தொல்காப்பியம் 1130 · பொருள் 4.45

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

போர் முதலிய வினை நிகழும் இடத்தில் தலைவியின் நிலையைத் தலைவன் கூறுவதாகப் பாடார்; வெற்றிக் காலத்தில் அது தெளிவாக விளங்கித் தோன்றும்.

இளம்பூரணர்

வினையிடத்தில் நினைக்கலாம், சொல்லக்கூடாது; வினை முடிந்த வெற்றிக் காலத்தில் தலைவியின் உருவம் அவன் முன் விளங்கித் தோன்றும் எனக் கூறுவார்.

நச்சினார்க்கினியர்

இது பாசறைப் புலம்பலுக்கு எல்லை கூறுவது என்றும், வெற்றிக் காலத்திலும் குறித்த பருவம் வந்தபோதும் தூது கண்டபோதும் அவன் வருத்தம் வெளிப்படும் என்றும் விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heroine's state they do not speak of at the place of action;
  2. in the time of victory it shines out and appears.

What the poem says

While the hero is engaged in his task, war above all, the heroine's state is not spoken of; when victory comes, it appears vividly. Iḷampūraṇar explains uraiyār as not giving it bodily form: in the place of action the heroes do not speak of the heroine, though they may think of her, and when their work is complete her image rises clearly before them; his example is from the Pāṇṭikkōvai.

Nacciṉārkkiṉiyar reads it as a limit on pācaṟaip pulampal, the hero's lament in the war camp named in Akattiṇaiyiyal: poets do not compose poems in which the hero, his work unfinished, recalls her state; when victory comes, or the season he promised arrives, or a messenger comes, his grief may be shown clearly. His example is Akanāṉūṟu 24.

உரை · Commentary

இளம்பூரணர்

(இ-ள்.) உரையாமை யாவது உருவு வெளிப்பாடு. அதனை வினைநிகழுமிடத்து உரைக்கப் பெறார்; தலைமக்கள் தமதுவினை முடிந்த காலத்து விளங்கித் தோன்றுமென்றவாறு.

எனவே வினையிடத்துள் நினைப்பராயினும் அமையும்; உரைக்கப் பெறார் என்பதூஉம், வென்றிக்காலத்துக் குற்றமறத் தோன்றும் என்பதூஉம் கொள்ளப்படும். உ-ம்:

“தங்கிய ஒள்ளொளி யோலைய தாய்த்தட மாமதியின்மேல் பொங்கிய வேந்தர் எரிமுகந் தோன்றின்று போதுகண்மேற் பைங்கயல் பாய்புனற் பாழிப்பற் றாரைப் பணித்ததென்னன் செங்கய லோடு சிலையுங் கிடந்த திருமுகமே” (பாண்டிக்கோவை)

என வரும்.

நச்சினார்க்கினியர்

இஃது, அகத்திணையியலுட் ‘பாசறைப் புலம்பலும்’ (தொல். அகத். 41) என்றார், ஆண்டைப்புலம்பல் இன்னுழியாகாது இன்னுழியாமென வரையறை கூறுகின்றது.

(இ—ள்.) கிழவி நிலையே வினையிடத்து உரையார் - தலைவியது தன்மையை வினை செய்யா நிற்றலாகிய விடத்து நினைந்து கூறினானாகச் செய்யுள் செய்யப்பெறார்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூதுகண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றிற்றாகச் செய்யுள் செய்ப (எ-று.)

உரையாரெனவே நினைத்தலுள தென்பதூஉம், அது போர்த்திறம்புரியும் உள்ளத்தாற் கதுமென மாயுமென்பதூஉங் கொள்க வினையிடம்—வினைசெய்யிடம். காலத்து மென்னும் எச்சவும்மை தொக்குநின்றது. அன்றி அங்ஙனம் பாடங் கூறலும் ஒன்று.

“வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த” (அகம் ௨௪)

இதனுட் கணையுதைப்ப முரசொடு மயங்கும் யாமத்துத் துயின்மடிந்து வாளுறை செறியாத் தானையையுடைய வேந்தனெனவே வென்றிக்காலங் கூறியவாறுங் கிழவிநிலை உரைத்தவாறுங் காண்க.

பருவங் கண்டுந் தூதுகண்டுங் கூறியவை ‘பாசறைப் புலம்பலும்’ (தொல். அகத். 41) என்புழிக் காட்டினும்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiḻavi nilaiyē viṉaiyiṭattu uraiyār
veṉṟik kālattu viḷaṅkit tōṉṟum