தொல்காப்பியம் 1116 · பொருள் 4.31

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 5

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
5

பொருள் · Meaning in TamilAI

பின்னர் பெருஞ்சிறப்போடு மணந்த மனைவியைத் தொன்முறை மனைவி எதிர்கொண்டு காணும் போதும், இனிய அணிகலன் அணிந்த புதல்வனை வாயிலாகக் கொண்டு அவள் புகும் போதும், நடந்தவற்றை நினைத்துத் தலைவன் அங்கே கலங்குதலும் உரியது என்று புலவர் கூறுவர்.

இளம்பூரணர்

"இறந்த துணைய கிழவோன்" எனப் பாடம் கொண்டு, இதைத் தலைவனுக்கு உரிய மரபு என்று அகநானூற்றுப் பாடலைக் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

"இறந்தது நினைஇ" எனப் பாடம் கொண்டு, இரு மனைவியரையும் விட்டுப் பரத்தையரோடு ஒழுகியதை நினைந்து வருந்திப் பரத்தைமையிலிருந்து மீள்வான் என விளக்குவார்; பின்முறை வதுவையை வேதநெறியோடும் இணைப்பார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the first wife meets the bride of the later
  2. great-ceremony wedding, face to face,
  3. or when she enters with her well-jewelled son as go-between,
  4. thinking of what has passed, the hero, there,
  5. may also be troubled, say the learned.

What the poem says

This rule concerns a man with a second wife. When his first wife (tolmuṟai maṉaivi) comes face to face with the woman he married later with great ceremony, or when she comes in with her adorned son as a go-between, the hero, remembering what has happened, may be troubled.

Iḷampūraṇar reads the text as iṟanta tuṇaiya kiḻavōṉ and treats it as a practice of the hero, citing Akanāṉūṟu 66. Nacciṉārkkiṉiyar reads iṟantatu niṉaii, as our text does: the hero, recalling how he abandoned both wives for courtesans, is distressed and turns back from the courtesans; he takes "great thing" as a Vedic rule that brahmins may make three later marriages, kings two and merchants one, and alternatively as marriage for the sake of sons. Our English follows our text.

உரை · Commentary

இளம்பூரணர்

இது தலைமகற் குரியதொரு மரபுணர்த்திற்று

உ - ம்:

“இம்மை உலகத் திசையொடும்...... அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே” (அகம் ௬௬)

எனவரும்.

நச்சினார்க்கினியர்

இது, மேல் அதிகாரப்பட்ட வாயில் பரத்தையிற்பிரிவொடும் பட்டதாகலின் அதுகூறி இனித் தலைவன் பரத்தைமை நீங்குமிடங் கூறுகின்றது.

(இ - ள்.) பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை - மூவகை வருணத்தாரும் முன்னர்த் தத்தம் வருணத்தெய்திய வதுவை மனைவியர்க்குப் பின்னர் முறையாற் செய்துகொள்ளப்பட்ட பெரிய பொருளாகிய வதுவை மனைவியரை; தொன்முறை மனைவி, எதிர்ப்பாடாயினும் - பழையதாகிய முறைமையினையுடைய மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக்கோடற் சிறப்பினும்: இன் இழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் - இனிய பூண்களையணிந்து தொன்முறை மனைவி புதல்வனைக் கோலங்காட்டிய செல்வாள்போலப் பின்முறை வதுவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லினும் கிழவோன் இறந்தது நினைஇ - தலைவன் இங்ஙனம் செய்கையுடைய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைந்து; ஆங்கட் கலங்கலும் உரியன் என்மனார் புலவர் - அப்பரத்தையர்கண் நிகழ்கின்ற காதல் நிலை குலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர் (எ - று).

உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று; என்னை; இளமைப்பருவங் கழியாத காலத்து அக்காதன் மீளாதாகலின். பெரும்பொருளென்றார், வேதநூல், அந்தணர்க்குப் பின்முறை வதுவை மூன்றும் அரசர்க்கிரண்டும் வணிகர்க்கொன்றும் நிகழ்தல் வேண்டுமெனக் கூறிற்றென்பது உணர்த்துதற்கு.

இனி, மகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்றுமாம். ‘ஆக்கிய’ வென்றதனானே வேளாளர்க்கும் பின்முறை வதுவை கொள்க. தொன்மனைவி யென்னாது ‘முறை’ யென்றதனானே அவரும் பெருஞ்சிறப்புச்செய்து ஒரு கோத்திரத்தராய் ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார். இங்ஙனந் தொன்முறையார் பின்முறையாரை மகிழ்ச்சிசெய்தமை கண்டு இத்தன்மையாரை இறந்தொழுகித் தவறுசெய்தேமே யென்றும் பின்முறையார் அவர் புதல்வரைக் கண்டு மகிழ்ச்சி செய்து வாயில் நேர்ந்த குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமேயென்றும் பரத்தைமை நீங்குவனென்றார். ‘புகினு’ மெனவே பிறர்மனைப் புதல்வரென்பது பெற்றாம் தொன்முறை மனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம் வந்துழிக் காண்க.

இனி, பரத்தைமையிற் பிரிவொழிந்து மனைக்கண் இருந்ததற்கு,

“மா[?]ருண்கண் ம[?]ன்விளை யாடக் காதலிற் றழீஇ யினிதிருந் தனனே தாதார் பிரச முரலும் போதார் புறவின் நாடுகிழ வோனே.” (ஐங்குறு 406)

இன்னும் இவ்வாறு வருவன பிறவும் உய்த்துணர்ந்து கொள்க

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉ muṟai ākkiya perum poruḷ vatuvait
tol muṟai maṉaivi etirppāṭu āyiṉum
iṉ iḻaip putalvaṉai vāyil koṇṭu pukiṉum
iṟantatu niṉaiik kiḻavōṉ āṅkaṇ
5kalaṅkalum uriyaṉ eṉmaṉār pulavar.