தொல்காப்பியம் 1124 · பொருள் 4.39
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
எந்த வகையிலும் தலைவி கணவன் முன்னிலையில் தன்னைப் புகழ்ந்து பேசுதல் இல்லை; முன்னர் வகுத்துக் கூறிய இரண்டு இடங்கள் மட்டும் விலக்கு.
இளம்பூரணர்
அவ்விரண்டும் பரத்தையிடமிருந்து மீண்ட தலைவனை இரத்தலும் தெளித்தலும் என அகத்திணையியலில் கூறியவை எனக் கொள்வார்.
நச்சினார்க்கினியர்
இந்த இயலில் முன் கூறிய "தாய்போல் கழறித் தழீஇக் கோடலும்", "மகன்தாய் உயர்பு தன்னுயர்பு ஆதலும்" என்னும் இரண்டு என்பார்; இளம்பூரணர் கருத்தையும் மாற்றாக ஏற்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Speaking words of self-praise before her husband
- in any way at all is not for the wife,
- except in the two set out before.
What the poem says
The wife never praises herself before her husband, except in the two situations already described.
Iḷampūraṇar identifies the two as the pleading (irattal) and the soothing (teḷittal) named in Akattiṇaiyiyal, when the hero returns from courtesans; there she may praise herself, as when she says (Kalittokai 78) "we are not those who fear you", implying that others do. Nacciṉārkkiṉiyar takes the two as the earlier rules of this chapter: chiding him like a mother and embracing him (tol.1117), and the honour of the son's mother (tol.1118); in these she seems to praise herself by implication. He also accepts Iḷampūraṇar's identification as an alternative, and adds that she may praise herself where he is not present, before the concubines.
உரை · Commentary
இளம்பூரணர்
இது தலைவிக் குரியதோர் மரபுணர்த்திற்று.
(இ—ள்.) தலைவன் முன்னர்த் தன்னைப் புகழுங் கூற்று எவ்வழியானுங் கிழத்திக்கு இல்லை; முற்படக் கூறிய இரண்டிடமும் அல்லாத வழி யென்றவாறு.
அவையாவன தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலுந் தெளித்தலும் என அகத்திணையியலுட் கூறிய இரண்டும். அவ்வழிப் புகழ்தலாவது :
ஒரூஉநீ எம்கூந்தல் கொள்ளல் யாம் நின்னை வெரூஉதுங் காணுங் கடை” (கலித். ௭௮)
என்றவழித் தன்னை உயர்த்துக் கூறுதலாற் புகழ்ந்தாளாம்: நின்னை வெருவாதார் பிறர் என்னும் உள்ளக்கருத்தினால்.
“நீகூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு” (கலித். ௮௮)
என்றவழியும் பெண்டிர் பலர் உளராயினும் அவர் எல்லார் மாட்டுஞ் செல்லாது தன்மேல் வருமெனக் குறித்தாளாதலின், தன்னைப் புகழ்ந்தாளாம். பிறவுமன்ன.
நச்சினார்க்கினியர்
இது, தலைவியிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல்—தன்னைப் புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல்; எத்திறத்தானுங் கிழத்திக்கு இல்லை—நனிமிகு சீற்றத்துனியினும் தலைவிக்கு இல்லை; முற்பட வகுத்த இரண்டலங்கடையே - முன்பு கூறுபடுத்தோதிய ‘தாய்போற் கழறித் தழீஇக் கோடலும்’ ‘அவன் சோர்பு காத்தற்கு மகன்றா யுயர்பு தன்னுயர் பாதலும்’ அல்லாவிடத்து (எ-று.)
கிழத்திக்கில்லையென முடிக்க. அவ்விரண்டிடத்துந் தனது குணச்சிறப்பைக் குறிப்பால் தலைவன்முன்னே புகழ்வாள்போல ஒழுகினாளென் றுணர்க.
இனி ‘முற்படவகுத்த இரண்டு’ என்பதற்கு, ‘இரத்தலுந் தெளித்தலும்’ (தொல். அகத் 41) என அகத்திணையியலுட் கூறியனவென்றுமாம். தலைவன் முன்னர் இல்லையெனவே அவன் முன்னர் அல்லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக்கிழத்தியரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம்.
“பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும் என்னோடு புரையுந ளல்லள் தன்னோடு புரையுநர்த் தானறி குநளே”
எனப் பதிற்றுப்பத்தில் வந்தது.