தொல்காப்பியம் 1126 · பொருள் 4.41

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தலைவன் சொல்லுக்கு எதிர்மறுத்துப் பேசுதல் பாங்கனுக்கு உரியது.

இளம்பூரணர்

இது களவுக்கும் கற்புக்கும் பொது என்று, களவில் இடித்துரைத்தலும் கற்பில் பரத்தைமைக்கு உடன்படாது கூறுதலும் இதில் அடங்கும் எனக் கூறுவார்; "காமம் காமம் என்ப" என்னும் குறுந்தொகைப் பாடலைக் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

பார்ப்பானைப் போலக் காம நிலை உரைக்கும்போது பாங்கன் தலைவன் கூறியதற்கு எதிர்மொழி கூறுவான் என விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Answering his words back belongs to the companion.

What the poem says

The pāṅkaṉ, the hero's male friend, may answer the hero's words back, contradicting him. Iḷampūraṇar says this holds in both kaḷavu and kaṟpu: in kaḷavu he rebukes the infatuated hero, in kaṟpu he refuses to agree to his straying to courtesans. His examples are Kuṟuntokai 136, "love, love, they say; love is no demon or disease", and Kuṟaḷ 914 on the wise not touching the empty charm of those who sell themselves.

Nacciṉārkkiṉiyar says the rule partly limits what was given to the brahmin in tol.1121: when the companion speaks, as the brahmin does, of the state of love, he does so by contradicting what the hero has said. He too says it is common to kaḷavu, referring to the companion scenes there.

உரை · Commentary

இளம்பூரணர்

இது, பாங்கற் குரியதோர் மரபுணர்த்திற்று.

இது களவிற்கும் கற்பிற்கும் பொது ; ஒப்பக்கூறல் என்னும் உத்திவகையாற் கூறப்பட்டது.

(இ-ள்.) தலைவன் கூறியவழி எதிர்கூறுதல் பாங்கற்கு உரித்து என்றவாறு. எதிர் கூறுதலாவது மாறுபடக் கூறுதல். அவை களவு காலத்துக் கழறலுங் கற்புக்காலத்துப் பரத்தையிற் பிரிவிற்கு உடம்படாது கூறலும் இவை போல்வனவும்.

உ—ம்

“காமங் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணித்தலும் இன்றே யானை குளகு மென்று ஆள்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே” (குறுந். ௧௩௬)

என்றும்,

“பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்” (குறள். ௯௧௪)

என்றும் வரும்.

நச்சினார்க்கினியர்

இது, மேற் பார்ப்பார்க்குரியன பாங்கற்கு மாமென எய்துவித்ததனை ஒருமருங்கு மறுக்கின்றது.

(இ-ள்.) மொழியெதிர் மொழிதல்—பார்ப்பானைப்போலக் காமநிலை உரைத்தல்போல்வன கூறுங்கால் தலைவன் கூறிய மொழிக்கு எதிர் கூறுதல் ; பாங்கற்கு உரித்து - பாங்கனுக்கு உரித்து - (எ-று).

இது களவிற்கும் பொது; அது பாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற் புறத்தொழுக்கத்துத் தலைவன் புகலாமற் கூறுவன வந்துழிக் காண்க. ‘உரித்’தென்றதனால் தலைவன் இடுக்கண் கண்டுழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1moḻi etir moḻital pāṅkaṟku urittē.