தொல்காப்பியம் 240 · எழுத்து 7.37

Section எழுத்ததிகாரம் / 7. உயிர்மயங்கியல்Poet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தூணி என்னும் அளவுப்பெயரின் முன் பதக்கு என்னும் அளவுப்பெயர் வந்தால், இகர ஈற்றுப் பெயருக்கு முதலில் சொன்ன வேற்றுமை முடிபு போலவே வல்லெழுத்து மிகும். தூணிப்பதக்கு என வரும்.

இளம்பூரணர்

இளம்பூரணர் தூணி என்பதன் முன் பதக்கு வரும்போது வேற்றுமை முடிபு போல வல்லெழுத்து மிகும் என நேர்பொருள் கொள்வார்; தூணிப்பதக்கு என்பது இதற்குரிய எடுத்துக்காட்டு.

நச்சினார்க்கினியர்

இது உம்மைத்தொகை என்றும், அல்வழியில் வர வேண்டிய ஏ என்னும் சாரியையை விலக்கி வேறு முடிபு கூறியது என்றும் கூறுவர். தூணித்தூணி, காணிக்காணி போன்றவற்றுக்கும் இதையே நீட்டுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If patakku comes after it, the word tūṇi
  2. is like the case rule first stated and taken up.

What the poem says

Tūṇi and patakku are grain measures. When patakku follows tūṇi, the joining follows the case rule stated first for i-final nouns (tol.236): the hard consonant is doubled, giving tūṇippatakku "a tūṇi and a patakku". Nacciṉārkkiṉiyar notes that this is an ummaittokai "compound with 'and' understood", not a case compound, and that the rule replaces the ē-increment the measure word would otherwise get in alvaḻi joining.

He extends it to cases with a numeral before patakku (iru tūṇip patakku), to tūṇi before other nouns (tūṇikkoḷ), and to a word repeated (tūṇittūṇi, kāṇikkāṇi), where an -ikku- increment may also appear (tūṇikkut tūṇi).

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது இவ்வீற்று அளவுப்பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் அல்வழியில் எய்திய ஏபென் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது.

(இ-ள்.) தூணிக் கிளவிமுன் பதக்கு வரின்—தூணியாகிய அளவுப்பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அளவுப்பெயர் வருமாயின், முதற் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று—முன்பு விதந்தெடுத்த வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.

(எ-டு.) தூணிப்பதக்கு எனவரும். இஃது உம்மைத் தொகை.

வருமொழி முற்கூறிய வதனான் அடையொடு வந்துழியும் இவ் விதி கொள்க. இரு தூணிப் பதக்கு முத்தூணிப் பதக்கு என ஒட்டுக. கிளந்தெடுத்த வென்றதனால் தூணிக்கொள் சாமை தோரை பாளிதம் எனப் பொருட்பெயர் முன் வந்துழியும், இரு தூணிக்கொள் என அதுதான் அடையடுத்துழியும், தூணித்தூணி தொடித்தொடி காணிக்காணி பூணிப் பூணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ்விதி கொள்க.

இன்னும் இதனானே தன் முன்னர்த் தான் வந்துழியும் அதுதான் அடையடுத்து வந்துழியும் இக்குச்சாரியை பெறுதலுங் கொள்க. தூணிக்குத் தூணி இரு தூணிக்குத் தூணி எனவரும். இவற்றுட் பண்புத் தொகையும் உள.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1patakku muṉ variṉē tūṇik kiḷavi
mutal kiḷantu eṭutta vēṟṟumai iyaṟṟē.