தொல்காப்பியம் 321 · எழுத்து 8.25
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும், எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரும், தாம், நாம், யாம் என முதலெழுத்து குறுகும் பெயர்களும் வேற்றுமைப் பொருளில் புணரும்போது, உருபுகளோடு புணர்ந்த முறையிலேயே சாரியை பெற்றுப் புணரும்; அங்கே மெல்லெழுத்தும் மிகும். எல்லார்தங்கையும், எல்லீர்நுங்கையும், தங்கை, நங்கை, எங்கை என வரும்.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா எல்லாரும், எல்லீரும், தாம், நாம், யாம் என்பவை வேற்றுமையில் உருபுப் புணர்ச்சி போல முடிந்து மெல்லெழுத்து மிகுவதைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
ஞகர நகரம் வரும்போது தஞ்ஞாண், நஞ்ஞாண் என ஒற்று இரட்டுவதையும், தம்மணி என மகரம் கெடாமல் நிற்பதையும் இதனுள் அடக்குகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The third-person name and the second-person name,
- and the words whose first part shortens,
- if in the case relation, keep the pattern of the case suffixes;
- and the soft consonant is doubled there.
What the poem says
Three kinds of words are meant: ellārum "all (they)", the third-person form; ellīrum "all (you)", the second-person form; and tām, nām, yām, whose long first vowel shortens (to tam, nam, em). In the case relation they join as they do with the case suffixes in the Urupiyal, taking the same augments, and the nasal is doubled.
Nacciṉārkkiṉiyar's examples: ellārtaṅkaiyum "the hands of all of them", ellīrnuṅkaiyum "the hands of all of you", and taṅkai, naṅkai, eṅkai "their, our, my hand", with cevi, talai, puṟam in place of kai. He adds that before ñ and n the consonant is geminated, as in taññāṇ, naññāṇ, and that the m may also stay, as in tammaṇi.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இஃது உயர்திணைப்பெயரும் விரவுப் பெயரும் உருபியலுள் முடிந்தவாறே ஈண்டுப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் முடியுமென எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்.) படர்க்கைப்பெயரும் முன்னிலைப் பெயரும்—எல்லாருமென்னும் படர்க்கைப் பெயரும் எல்லீருமென்னும் முன்னிலைப் பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்—கிளைத் தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகி முடியுந் தாம் நாம் யாமென்னும் பெயராகிய நிலைமையையுடைய சொல்லும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும்—வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணாயின் உருபுபுணர்ச்சிக்குக் கூறிய இயல்பின் கண்ணே நின்று முடியும், ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல்—மேல் நெடுமுதல் குறுகும் மொழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
(எ-டு.) எல்லாருமென்பதனை மகர ஒற்றும் உகரமுங் கெடுத்து ரகரப் புள்ளியை நிறுத்திக் கை செவி தலை புறம் எனத் தந்து இடையிலே தம்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையுங் கொடுத்து எல்லார் தங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. இதற்கு ‘அம்மினிறுதி’ (எழு-௧௨௯) என்னுஞ் சூத்திரத்துள் ‘தன்மெய்’ என்றதனாற் பிற சாரியைக்கண் மகர ஒற்றுத் திரிந்து ‘ஙஞநவாகும்’ எனச் செய்கை செய்து முடிக்க. எல்லீருமென்பதற்கு இடையிலே நும்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையும் கொடுத்து முற்கூறிய செய்கைகளெல்லாஞ் செய்து எல்லீர் நுங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. தாம் நாம் என்பனவற்றை ‘ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும்’ (எழு-௧௮௮) எனக் குறுக்கி ‘மகர விறுதி’ (எழு-௩௧௦) என்பதனான் மகரங் கெடுத்துத் தங்கை நங்கை செவி தலை புறம் என முடிக்க. யாம் என்பதனை ஆகாரத்தை எகரமாக்கி யகர ஒற்றைக் கெடுத்து ‘மகரவிறுதி’ (எழு-௩௧௦) என்றதனால் மகரங் கெடுத்து எங்கை செவி தலை புறம் என முடிக்க. தொடக்கங் குறுகுவனவற்றிற்கு இச் சூத்திரத்தான் மெல்லெழுத்து மிகுக்க.
உருபியல் நிலையும் என்பதனான் வேற்றுமையாதல் பெறு[?]ற்கவும் பின்னும் வேற்றுமையாயினென்ற மிகையானே படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் இயல்புகணத்து ஞகாரமும் நகாரமும் வந்துழித் தம்முச்சாரியையும் நும்முச்சாரியையும் பெறுதலும் மகரங்கெட்டு உம்முப் பெறுதலும் ஆவயினான என்றதனான் ஒற்று இரட்டுதலுங் கொள்க. எல்லார்தஞ்ஞாணும் எல்லீர் நுஞ்ஞாணும் நூலும் என வரும்.
இனித் தொடக்கங் குறுகுவனவற்றிற்கும் அவ்விரண்டு இலேசானும் மகரங்கெடுதலும் ஒற்று இரட்டுதலுங் கொள்க. தஞ்ஞாண் நஞ்ஞாண் எஞ்ஞாண் நூல் என வரும்.
இன்னும் ஆவயினான என்றதனானே எல்லார்தம் எல்லீர் நும் என நின்றவற்றின் முன்னர் ஏனை மணி யாழ் வட்டு அடை என்பன வந்துழி மகரங் கெடாமையும் உம்முப் பெறுதலுங் கொள்க.
இன்னும் இதனானே தொடக்கங் குறுகுவனவற்றிற்குந் தம்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையுங் கொள்க.
இன்னும் இதனானே தமகாணம் நமகாணம் எமகாணம் நுமகாணம் என உருபீற்றுச் செய்கைகளுங் கொள்க.
இன்னும் இதனானே நும் என்பதற்கு மகரத்தை மெல்லொற்றாக்கி நுங்கை செவி தலை புறம் என வருதலும், நுஞ்ஞாண் என ஒற்றிரட்டுதலும், நும்வலி என மகரம் கெடாது நிற்றலுங் கொள்க.
இன்னும் இதனானே எல்லார்கையும் எல்லீர்கையும் எனத் தம்மும் நும்முப் பெறாது நிற்றலுங் கொள்க.