தொல்காப்பியம் 323 · எழுத்து 8.27

Section எழுத்ததிகாரம் / 8. புள்ளிமயங்கியல்Poet தொல்காப்பியர்Lines 3

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

எல்லாம் என்னும் விரவுப்பெயர் அல்வழியிலும் வேற்றுமையிலும் உருபுகளோடு புணர்ந்த முறையிலேயே உம் பெற்றுப் புணரும்; ஆனால் அல்வழியில் வற்றுச் சாரியை வராது. அல்வழியில் எல்லாக் குறியவும் சிறியவும் என்றும், வேற்றுமையில் எல்லாவற்றுக் கோடும் என்றும் வரும்.

இளம்பூரணர்

இவர் உரையும் இந்நூற்பா எல்லாம் என்பது இருவழியிலும் உருபுப் புணர்ச்சி போல முடிவதையும், அல்வழியில் வற்றுச் சாரியை வாராததையும் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.

நச்சினார்க்கினியர்

மெல்லினம் இடையினம் வரும்போது எல்லா ஞாணும் நூலும், எல்லா யாழும் என வருவதையும் இதனுள் அடக்குகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Both when speaking of the non-case relation and in the case relation,
  2. the noun ellām keeps the pattern of the case suffixes;
  3. in the non-case relation the augment does not stay.

What the poem says

Ellām "all" is a common noun used for both classes (viravuppeyar). In both relations it joins as it does before case suffixes, taking the final um; but in the non-case relation the augment vaṟṟu does not appear. So in the non-case relation ellāk kuṟiyavum ciṟiyavum "all the short and small ones", with m dropped and the hard consonant doubled; in the case relation ellāvaṟṟuk kōṭum "the branches of all", with vaṟṟu and um.

Nacciṉārkkiṉiyar also derives ellā ñāṇum nūlum maṇiyum and ellā yāḻum before other consonants, and ellāvaṟṟu ñāṇum in the case relation.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது இவ் வீற்றுள் விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் உருபியலோடு மாட்டெறிந்து எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.) அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்—அல்வழிக்கட் சொல்லினும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கட் சொல்லினும், எல்லாமெனும் பெயர் உருபியல் நிலையும்—எல்லாமென்னும் விரவுப்பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று முடியும், வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது—அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியல்லாத இடத்து வற்றுச் சாரியை நில்லாதாய் முடியும்; எ-று.

உருபியல் நிலையும் என்ற மாட்டேறு அல்வழிக்கண் உம்முப் பெற்று நிற்றலும் பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்மும் பெற்று நிற்றலும் உணர்த்திற்று.

உம்முச்சாரியை ஒன்றுமே பெற்று முடிகின்ற வேற்றுமையோடு உடனோதி அதுவும் வற்றுப் பெறுமாறுபோல மாட்டெறிந்த மிகையானே வன்கணத்து அல்வழிக்கண் நிலைமொழி மகரக்கேடும் வருமொழி வல்லெழுத்துப் பேறும், மென்கணத்து மகரங்கெட்டு உம்முப் பெற்றும் பெறாதும் வருதலும், ஏனைக் கணத்து மகரங்கெட்டு உம்முப் பெற்றும் மகரங் கெடாதும் உம்முப் பெறாதும் வருதலுங் கொள்க.

(எ-டு.) எல்லாக் குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் எனவும், எல்லா ஞாணும் நூலும் மணியும் எனவும், எல்லாஞான்றன நீண்டன மாண்டன எனவும், எல்லா யாழும் வட்டும் அடையும் எனவும், எல்லாம் வாடின ஆடின எனவும் வரும் இனி வேற்றுமைக்கண் எல்லாவற்றுக் கோடும் செவியும் தலையும் புறமும் என இவை வற்றும் உம்மும் பெற்றன. இவற்றிற்கு மகரம் வற்றின் மிசை யொற்றென்று கெடுக்க. இனி மென்கணத்துக்கண் எல்லாவற்று ஞாணும் நூலும் மணியும் எனவும் ஏனைக் கணத்துக்கண் எல்லாவற்றியாப்பும் வலியும் அடையும் எனவும் வரும். ஏனைக் கணமும் வற்றும் உம்மும் பெற்றன.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1allatu kiḷappiṉum vēṟṟumaikkaṇṇum
ellām eṉum peyar urupu iyal nilaiyum
vēṟṟumai al vaḻic cāriyai nilaiyātu.