தொல்காப்பியம் 1118 · பொருள் 4.33
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தலைவனின் ஒழுக்கச் சோர்வைப் பிறர் அறியாமல் காத்தல் தலைவிக்குக் கடமை என்று சொல்லப்படுவதால், மகனுக்குத் தாயானவளின் உயர்வும் தலைவியின் உயர்வே ஆகும்; ஏனெனில் தலைவன் இட்ட பணிமொழி அவ்வாறு அமைந்தது.
இளம்பூரணர்
"மகன்தாய்" என்பதைக் காமக்கிழத்தி எனக் கொண்டு, அவளை உயர்த்திக் கணவனின் பரத்தைமை பிறர்க்குப் புலனாகாமல் காத்தல் தலைவிக்கு இழிவு அன்று, உயர்வே என்பார்.
நச்சினார்க்கினியர்
"மகன்தாய்" என்பதைப் பின்முறையாக மணந்த மனைவி எனக் கொண்டு, இருவரும் ஒருவரை ஒருவர் உயர்வாகக் கொள்ளுதல் தலைவன் கட்டளை என விளக்குவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since guarding against his lapses is called her duty,
- the high standing of the son's mother is her own standing too,
- it being the nature of the lord's commanding word.
What the poem says
A difficult rule about the wife and the hero's other partner. Since it is the wife's duty to guard against the hero's lapses (cōrvu), the honour of "the son's mother" is her own honour as well, because such is the command of the hero (celvaṉ, "the lord").
Iḷampūraṇar calls it a supplement on the heroine's speech: the "son's mother" is the concubine; the lapse is his straying to courtesans; and the wife, raising the concubine and keeping his conduct from becoming known, gains rather than loses honour, as both obey the hero's word. Nacciṉārkkiṉiyar takes "son's mother" as the wife of a later marriage: the wife, guarding the hero from disgrace, should treat the later wife as her equal and the later wife should honour the first, both by the hero's word; by implication he extends it to both wives. Our English keeps to the shared core.
உரை · Commentary
இளம்பூரணர்
இதுவும் தலைமகட்குரிய கிளவி யுணர்த்திற்று. மேலதற்கோர் புறனடை :
(இ - ள்) தலைவனது சோர்வுகாத்தல் தலைமகட்குக் கடனாகலால் தன்மகனுக்குத் தாயாகிய காமக்கிழத்தி யுயர்புந் தன்னுயர்பாகும்; இருவருந் தலைமகன் பணித்த மொழிகோடல் இயல்பாகலான் ; என்றவாறு.
சோர்வாவது ஒழுக்கத்திற்சோர்வு. அது பரத்தையிற்பிரிவு. அதனை மறையாது காமக்கிழத்தி யாற்றின் றலைமகற்குக் குறைபாடு வரும் என்பதனால், அவளை யுயர்த்தி யவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகாமை யேற்றுக் கோடல் வேண்டுமெனக் கூறுதலுந் தனக்கு இழிபு ஆகாது உயர்ச்சியாம் என்றவாறு, இது மேலதற்குக் காரணங் கூறிற்று.
நச்சினார்க்கினியர்
இதுவுந் தலைவி குணச் சிறப்புக் கூறுகின்றது.
(இ-ள்.) அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் - தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தால் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக்குக் கடப்பாடென்று கூறப்படுதலால், மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் - மகன் தாயாகிய மாற்றாளைத் தன்னின் இழிந்தாளாகக் கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக் கொண்டொழுகுதல் தனது உயர்ச்சியாம்; செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான - தலைவன் இவ்வாறொழுகுகவென்று தமக்குப் பணித்த மொழி நூலிலக்கணத்தான் ஆன மொழியாகலான் (எ - று).
ஈண்டு ‘மகன்றா’ யென்றது பின்முறையாக்கிய வதுவையாளை. இன்னும் அவன் சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப்படுதலாலே முன்முறையாக்கிய வதுவையாளைத் தம்மின் உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும் பின்முறை வதுவையாளுக்கு உயர்பாஞ் செல்வன் பணித்த மொழியாலென்றவாறு. ஈண்டு ‘மகன்றா’ யென்றது உயர்ந்தாளை, உய்த்துக்கொண்டுணர்தலென்னு முத்தியால் இவை யிரண்டும் பொருள். ‘செல்வ’ னென்றார், பன்மக்களையுந் தன்னாணை வழியிலே இருத்துந் திருவுடைமைபற்றி. இவை வந்த செய்யுட்கள் உய்த்துணர்க