தொல்காப்பியம் 1138 · பொருள் 4.53

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

வினைமேல் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரும்போது, இடையிலுள்ள பாலை வழியில் தங்குவது இல்லை; ஏனெனில், உள்ளம் சென்றடைவது போல விரைந்து, வேண்டிய இடத்தில் உதவும் பறவை போன்ற செருக்குடைய குதிரை அவனிடம் உண்டு.

இளம்பூரணர்

இரவும் பகலுமாக வருவான், இடையில் தங்கினால் மனைவியிடம் அன்பின்மை ஆகும் எனக் கூறுவார்.

நச்சினார்க்கினியர்

எவ்வளவு தொலைவாயினும் இடையில் தங்கான்; தேர் குதிரையாலன்றிச் செல்லாது என்பதால் குதிரையைக் கூறினார் என விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he who left for his task is coming back,
  2. there is no halting in the midst of the wilderness,
  3. since he has a proud horse of bird-like nature
  4. that helps him, like his mind, wherever it must go.

What the poem says

The last nūṟpā of Kaṟpiyal. When the hero returns from the task for which he left, he does not stop on the way through the wilderness (iṭaiccuram). He has a spirited horse, swift like a bird, which gets him where he needs to be as quickly as his mind would.

Iḷampūraṇar says the meaning is plain: he does not halt, but travels day and night; if he lingered it would show lack of love for his wife. His example is Akanāṉūṟu 334. Nacciṉārkkiṉiyar adds that however long the road he does not halt at any stage, and that the horse is named because the chariot cannot go without it; his example is Akanāṉūṟu 104, where the hero, his task done, drives back without stopping and arrives at evening.

உரை · Commentary

இளம்பூரணர்

இது, வினைமுற்றி மீண்ட தலைவற்குரியதோர் மரபு உணர்த்திற்று.

சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

‘இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை’ என்பது வழியில் இடையிற்றங்காது, இரவும் பகலுமாக வருமென்பது கருத்து. தங்குவானாயின் மனையாள்மாட்டு விருப்பின்றாம்,

உ—ம் “இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தென” (அகம் ௩அ௪) எனவரும், பிறவு மன்ன.

நச்சினார்க்கினியர்

இது பிரிந்து மீளுங்காற் செய்யத்தகுவதோர் இயல்பு கூறுகின்றது.

(இ-ள்.) வினைவயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை—யாதானுமோர் செய்வினையிடத்துப் பிரிந்தோன் அதனை முடித்து மீண்டுவருங் காலத்து ; இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை. எத்துணைக்காதம் இடையிட்டதாயினும் அவ்விடையின்கணுண்டாகிய ஒருவரு வழியிடத்துத் தங்கிவருதலில்லை ; உள்ளம்போல உற்றுழி உதவும் - உள்ளஞ் சேட்புலத்தை ஒருகணத்திற் செல்லுமாறுபோலத் தலைவன் மனஞ் சென்றுற்றவிடத்தே ஒரு கணத்திற் சென்று உதவிசெய்யும் : புள் இயல் கலிமா உடைமையான - புட்போல நிலந்தீண்டாத செலவினையுடைய கலித்த குதிரையுடையனாதலான் (எ-று.)

தேருங் குதிரையாலல்லது செல்லாமையிற் குதிரையைக் கூறினார், இஃது இடையில் தங்காது, இரவும்பகலுமாக வருதல் கூறிற்று. இதனை மீட்சிக்கெல்லை கூறிய சூத்திரங்களின் பின் வையாது, ஈண்டுத் துறவு கூறியதன் பின்னர் வைத்தார், இன்ப நுகர்ச்சியின்றி இருந்து அதன்மேல் இன்பமெய்துகின்ற நிலையாமைநோக்கியும், மேலும் இன்பப் பகுதியாகிய பொருள் கூறுகின்றதற்கு அதிகாரப்படுத்தற்கு மென்றுணர்க.

“வேந்துவினை முடித்த காலை” (அகம். 104)

இதனுள் வினைமுடித்த காலைத் தேரிளையர் செலவிற்கேற்ப ஊராது கோலூன்றின் உலகிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத்தேரேறி இடைச்சுரத்தில் தங்காது மாலைக்காலத்து வந்து பூச்சூட்டினை இனிதுசெய்தனை எந்தை வாழிய எனத் தோழி கூறியவாறு காண்க.

“இருந்த வேந்த னருந்தொழின் முடித்தென” என்னும் அகப்பாட்டினுள்,

“புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்த தல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ விலனே இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளிபூட்டினையோ மானுரு வாகநின் மனம்பூட்டினையோ வுரைமதி வாழிநீ வலவ” (அகம். 384)

என உள்ளம்போல உற்றுழி உதவிற்றெனத் தலைவன் கூறியவாறு காண்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṉai vayiṉ pirintōṉ mīṇṭu varu kālai
iṭaiccura maruṅkiṉ tavirtal illai
uḷḷam pōla uṟṟuḻi utavum
puḷ iyal kali mā uṭaimaiyāṉa.