தொல்காப்பியம் 1132 · பொருள் 4.47
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
விரும்பிய கல்விக்காகப் பிரியும் பிரிவு மூன்று ஆண்டுகளைக் கடவாது.
இளம்பூரணர்
ஆகவே ஓராண்டோ ஈராண்டோ ஆகலாம் என்று கூறுவார்.
நச்சினார்க்கினியர்
இதை இரண்டாகப் பிரித்து, துறவறம் கூறும் வேதாந்தம் முதலிய கல்விக்கு ஆண்டு வரையறை இல்லை என்றும், அக்கல்வி எல்லாம் "தத் துவம் அசி" என்னும் மூன்று பதத்தைக் கடவாது என்றும் விளக்குவார்.
நச்சினார்க்கினியர் கொண்ட இப்பொருள் வலிந்து கொண்ட பொருளாகத் தோன்றுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Separation for desired learning does not exceed three years.
What the poem says
The first of four rules fixing time limits for the kinds of separation (pirivu). Separation for learning (ōtaṟpirivu) does not go beyond three years. Iḷampūraṇar: the time of parting for the learning one wants is no more than three years; so one or two years is also acceptable.
Nacciṉārkkiṉiyar connects it with the separation for study named in Akattiṇaiyiyal, but reads it in two parts: the study of works such as the Vedānta, which teach the ascetic life, has no fixed term of years, and all such learning "does not go beyond three words", which he identifies with the Upaniṣadic formula tat tvam asi. This reading seems forced; we follow Iḷampūraṇar.
உரை · Commentary
இளம்பூரணர்
இதுவுமது.
(இ—ள்) விரும்பப்பட்ட கல்விக்கட் பிரியுங் காலம் மூன்றியாண்டின் மிகாது என்றவாறு. எனவே, ஓரியாண்டாயினும் ஈரியாண்டாயினும் ஆமென்பது கொள்ளப்படும்.
நச்சினார்க்கினியர்
இஃது ‘ஓதலுந் தூதும்’ (தொல். அகத். 26) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய ஓதற்பிரிவிற்குக் காலவரையறை யின்றென்பதூஉம் அவ்வோத்து இதுவென்பதூஉம் உணர்த்துகின்றது.
(இ - ள்.) கல்வி வேண்டிய யாண்டு இறவாது—துறவறத்திணைக்கூறும் வேதாந்த முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது; மூன்று இறவாது - அக் கல்வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது (எ - று.)
இறவாதென்பதை இரண்டிடத்துங் கூட்டுக. மூன்று பதமாவன அதுவென்றும் நீயென்றும் ஆனாயென்றுங் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும் அவ்விரண்டும் ஒன்றாதலும். ஆதலின் இம்மூன்று பதத்தின் கண்ணே தத்துவங்களைக் கடந்த பொருளை உணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரியுமாறு உணர்ந்துகொள்க. இது மூன்று வருணத்தார்க்குங் கூறினார். ஏனைய வேளாளரும் ஆகமங்களானும் அப் பொருளைக் கூறிய தமிழானும் உணர்தல் ‘உயர்ந்தோர்க் குரிய’ (தொல், அகத். 31) என்பதனான் உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினார் துறவறம் நிகழ்த்துங் கருத்தினராக வேண்டுதலின் காலவரையறை கூறாராயினார். முன்னர்க் காட்டிய “அரம்போ ழவ்வளை” (அகம். 124) என்னும் பாட்டினுட் ‘பானாட் கங்குலின் முனிய வலைத்தி கடவுளர் சான்ற செய்வினை மருங்கிற் - சென்றோர் வலவரின் ஓடுவை’ என்றது இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளென்று உணர்க.