண்டதால் அங்கே தலைவியரை நினைக்கவும் இயலாது என்றும், "பாசறை" எனச் சிறப்பித்ததால் ஏனைய பிரிவுகளுக்கும் இது பொருந்தும் என்றும் கூறுவார்.
நச்சினார்க்கினியர்
பாசறையில் தலைவனைத் தலைவியோடு சேர்த்துப் புலவர் பாடார் என்னும் புலனெறி வழக்கமாக இதைக் கொண்டு, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு அடிகளைக் காட்டுவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the war camp beyond reckoning, they do not unite with women.
What the poem says
In the pācaṟai, the war camp, heroes do not unite with their women. Iḷampūraṇar takes eṇ arum as "hard to think of": with the aim of defeating the enemy before them, the heroes cannot think of their wives; and because the war camp is named specially, the rule extends to the other separations too.
Nacciṉārkkiṉiyar reads it as a rule of poetic convention: poets do not compose verses showing the hero together with the heroine in the war camp, which is "beyond reckoning" because the fighting goes on night and day. He cites passages of Neṭunalvāṭai and Mullaippāṭṭu showing the king sleepless, planning, his head on his hand. Both agree that the camp, the place of war, excludes love.
உரை · Commentary
இளம்பூரணர்
இது தலைமக்கட் குரியதொரு மரபு உணர்த்திற்று.
(இ—ள்.) நினைந்தற்கரிய பாசறைக்கண் தலைமகளிரோடும் புணரார் தலைமக்கள் என்றவாறு.
நினைத்தற்கருமை - மாற்றாரை வெல்லுங் கருத்து மேற்கோடலிற் றலைமகளிரை நினைக்கலாகாதாயிற்று. ‘பாசறை’ என விசேடித்தவதனால் ஏனைப் பிரிவுக்குமாமென்று கொள்க.
நச்சினார்க்கினியர்
இஃது எய்தியது விலக்கிற்று; ‘முந்நீர் வழக்கம்’ (தொல். அகத். 34) என்பதனாற் பகைதணி வினைக்குங் காவற்குங் கடும்பொடு சேறலாமென்று எய்தியதனை விலக்கலின்.
(இ - ள்.) எண் அரும் பாசறை - போர் செய்து வெல்லுமாற்றை எண்ணும் அரிய பாசறையிடத்து; பெண்ணொடு புணரார் - தலைவியரொடு தலைவனைக்கூட்டிப் புலநெறிவழக்கஞ் செய்யார் (எ - று.)
இரவும் பகலும் போர்த்தொழில் மறாமை தோன்ற அரும் பாசறை யென்றார்.
“நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே” (பத்து. நெடுநல். 185-188)
எனவும்,
“ஒருகை பள்ளி யொற்றி யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிது நினைந்து” (பத்து-முல்லை. 75, 76)
எனவும் வருவனவற்றான் அரிதாக உஞற்றியவாறு காண்க.
இனிக் காவற்பிரிவுக்கு முறைசெய்து காப்பாற்றுதலை எண்ணுமெனப் பொருளுரைக்க.