தொல்காப்பியம் 200 · எழுத்து 6.27

Section எழுத்ததிகாரம் / 6. உருபியல்Poet தொல்காப்பியர்Lines 5

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
5

பொருள் · Meaning in TamilAI

ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களின் மேல் பத்து ஏறி வரும் ஒருபஃது, இருபஃது முதலான எல்லா எண்களும் உருபேற்கும்போது இடையே ஆன் சாரியை வந்தாலும் குற்றம் இல்லை; அப்போது அஃது என்னும் பகுதி கெடும்; பகர மெய் மட்டும் கெடாமல் நிற்கும். ஒருபானை, இருபானை, முப்பானை என வரும்.

இளம்பூரணர்

இளம்பூரணர் ஒருபஃது முதலான எண்கள் உருபேற்கும்போது ஆன் சாரியை வரலாம் என்றும், அப்போது அஃது என்னும் பகுதி கெட்டுப் பகர மெய் மட்டும் நிற்கும் என்றும் நேர்பொருள் கொள்வார்; ஒருபானை என்பது இதற்குரிய எடுத்துக்காட்டு.

நச்சினார்க்கினியர்

உம்மையால் ஒருபஃதனை, இருபஃதனை என அன் சாரியை பெறுதலும் உண்டு என்று கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Starting from one, with ten riding on them,
  2. all the numbers, when they are spoken of,
  3. even if āṉ comes in between, there is no fault;
  4. the word aḵtu is lost there;
  5. the consonant p must remain.

What the poem says

The tens from orupaḵtu "ten" (literally "one ten") through irupaḵtu "twenty", muppaḵtu "thirty" and so on up to eṇpaḵtu "eighty" end in -paḵtu. Before case suffixes they may take āṉ instead of the usual aṉ; then the aḵtu part drops away, leaving the p: orupāṉai, irupāṉai, muppāṉai.

"There is no fault" (māṉam illai) marks āṉ as an allowed alternative, and Nacciṉārkkiṉiyar says the "even if" means the aṉ form is also good: orupaḵtaṉai, irupaḵtaṉai. He extends the rule to forms like oṉpāṉ.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது ஒன்று முதலாக எட்டு இறுதியாக நின்ற குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் ஏழினோடும் பத்தென்னும் எண்ணுப்பெயர் வந்து புணர்ந்து ஒன்றாய் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்.) ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும்—ஒன்றுமுதலாக எட்டீறாக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும், சொல்லுங்காலை—முடிபு கூறுங் காலத்து, ஆன் இடைவரினும் மானமில்லை—முற்கூறிய அன்சாரியையே யன்றி ஆன்சாரியை இடையே வரினுங் குற்றமில்லை, ஆவயின் அஃதென் கிளவி கெடும்—ஆன்சாரியை பெற்றுழிப் பஃதென்னும் எண்ணிடத்து அஃதென்னுஞ் சொல் கெட்டுப் போம், பஃகான் மெய் உய்தல் வேண்டும்—அவ்வகரத்தான் ஊரப்பட்ட பகரமாகிய ஒற்றுக் கெடாது நிற்றலை ஆசிரியன் விரும்பும், எ-று.

“நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம் வந்திடை நிலையும்” (எழு-௪௩௭)

என்பதனான் ஆய்தம் பெற்றது.

(எ-டு.) ஒருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது எண்பஃது எனக் குற்றியலுகரப் புணரியலுள் விதிக்குமாறே நிறுத்தி அஃதென்பதனைக் கெடுத்துப் பகரவொற்றை நிறுத்தி ஆன் சாரியை கொடுத்து ஒருபானை இருபானை என எல்லா எண்ணொடும் எல்லா உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உம்மை எதிர்மறை யாதலின் ஒருபஃதனை இருபஃதனை என எல்லாவற்றோடும் ஒட்டுக.

சொல்லுங்காலை என்றதனாற் பத்தூர் கிளவியே யன்றி ‘ஒன்பான் முதனிலை’ (எழு-௪௬௩) ‘ஒன்பாற் கொற்றிடை’ (எழு-௪௭௫) என்றாற் போல வருவனவற்றின்கண்ணும் பகரத்துள் அகரம் பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன் கொடுக்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟu mutal āka pattu ūrntu varūum
ellā eṇṇum collum kālai
āṉ iṭai variṉum māṉam illai
aḵtu eṉ kiḷavi āvayiṉ keṭumē
5uytal vēṇṭum paḵkāṉ meyyē.