தொல்காப்பியம் 201 · எழுத்து 6.28

Section எழுத்ததிகாரம் / 6. உருபியல்Poet தொல்காப்பியர்Lines 3

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

யாது என்னும் சொல்லும், சுட்டெழுத்தை முதலாகக் கொண்ட அஃது, இஃது, உஃது என்னும் ஆய்தம் உடைய சொற்களும் அன் சாரியையோடு பொருந்தும்; அவ்விடத்து ஆய்தம் கெடும். யாதனை, யாதனொடு, அதனை, இதனை, உதனை என வரும்.

இளம்பூரணர்

இளம்பூரணர் யாது என்பதும் அஃது, இஃது, உஃது என்பவையும் அன் சாரியை பெறும் என்றும், அப்போது ஆய்தம் கெடும் என்றும் நேர்பொருள் கொள்வார்; யாதனை, அதனை என்பவை இதற்குரிய எடுத்துக்காட்டுகள்.

நச்சினார்க்கினியர்

இவை எண்ணுப் பெயர் அல்லாத குற்றியலுகர ஈறுகள் என்று கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The ending of yātu, and the āytam ending
  2. that begins with a pointing letter, join with aṉ;
  3. the āytam is lost there.

What the poem says

The interrogative yātu "which" and the demonstratives aḵtu, iḵtu, uḵtu "that, this" take the increment aṉ before case suffixes. In the demonstratives the āytam (ḵ) is lost. So yātaṉai, yātaṉoṭu, ataṉai, ataṉoṭu, itaṉai, utaṉai.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது எண்ணுப் பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்.) யாது என் இறுதியும்—யாதென வருங் குற்றுகர ஈறும், சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும்—சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன்னொடு சிவணும்—அன்சாரியையோடு பொருந்தும், ஆவயின் ஆன ஆய்தம் கெடுதல்—அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும்; எ-று.

(எ-டு.) யாதனை யாதனொடு எனவும் அதனை அதனொடு, இதனை இதனொடு, உதனை உதனொடு எனவும் வரும்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yātu eṉ iṟutiyum cuṭṭu mutal ākiya
āyta iṟutiyum aṉṉoṭu civaṇum
āytam keṭutal āvayiṉāṉa.