தொல்காப்பியம் 239 · எழுத்து 7.36

Section எழுத்ததிகாரம் / 7. உயிர்மயங்கியல்Poet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

இ என்னும் சுட்டின் புணர்ச்சி இயல்பு, முன்னர் அ என்னும் சுட்டுக்குச் சொன்னதைப் போன்றதே. மெல்லெழுத்து வந்தால் அது மிகும்: இஞ்ஞாண், இந்நூல், இம்மணி. ய, வ அல்லது உயிர் வந்தால் இடையில் வகரம் தோன்றும்: இவ்யாழ், இவ்வடை. செய்யுளில் சுட்டு நீண்டு ஈவயினான் எனவும் வரும்.

இளம்பூரணர்

இளம்பூரணர் இ என்னும் சுட்டின் புணர்ச்சி அ என்னும் சுட்டுக்கு முன் கூறியதைப் போன்றதே என நேர்பொருள் கொள்வார்.

நச்சினார்க்கினியர்

அகரச் சுட்டுக்கு முன் கூறிய நான்கு நூற்பாக்களின் இலக்கணமும் இங்கே அடங்கும் என்று விளக்குகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The behaviour of the demonstrative is as stated before.

What the poem says

The demonstrative i joins exactly as the demonstrative a did earlier in this iyal (tol.206–209). Before a soft consonant (ñ, n, m) the soft consonant is doubled: iññāṉ, innūl, immaṇi. Before y or v, and before a vowel, a v is inserted: ivyāḻ, ivvaṭṭu, ivvaṭai, ivvāṭai. In verse the demonstrative may lengthen: īvayiṉāṉ.

Nacciṉārkkiṉiyar lists these four points from the four earlier nūṟpās. He also notes the poetic form ī "here, this" in old verse as an instance of the lengthening.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது இகர ஈற்றுச் சுட்டுப் பெயர் இயல்பு கணத்தோடு முடியுமாறு கூறுதலின் எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.) சுட்டின் இயற்கை—இகர ஈற்றுச் சுட்டின் இயல்பு, முன் கிளந்தற்று—முன் அகர ஈற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம்; எ-று.

என்றது, ‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்’ (எழு-௨௦௫) என்பது முதலிய நான்கு சூத்திரத்தானுங் கூறிய இலக்கணங்களே; அவை மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும் இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் வகரம் பெறுதலுஞ் செய்யுட்கண் வகரங் கெட்டுச் சுட்டு நீடலுமாம்.

(எ-டு.) இஞ்ஞாண் நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு எனவும் இவ்வடை இவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வுரல் இவ்வூர்தி இவ்வெழு இவ்வேணி இவ்வையம் இவ்வொடு இவ்வோக்கம் இவ்வௌவியம் எனவும், ‘ஈவயினை’ எனவும் வரும்.

‘ஈ காண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே’

என்றதும்,

‘கள்வனே வல்லன் கணவனென் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றனரே யீதொன்று’ (சிலப்-ஊர்சூழ்வரி-௭)

என்றதும் இதுவென்னுஞ் சுட்டு முதல் உகர ஈறுதலின் அது செய்யுளகத்துப் புறனடையான் முடியுமென உணர்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṭṭiṉ iyaṟkai muṉ kiḷantaṟṟē.