தொல்காப்பியம் 1127 · பொருள் 4.42
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தலைவன் வாய்விட்டுச் சொல்லாமல் குறிப்பால் கருதியதற்கு எதிர்மொழி கூறுதல், பாங்கனிடம் அருகியே (சுருங்கியே) தோன்றும்.
இளம்பூரணர்
இவ்வாறே பொருள் கொள்வார்.
நச்சினார்க்கினியர்
தலைவன் கூறாமலே தான் குறிப்பால் உணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல் சிறுபான்மையே என்று விளக்குவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Answering what was intended appears only sparingly.
What the poem says
A further rule on the companion. Kuṟittu etir moḻital, replying to what the hero intends or hints, rather than to what he has said, appears in shrunken form (aḵkit tōṉṟum), that is, rarely.
Iḷampūraṇar reads it as: answering against what was intended occurs seldom. Nacciṉārkkiṉiyar explains it as answering what the companion himself perceived from the hero's hint, without the hero saying it; since this is rare, the omens of tol.1121 are something the companion may speak of only after hearing the brahmin, while other things he may speak of on his own.
உரை · Commentary
இளம்பூரணர்
இதுவுமது.
(இ—ள்) மேற் குறித்ததற் கெதிர் கூறுதல் அருகித் தோன்றும் என்றவாறு. அது வந்தவழிக் காண்க.
நச்சினார்க்கினியர்
இதுவும் பாங்கற்குரியதோ ரிலக்கணங் கூறுகின்றது.
(இ—ள்.) குறித்து எதிர்மொழிதல் தலைவன் குறிப்பினை அவன் கூறாமல் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல் ; அஃகித் தோன்றும் - சுருங்கித் தோன்றும் (எ—று).
அவன் குறிப்பறிந்து கூறல் சிறுவரவிற்றெனவே ‘காமநிலையுரைத்தல்’ (தொல். பொ. 177) என்னுஞ் சூத்திரத்தின்கட் கூறிய ‘ஆவொடு பட்ட நிமித்தம்’ ஆயின் பார்ப்பான் கூறக் கேட்டுத் தான் கூறவும்பெறுமெனவும்’ ஏனையவுங் கிழவன் கூறாமல் தானே கூறவும்பெறுமெனவுங் கூறியவாறாயிற்று.