தொல்காப்பியம் 1133 · பொருள் 4.48

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

வேந்தனுக்காக மேற்கொள்ளும் போர்ப் பணிக்காகப் பிரியும் பிரிவு ஓர் ஆண்டுக்குள் அடங்கும்.

இளம்பூரணர்

வேந்தர்க்காக நிகழும் தூது, காவல் ஆகிய பிரிவுகளும் இதில் அடங்கும் என்றும், ஆறு திங்களும் மூன்று திங்களும் ஆகலாம் என்றும் கூறுவார்.

நச்சினார்க்கினியர்

இருபெரு வேந்தர் பொருதற்கும் ஒருவனுக்குத் துணையாகச் செல்வதற்கும் பிரியும் பிரிவு எனக் கொண்டு, காவற் பிரிவையும் இதில் அடக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Work undertaken for the king is within a year.

What the poem says

Vēntuṟu toḻil, "the work that comes to the king", is the separation to help a king in war. It lasts no longer than a year. Iḷampūraṇar: the term covers the separations of embassy and guard as well, all undertaken for a king, so these too are within a year, and six months or three months are equally allowed.

Nacciṉārkkiṉiyar takes it as the separation when one of the two great kings fights the other, or goes to help another king; within a year, which he counts as the ten months from Cittirai to Tai, citing poems that name intervals of two and six months; he adds that the separation for guarding a conquered land is included.

உரை · Commentary

இளம்பூரணர்

இதுவு மது.

வேந்துறு தொழிலாவது பகைதணி வினை.

(இ-ள்.) வேந்தற்குற்றவழி, தூது காவல் என அவ்வழிப் பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு.

எனவே அறுதிங்கள் முத்திங்கள் எல்லாங் கொள்ளப்படும்.

நச்சினார்க்கினியர்

இது வரையறையுடைமையிற் பகைவயிற்பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.

(இ-ள்.) வேந்து உறு தொழிலே - இருபெரு வேந்தருறும் பிரிவும், அவருள் ஒருவற்காக மற்றொரு வேந்தனுறும் பிரிவும்; யாண்டினது அகமே - ஓர் யாண்டினுட்பட்டதாம் (எ—று.)

‘வேந்துறுதொழி’ லென்பதனை இரட்டுற மொழிதலென்பதனான் வேந்தனுக்கு மண்டிலமாக்களுந் தண்டத்தலைவரு முதலியோர் உறும் பிரிவும் யாண்டினதகமெனவும் பொருளுரைக்க. ‘தொழி’லென்றது அதிகாரத்தாற் பிரிந்து மீளும் எல்லையை அது, ‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு’ (தொல். அகத். 9) என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள்ளும் முதற்கணின்ற சித்திரை தொடங்கித் தையீறாக்கிடந்த பத்துத் திங்களுமாம். இனிப் பத்தென்னாது யாண்டென்றதனாற், ‘பின்பனி தானும்’ (தொல். அகத். 10) என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசிதொடங்கித் தையீறாக யாண்டுமுழுவதூஉங் கொள்ளக்கிடந்ததேனும் அதுவும் பன்னிரு திங்களுங் கழிந்ததன்மையின் யாண்டினதகமாமாறுணர்க. இதற்கு இழிந்த எல்லை வரைவின்மையிற் கூறாராயினார்: அது,

“இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக (குறுந் 189)

எனச் சான்றோர் கூறலின்.

“நிலநாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலநாவில் பிறந்தசொல் புதிதுண்ணும் பொழுதன்றோ பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால் சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை.” (கலி.35)

இது, பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல் குறித்தலின் இருதிங்கள் இடையிட்டது.

“கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென் றதுவே.” (அகம். 139)

இது கார்குறித்து வருவலென்றலின் அறுதிங்கள் இடையிட்டது.

வேளாப் பார்ப்பான் (அகம். 24) என்பது “தைஇ நின்ற தண்பெயற் கடைநாட் பனியிருங் கங்குல்” என்றலின் யாண்டென்பதூஉம், அது கழிந்ததன்மையின் அஃது அகமெனவும் பட்டதென்பதூஉம். தலைவன் வருதுமென்று காலங்குறித்ததற்கொத்த வழக்கென்றுணர்க, காவற்பிரிவும் வேந்துறுதொழிலெனவே அடங்கிற்று. தான்கொண்ட நாட்டிற்குப் பின்னும் பகை யுளதாங்கொ லென்று உட்கொண்டு காத்தலின்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēntu uṟu toḻilē yāṇṭiṉatu akamē.