தொல்காப்பியம் 433 · எழுத்து 9.27
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
பெருந்திசைப் பெயர்களைக் கோணத் திசையைக் குறிக்கும்படி வேறாகப் புணர்க்கும்போது, நிலைமொழியின் இறுதி உகரமும் அது ஏறிய மெய்யும் கெட வேண்டும் என்று புலவர் கூறுவர். தெற்கு என்பதோடு புணரும்போது அதன் றகர மெய் னகரமாக மாறும். வடக்கு, கிழக்கு சேர்ந்து வடகிழக்கு ஆகிறது; தெற்கு, கிழக்கு சேர்ந்து தென்கிழக்கு ஆகிறது.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா கோணத் திசையைக் குறிக்கும்போது திசைப்பெயர்கள் திரியும் முறையைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
‘திரிந்து’ என்பதால் வடக்கு என்பதில் உள்ள ககர ஒற்றும் கெடும் என்றும், திசைப் பெயரோடு பொருட்பெயர் வந்தாலும் இம்முடிபு உண்டு என்றும் கூறுகிறார்: வடகடல், தென்குமரி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When change is spoken of separately, the consonant and the u
- must be lost, say the learned;
- the consonant changes and becomes ṉ
- when it joins with teṟku.
What the poem says
When a main direction is joined to another to name an intermediate direction (a "different" joining), the final u of the first word is lost together with the consonant it rides on; and when the first word is teṟku "south", its ṟ also becomes ṉ. Vaṭakku + kiḻakku gives vaṭakiḻakku "north-east"; teṟku + kiḻakku gives teṉkiḻakku "south-east", teṉmēṟku "south-west".
Nacciṉārkkiṉiyar glosses "separately" as joining a main direction with an intermediate sense. From "changes" he drops the k of vaṭakku as well, and he extends the rule to ordinary nouns after direction words: vaṭakaṭal, vaṭavēṅkaṭam, teṉkumari, teṉilaṅkai. He also brings in kīḻkarai and mīkarai from kiḻakku and mēṟku.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது பெருந்திசைகளோடு கோணத்திசைகளைப் புணர்த்தலின் எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்.) திரிபுவேறு கிளப்பின் — அப்பெருந் திசைகளோடு கோணத் திசைகளை வேறாகப் புணர்க்குமிடத்து, ஒற்றும் உகரமுங் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் — அவ்வுகரம் ஏறி நின்ற ஒற்றும் அவ் வீற்று உகரமுங் கெட்டுமுடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு புணருங் காலை — அது தெற்கென்னுந் திசையொடு புணருங் காலத்து, ஆன ஒற்று மெய் திரிந்து னகாரமாகும் — அத்திசைக்குப் பொருந்தி நின்ற றகார ஒற்றுத் தன் வடிவு திரிந்து னகர ஒற்றாய் நிற்கும்; எ-று.
திரிந்தென்றதனான் வடக்கென்பதன்கண் நின்ற ககர ஒற்றுக் கெடுத்து முடித்துக் கொள்க.
(எ-டு.) வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென்மேற்கு என வரும்.
வேறென்றதனால் திசைப் பெயரோடு பொருட்பெயர் வரினும் இம்முடிபு கொள்க. வடகடல் வடசுரம் வடவேங்கடம் தென்குமரி தென்சுரம் தென்னிலங்கை என வரும்.
மெய்யென்றதனான் உயிர் கெட்டுந் திரிந்தும் மெய் கெட்டும் முடிவனவும் உள, திசைப்பெயர் முன்னர்ப் பொருட்பெயர் வந்துழி யென்று உணர்க. கிழக்கு என்பது கரை கூரை என்பவற்றோடு புணருமிடத்துக் கீழ்கரை கீழ்கூரை என நிலைமொழியிறுதி உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல் நின்ற ககர ஒற்றும் ழகரத்தில் அகரமுங் கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தன. மேற்கு கரை கூரை மீகரை மீகூரை என நிலைமொழி ஈற்று, உகரம் மெய்யொடுங்கெட்டு அதன் மேல் நின்ற றகர ஒற்றுங் கெட்டு ஏகாரம் ஈகாரமாகி முடிந்தன. இன்னும் இதனானே மேன்மாடு மேல்பால் மேலைச்சேரி என்றாற் போல்வனவுஞ் செய்கையறிந்து முடிக்க.