தொல்காப்பியம் 1134 · பொருள் 4.49
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
ஏனைய பிரிவும் அதே இயல்புடையது; அதுவும் ஓராண்டுக்குள் அடங்கும்.
இளம்பூரணர்
"அவ்வியல் நிலையும்" எனப் பாடம் கொண்டு, ஏனைப் பிரிவு என்பது பொருள்வயிற் பிரிவு என்பார்.
நச்சினார்க்கினியர்
"அவ்வயின் நிலையும்" எனப் பாடம் கொண்டு, தூதிற் பிரிவும் பொருள்வயிற் பிரிவும் இதில் அடங்கும் என்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The other separation too is of that same nature.
What the poem says
The remaining separation also has the same limit of a year. Iḷampūraṇar reads the line as avviyal nilaiyum and takes "the other separation" as the separation for wealth (poruḷvayiṟpirivu), which also falls within a year.
Nacciṉārkkiṉiyar reads avvayiṉ nilaiyum and takes the remaining separations as those for embassy and for wealth, both limited to a year; his examples are Akanāṉūṟu 23, where the hero, gone for wealth, promises to return at the rains, and a Kalittokai pālai poem.
உரை · Commentary
இளம்பூரணர்
இதுவுமது.
(இ - ள்.) ஒழிந்த பொருள்வயிற் பிரிவிற்குங் காலம் யாண்டினதகம் என்றவாறு.
நச்சினார்க்கினியர்
இஃது எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.
(இ - ள்.) ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் - கழிந்து நின்ற தூதிற்கும் பொருளிற்கும் பிரிந்து மீளும் எல்லையும் யாண்டினதகம் (எ - று.)
“மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்” (அகம். 23)
இது பொருட்பிரிவின்கட் கார்குறித்து ஆறு திங்கள் இடையிட்டது.
“நெஞ்சு நடுக்குற” (கலி. 24) என்னும் பாலைக்கலியுள் “நடுநின்று செய்பொருண் முற்று மளவென்றார்” என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லைவந்த செய்யுள் வந்துழிக் காண்க.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
Spotted a mistake in this poem, its translation or its words?