தொல்காப்பியம் 1125 · பொருள் 4.40
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தலைவி முன்னிலையில் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறும் சொற்கள், அவன் வினைமேல் பிரியும் இடத்தில் உரியவை என்று கூறுவர்.
இளம்பூரணர்
"இல்லென இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு" என்னும் கலித்தொகை அடியைக் காட்டுவார்.
நச்சினார்க்கினியர்
கல்வி, கொடை, பொருள்செயல், முற்றுகையிடப்பட்ட வேந்தனை விடுவித்தல் போன்ற காரணங்களுக்காகத் தன்னைப் புகழ, தலைவி பிரிவை ஆற்றுவாள் என்று விளக்குவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Words of self-praise before the wife
- are proper to the hero in the matter of his work, they say.
What the poem says
The hero, unlike the wife, may praise himself before her, but only in connection with viṉai, his work or undertaking.
Iḷampūraṇar: when he is about to leave on a task, he may praise himself, citing Kalittokai 2 ("it is shame not to give to those who beg"), meaning in effect "I shall do it". Nacciṉārkkiṉiyar takes viṉai as the purposes for which the work is done, learning, giving, making wealth, rescuing a besieged king, and says the hero's self-praise ("I will achieve this") serves to make the wife bear the separation.
உரை · Commentary
இளம்பூரணர்
இது, தலைவற் குரியதொரு மரபுணர்த்திற்று
(இ—ள்.) தலைவி முன்னர்த் தலைவன் றன்னைப் புகழுங் கூற்று வினைவயிற் பிரியும் வழி யுரிய என்றவாறு.
“இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இழிவு” (கலித். ௨)
என்றும்,
“இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழ்”
என்றும் இவ்வாறு கூறுதல். இவ்வாறு கூறவே “யான் செய்யேன்” எனத் தன்னைப் புகழ்ந்தவாறாம்.
நச்சினார்க்கினியர்
இது, தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்கும் இடம் இன்னுழி என்கின்றது.
(இ—ள்.) கிழவி முன்னர்க் கிழவோன் தற்புகழ் கிளவி—தலைவிமுன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங் கூற்று; வினைவயின் உரிய என்ப—காரியங்களை நிகழ்த்துங் காரணத்திடத்து உரியவென்று கூறுவார் ஆசிரியர் (எ—று.)
அக் காரணமாவன, கல்வியுங், கொடையும், பொருள்செயலும், முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலுமாகிய காரியங்களை நிகழ்த்துவலெனக் கூறுவன. இவ் வாள்வினைச் சிறப்பை யான் எய்துவலெனத் தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று.
“இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை யிளிவென” (கலி. 2) என்றவழி யான் இளிவரவு எய்தேனென்றலிற் புகழுக்குரியேன் யானேயெனக் கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் காண்க.