தொல்காப்பியம் 324 · எழுத்து 8.28

Section எழுத்ததிகாரம் / 8. புள்ளிமயங்கியல்Poet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

எல்லாம் என்னும் சொல் அல்வழியில் வல்லெழுத்து மிகுவதோடு, மெல்லெழுத்து மிகுந்து வந்தாலும் குற்றம் இல்லை. எல்லாக் குறியவும் என்பதோடு எல்லாங் குறியவும் என்றும் வரலாம்.

இளம்பூரணர்

மானம் என்பதைக் குற்றம் எனப் பொருள் கொள்வார். இவர் உரையும் இந்நூற்பா எல்லாம் என்பதற்கு அல்வழியில் மெல்லெழுத்து மிகுதலும் உண்டு என்பதைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.

நச்சினார்க்கினியர்

வல்லெழுத்து மிகுவதே பெரும்பான்மை என்றும், உயர்திணையில் எல்லாங் குறியரும், எல்லாச் சான்றோரும் என வருவனவும் இதனால் கொள்ளப்படும் என்றும் கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if the soft consonant is doubled, there is no fault.

What the poem says

A supplement to the previous rule. In the non-case relation, ellām may take the matching nasal instead of a doubled hard consonant, and this is not an error: ellāṅ kuṟiyavum alongside ellāk kuṟiyavum.

Nacciṉārkkiṉiyar notes that the hard-consonant form remains the commoner one, and uses the word "no fault" (māṉam illai) to bring in further human-class forms such as ellāṅ kuṟiyarum and ellāc cāṉṟōrum.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது ஒருசார் வல்லெழுத்தை விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

(இ-ள்.) மெல்லெழுத்து மிகினும் மானமில்லை—அவ்வெல்லாமென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை; எ-று.

எனவே, வல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மையாயிற்று. முற்கூறிய செய்கைமேலே இது கூறினமையின் மகரக் கேடும் உம்முப் பேறுங் கொள்க.

எல்லாங் குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும்.

மானமில்லை என்றதனான் உயர்திணைக்கண் வன்கணத்து மகரங் கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப் பெற்று முடிதலும், இயல்பு கணத்துக்கண் மகரங்கெட்டு உம்முப் பெற்று முடிதலுங் கொள்க. எல்லாக் கொல்லரும் சோன்றும் தச்சரும் பார்ப்பாரும் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் எனவும், எல்லா ஞான்றும் நாய்கரும் மணிகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும்.

இன்னும் இதனானே உயர்திணைக்கண் எல்லாங்குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என மகரங் கெட்டு மெல்லெழுத்து மிக்கு உம்முப் பெறுதலும், எல்லாங் குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், குறியீர் குறியம் என உம்முப் பெறாது வருதலுங் கொள்க.

இன்னும் இதனானே இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் மகரங் கெடாது உம்மின்றி வருதலுங் கொள்க. எல்லாம் வந்தேம் அடைக்தேம் என வரும்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1melleḻuttu mikiṉum māṉam illai.