தொல்காப்பியம் 1131 · பொருள் 4.46
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
பரத்தை காரணமாகத் தலைவன் பிரிந்திருக்கும் காலத்திலும், தலைவிக்குப் பூப்புத் தோன்றிய பின் வரும் பன்னிரண்டு நாளும் அவளை விட்டு அகன்று உறையமாட்டான் என்று புலவர் கூறுவர்.
இளம்பூரணர்
பூப்பின் முதல் மூன்று நாள் கழிந்த பின் பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறம் அன்று; அது கரு தோன்றும் காலம் என்பதே காரணம் எனக் கூறுவார்.
நச்சினார்க்கினியர்
முதல் மூன்று நாளும் கூட்டமின்றிச் சொல் கேட்கும் அணிமையில் இருந்து, பின் பன்னிரண்டு நாளும் கூடியுறைவான் என விரித்து விளக்குவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For the twelve days of the menstrual period,
- they do not stay away apart, say the learned,
- at the time when he has parted for a courtesan.
What the poem says
Even when the hero has gone off to a courtesan, he does not stay away from his wife during the twelve days following her menses; the purpose, as Iḷampūraṇar says, is that it is the time of conception. He explains: even if he is in the courtesans' quarter, once three days are past it is not right for him to stay away for twelve days.
Nacciṉārkkiṉiyar divides nīttakaṉṟu into nīttu and akaṉṟu: during the three days of her impurity he stays apart from union but within calling distance, and in the following twelve days he does not leave her. He gives reasons, citing an older commentary, and adds that the friend's dressing the heroine in red to tell the hero of her period belongs here. The two agree on the core: three days of abstinence and twelve days not apart.
உரை · Commentary
இளம்பூரணர்
இதுவுமது.
(இ - ள்) பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் விட்டு அகன்றுறைவா ரல்லர் என்று சொல்லுவர் பரத்தையிற் பிரிந்த காலத்து என்றவாறு.
பரத்தையர் சேரிபா ணாயினும் பூந்தோன்றி மூன்றுநாள் கழித்தபின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு. இதனாற் பயன் என்னையெனின் அது கருத் தோன்றுங் காலம் என்க.
நச்சினார்க்கினியர்
இது, பரத்தையிற் பிரிவின்கண் தலைவற்குந் தலைவிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ - ள்.) பரத்தையிற் பிரிந்த காலையான - பரத்தையிற் பிரிந்த காலத்தின்க ணுண்டான; பூப்பின் நீத்து - இருதுக்காலத்தின்கட் சொற்கேட்கும் அணுமைக்கண் நீங்கியிருந்து; புறப்பாடு ஈராறு நாளும் அகன்று உறையார் என்மனார் புலவர் - அவ் விருதுக்காலத்தின் புறக்கூறாகிய பன்னிரண்டு நாளும் இருவரும் பிரிந்துறையாரென்று கூறுவர் புலவர் (எ - று.)
என்றது பூப்புத்தோன்றிய மூன்றுநாளுங் கூட்டமின்றி அணுகவிருந்து அதன் பின்னர்ப் பன்னிரண்டு நாளுங் கூடியுறைப என்றதாம்.
தலைவியுந் தலைவனுந் துனீத்தும் இருத்தலிற் ‘பிரிந்துறையா’ ரெனப் பன்மையாற் கூறினார்.
இனிப், பூப்பின் முன்னாறு நாளும் பின்னாறு நாளுமென்றும், பூப்புத் தோன்றிய நாள் முதலாகப் பன்னிரண்டு நாளுமென்றும், நீத்தல் தலைவன் மேல் ஏற்றியும், அகறலைத் தலைவி மேல் ஏற்றியும் உரைப்பாருமுளர் பரத்தையிற் பிரிந்த காலத்துண்டான பூப்பெனவே, தலைவி சேடியர் செய்ய கோலங்கொண்டு பரத்தையர் மனைக்கட் சென்று தலைவற்குப் பூப்புணர்த்துதலுங் கொள்க. இது,
“அரத்தம் உடீஇ யனிபழுப்புப் பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர் சூட்டிப்—பரத்தை நினை நோக்கிக் கூறினு நீ மொழியல் என்று மனை நோக்கி மாண விடும். (திணை. நூற்144)
தோழி செவ்வணியணிந்து விட்டமை தலைவன் பாங்காயினார் கூறியது.
இக்காலத்தின்கண் வேறுபாடாக வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க.
பூப்புப்புறப்பட்ட ஞான்றும் மற்றைநாளுங் கருத் தங்கில் அது வயிற்றில் அழிதலும், மூன்றாநாள் தங்கில் அது சில் வாழ்க்கைத்தாகலும் பற்றி முந்நாளுங் கூட்டமின்றென்றார். கூட்டமின்றியும் நீங்காதிருத்தலிற் பரத்தையர் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக் கொண்ட வருத்தம் அகலும். அகல வாய்க்குங் கரு மாட்சிமைப் படுமாயிற்று. இது மகப் பேற்றுக் காலத்திற்குரிய நிலைமை கூறிற்று. இதனாற் பரத்தையிற் பிரியுநாள் ஒரு திங்களிற் பதினைந்தென்றாராயிற்று. உதாரணம் வந்துழிக் காண்க. “குக்கூ” (குறுந் 157) என்பதனைக் காட்டுவாருமுளர்.