தொல்காப்பியம் 1117 · பொருள் 4.32

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 3

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தாய்போல இடித்துரைத்துத் தழுவிக்கொள்ளுதல், காமக்கிழத்திக்கு மட்டுமன்றி, ஆராய்ந்து மனையறம் நடத்தும் மனைக்கிழத்திக்கும் உரியது என்று கூறுவர்; அது தலைவன் தழுவலில் மயங்கியிருக்கும் காலத்தில் நிகழும்.

இளம்பூரணர்

இதைத் தலைவி முதிர்ந்த நிலையில் கூறுவது என்று நற்றிணைப் பாடலைக் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

பரத்தையிடமிருந்து மீண்டு கலங்கிய தலைவனைக் கண்டு, தலைவி தன் புலவியை எல்லாம் மாற்றித் தாய்போல் கழறித் தழுவிக்கொள்வாள் என்றும், அது அவள் புலவி முடிவுறும் காலம் என்றும் விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Chiding like a mother and taking him into her embrace
  2. belongs also to the wise mistress of the house, they say,
  3. at the time when he is lost in embraces.

What the poem says

In tol.1095 the concubine was allowed to chide the hero like a mother and embrace him. This rule extends the same to the āy maṉaik kiḻatti, the discerning wife who runs the household, at the time when he is "lost in embraces" (kavavoṭu mayaṅkiya kālai).

Iḷampūraṇar reads it as an utterance of the heroine: like the concubine, the wife too may chide and embrace him, at a time of distress caused by embraces, that is, of estrangement; he adds that she does so when she is older, and cites Naṟṟiṇai 290. Nacciṉārkkiṉiyar takes it as the time when the heroine's sulking comes to an end: when the hero, back from the courtesans, is distressed, she, unable to bear it, drops her grievance, chides him like an elder kinswoman and embraces him, while he, delighted, sees her goodness as greater than his own.

உரை · Commentary

இளம்பூரணர்

இது, தலைமகட் குரியதொரு கிளவி யுணர்த்திற்று.

(இ—ள்.) காமக்கிழத்தி மாட்டுத் தாய்போற் கழறித் தழீஇக்கோடல் மனைக்கிழத்திக்கும் உரித்து, கவவால் வருத்து முற்றகாலத்தென்றவாறு; புலவாவழி என்றவாறு.

இவ்வாறு கூறுவது தலைமகன் முதிர்ந்தவழி என்று கொள்க உம்மை இறந்தது தழீஇயிற்று:

“வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைய புனிற்றா தின்ற மிச்சில் ஓய்விடு நடைப்பக டாரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொற் கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிப மகனென்னாரே.” (நற்றிணை. ௨௯௰)

என்பது கொள்க. ‘கவவொடு மயங்கிய காலை’ என்பதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.

நச்சினார்க்கினியர்

இது, தலைவி புலவி கடைக்கொள்ளும் காலம் உணர்த்துகின்றது.

(இ - ள்.) தாய்போற் கழறித் தழீஇக் கோடல் - பரத்தையிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தினளெனக் கொள்ளுமாற்றான் மேல்நின்று மெய்கூறுங் கேளிராகிய தாயரைப்போலக் கழறி அவன் மனக்கவலையை மாற்றிப் பண்டுபோல மனங்கோடல்; ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப - ஆராய்ந்த மனையற நிகழ்த்துங் கிழத்திக்கும் உரித்தென்று கூறுப; கவவொடு மயங்கிய காலையான - அவன் முயக்கத்தால் மயங்கிய காலத்து (எ - று.)

என்றது, தலைவன் தவற்றிற்கு உடம்பட்டுக் கலங்கினமை கண்ட தலைவி அதற்கு ஆற்றாது தன் மனத்துப் புலவியெல்லாம் மாற்றி இதற்கொண்டும் இனையை யாகலெனத் தழீஇக் கொண்டமை கூறிற்று. தலைவன் தன் குணத்தினும் இவள் குணம் மிகுதிகண்டு மகிழவே தலைவி தன்னைப் புகழ்ந்த குறிப்பு உடையளென்பதூஉங் கொள்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāy pōl kaḻaṟit taḻīik kōṭal
āy maṉaik kiḻattikkum urittu eṉa moḻipa
kavavoṭu mayaṅkiya kālaiyāṉa.