தொல்காப்பியம் 431 · எழுத்து 9.25
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
உண்டு என்னும் சொல் உண்மைப் பண்பைக் குறிக்கும்போது, அதன் முன் வல்லெழுத்து வந்தால், இறுதியில் உள்ள டு என்பது மெய்யோடு கெடுவதும், அதற்கு முன் உள்ள ணகரம் ளகரமாக மாறுவதும் ஆகிய இரண்டு மாற்றங்களும் உரிமையாக நிகழும். உண்டு என்பதும் பொருள் என்பதும் சேர்ந்து உள்பொருள் ஆகிறது; மாறாமல் உண்டுபொருள் என்றும் வரும்.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா உண்மைப் பொருளில் வரும் உண்டு என்பதன் இருவகை முடிபைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
இம்மாற்றம் கட்டாயம் அன்று, விருப்பத்துக்கு உரியது என்று விளக்குகிறார்; பகரம் வரும் இடத்திலேயே இது பெரும்பாலும் நடக்கும் என்றும் கூறுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The word uṇṭu, when it speaks of existence,
- the loss of the prior ending together with its consonant,
- and the consonant above it becoming ḷ —
- both of these, in order, it has as its right,
- at the time when a hard consonant follows.
What the poem says
When uṇṭu means "being, existence" (a quality, not the verb "there is"), and a hard consonant follows, it may lose its final ṭu and turn its ṇ into ḷ. Uṇṭu + poruḷ thus gives uḷporuḷ "a thing that exists, a real thing", besides the unchanged uṇṭuporuḷ.
Nacciṉārkkiṉiyar stresses that the change is optional ("it has as its right"): the unchanged form also stands. He takes "when a hard consonant follows" to show that the change happens mainly before p, and notes that before other consonants or vowels uṇṭu stays as it is (uṇṭu kāṉam, uṇṭu ñāṉam). He separates this from the adjectival compound uḷporuḷ: here, he says, the two words are spoken with a slight break.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது மென்றொடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்றதொரு சொற் பண்பை உணர்த்துங்கால் வேறுமுடிபு பெறுதல் கூறுகின்றது.
(இ-ள்.) உண்டென் கிளவி உண்மை செப்பின் — உண்டென்னுஞ் சொல்வினைக்குறிப்பை யுணர்த்தாது ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மையாகிய பண்பை உணர்த்தி நிற்குமாயின், முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும் — முன்னர் நின்ற குற்றுகரம் தான் ஏறி நின்ற மெய்யொடுங் கெடுதலும், மேனிலை ஒற்றே ளகாரமாதலும் — அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகார ஒற்றாதலுமாகிய, ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்து — அம் முறையினையுடைய இரண்டு நிலையும் உரித்து; அஃது உரித்தன்றி முன்னர் நின்ற நிலையிலே கேடுந் திரிபும் இன்றி நிற்றலும் உடைத்து; வல்லெழுத்து வரூஉங் காலையான — வல்லெழுத்து முதன் மொழியாய் வருங்காலத்து; எ-று.
வல்லெழுத்து அதிகாரத்தால் வாராநிற்பவும் வல்லெழுத்து வரூஉங்காலை என்றதனான் அவ்விருமுடிபும் உளவாவது பண்பை யுணர்த்தும் பகரம் வரும் மொழிக்கண்ணே யென்பதூஉம் ஏனைக் கசதக்களிலும் இயல்புகணத்தினும் உண்டென நின்று வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நிற்கு மென்பதூஉங் கொள்க.
(எ-டு.) உள்பொருள் உண்டுபொருள் எனவரும். இது பொருண்மை சுட்டாது உண்மைத் தன்மைப் பண்பை ஈண்டு உணர்த்திற்று. இனி உண்டுகானம் உண்டுசாக்காடு உண்டுதாமரை உண்டு ஞானம் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வருவனவெல்லாங் கேடுந் திரிபுமின்றி வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நின்றன. இவற்றுள் வேறுபாடு வினையியலுள் வினைக்குறிப்பு ஓதும் வழி உணர்க
உள்பொருளென்பது பண்புத் தொகை முடிபன்றோ வெனின், அஃது ஓசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியது போலும். இஃது ஓசை இடையறவுபடச் சொல்லும் வழியதென்க.