தொல்காப்பியம் 322 · எழுத்து 8.26
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
மேலே சொன்ன எல்லாரும், எல்லீரும், தாம், நாம், யாம் என்னும் பெயர்கள் அல்வழியில் சாரியை பெறாமல் இயல்பாகவே புணரும். எல்லாருங்குறியர், எல்லீருங்குறியீர், தாங்குறியர், நாங்குறியம், யாங்குறியேம் என வரும்.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா அவையே அல்வழியில் இயல்பாகப் புணர்வதைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
இயற்கை என்றது சாரியை பெறாமையைக் குறிக்கும்; இறுதி மகரம் மெல்லெழுத்தாகத் திரிவது அல்வழி எல்லாம் என்ற நூற்பாவால் முடியும் என்று விளக்குகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When speaking of the non-case relation, it is the natural form.
What the poem says
In the non-case relation the same words, ellārum, ellīrum, tām, nām, yām, take no augment and do not shorten; they stay in their natural form. Their final m changes to the matching nasal by the general rule of nūṟpā 315: ellāruṅ kuṟiyar "all of them are short", ellīruṅ kuṟiyīr, tāṅ kuṟiyar, nāṅ kuṟiyam, yāṅ kuṟiyēm.
Nacciṉārkkiṉiyar says "natural" refers to the absence of augments, and that the change of the final m is already covered elsewhere. Before verbs beginning with other sounds the m stays: ellārum vantār, nām varutum.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது முற்கூறிய மூன்று பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) அல்லது கிளப்பின் இயற்கை யாகும்—அம்மூன்று பெயரும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும்.
ஈண்டு இயற்கையென்றது சாரியை பெறாமை நோக்கி. இவற்றின் ஈறுதிரிதல் ‘அல்வழி யெல்லாம்’ (எழு-௩௧௪) என்பதனுள் எல்லாமென்றதனாற் கொள்க.
(எ-டு.) எல்லாருங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், எல்லீருங் குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் எனவும், தாங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், தாங்குறிய சிறிய தீய பெரிய எனவும், நாங்குறியம் சிறியம் தீயம் பெரியம் எனவும், யாங்குறியேம் சிறியேம் தீயேம் பெரியேம் எனவும் வரும்.
இன்னும் எல்லாமென்றதனானே இவற்றின் முன்னர் ஞகார நகாரம் வந்தால் அவை அவ்வொற்றாய்த் திரிதல் கொள்க. எல்லாருஞ் ஞான்றார் நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர் நீண்டீர் எனவும், தாஞ் ஞான்றார் நீண்டார் எனவும், நாஞ் ஞான்றாம் நீண்டாம் எனவும், யாஞ் ஞான்றேம் நீண்டேம் எனவும் வரும்.
இனி எல்லாரும் வந்தார் யாத்தார் அடைந்தார், எல்லீரும் வந்தீர் யாத்தீர் அடைந்தீர் எனவும், தாம் வந்தார் யாத்தார் அடைந்தார் எனவும், நாம் வருதும் யாத்தும் அடைதும், யாம்வருவேம் யாப்பேம் அடைவேம் எனவும் ஏனைக் கணங்களின் முன்னர் மகரந் திரியாது நிற்றலும் ‘உயிரீறாகிய உயர்திணைப் பெயரும்’ (எழு-௧௫௩) என்பதனான் முடியும்.