தொல்காப்பியம் 45 · எழுத்து 2.12

Section எழுத்ததிகாரம் / 2. மொழி மரபுPoet தொல்காப்பியர்Lines 3

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

ஓரெழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒருமொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஒலிக்கும் தொடர்மொழி என மொழிகளின் நிலை மூன்றே; அவை வழக்கில் தோன்றிய நெறி இதுவே. ஆ, கா என்பவை ஓரெழுத்துச் சொற்கள்.

இளம்பூரணர்

இளம்பூரணர் சொற்கள் ஓரெழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒருமொழி, தொடர்மொழி என மூன்று வகையே என நேர்பொருள் கொள்வார். எழுத்துகளை எண்ணும்போது ஒற்றையும் குற்றியலுகரத்தையும் விலக்கும் நச்சினார்க்கினியரின் முறையை இவரும் பின்பற்றுகிறாரா என்பது இங்கு சரிபார்க்கப்படவில்லை.

நச்சினார்க்கினியர்

உயிர் ஏறிய எழுத்துகளை மட்டுமே எண்ணுகிறார்; ஒற்றையும் குற்றியலுகரத்தையும் எண்ணுவதில்லை. ஆகவே மணி, வரகு, கொற்றன் ஈரெழுத்துச் சொற்கள்; குரவு, அரவு மூவெழுத்து; அகத்தியனார் ஐந்தெழுத்து; திருச்சிற்றம்பலம் ஆறெழுத்து; பெரும்பற்றப்புலியூர் ஏழெழுத்து என்கிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The one-letter word, the two-letter word,
  2. and including the multi-letter word that sounds beyond two,
  3. just three are the forms of words, in the way they have appeared.

What the poem says

Words are of three kinds by length: one letter (ā, kā), two letters, and more than two (toṭarmoḻi "continuous word").

Nacciṉārkkiṉiyar counts only letters that carry a vowel, leaving out pure consonants and the shortened u, so for him maṇi, varaku and koṟṟaṉ are two-letter words, kuravu and aravu three, kaṇaviri four, akattiyaṉār five, tirucciṟṟampalam six and perumpaṟṟappuliyūr seven. He argues that the author does not count consonants for this purpose, since prosody does not count them either.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இது முன்னர் மெய்ம்மயக்கம் உடனிலைமயக்கங் கூறலானும் ஈண்டு ‘நெட்டெழுத்தேழே’ (எழு-௪௩.) என்பதனானும் எழுத்தினான் மொழியாமாறு கூறினார். அம்மொழிக்கு இச்சூத்திரத்தாற் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றார்.

இ-ள்: ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி இரண்டிறந்து இசைக்குந் தொடர்மொழி உளப்பட — ஓரெழுத்தாகும் ஒருமொழியும் இரண்டெழுத்தாகும் ஒரு மொழியும் இரண்டனை இறந்து பலவாற்றான் இசைக்குந் தொடர்மொழியுடனே கூட, மொழி நிலை மூன்றே — மொழிகளின் நிலைமை மூன்றேயாம், தோன்றிய நெறியே — அவை தோன்றிய வழக்கு நெறிக்கண்; எ-று.

எ-டு: ஆ கா நா ஓரெழுத்தொருமொழி, மணி வரகு கொற்றன் ஈரெழுத்தொருமொழி, குரவு அரவு மூவெழுத்தொருமொழி, கணவிரி நாலெழுத்தொருமொழி, அகத்தியனார் ஐயெழுத்தொருமொழி, திருச்சிற்றம்பலம் ஆறெழுத்தொருமொழி, பெரும்பற்றப்புலியூர் ஏழெழுத்தொருமொழி.

ஓரெழுத்தொருமொழியுந் தொடர்மொழியும் என்னாது ஈரெழுத்தொருமொழியும் ஓதினார், சிலபல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி.

ஆசிரியர் ஒற்றுங் குற்றுகரமும் எழுத்தென்று கொண்டனராதலின் மா கா என நின்ற சொற்கள் மால் கால் என ஒற்றடுத்துழி ஒற்றினான் வேறுபொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழியென்றும், நாகு வரகு என்னுங் குற்றுகர ஈற்றுச் சொற்களிற் குற்றுகரங்கள் சொல்லொடு கூடிப் பொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழி மூவெழுத்தொருமொழி யென்றுங் கோடுமென்பார்க்கு, ஆசிரியர் பொருளைக் கருதாது மாத்திரை குறைந்தமை பற்றி ‘உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ’ (செய்யுளியல் - ௪௪.) ‘குறிலே நெடிலே குறிலிணை’ (செய்யுளியல்-௩.) என்னுஞ் செய்யுளியற் சூத்திரங்களால் இவற்றை எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா என்று விலக்குவராதலின், அவற்றால் ஈண்டு ஈரெழுத்தொருமொழியும் மூவெழுத்தொருமொழியும் கொள்ளின், மாறுகொளக் கூறல், என்னுங் குற்றந் தங்குமென்று மறுக்க.

இனி, ‘நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி’ (எழு-௪௩) ‘குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே’ (எழு-௪௪) என்பனவற்றான் மெய்க்குக் குறுமை நெடுமை யின்மையான் உயிரும் உயிர்மெய்யுமாகிய நெடிலுங் குறிலுமே மொழியாமென்று கூறி, மீட்டும் அதனையே இச்சூத்திரத்தான் ஓரெழுத்தொருமொழி யென்றெடுத்து அதனோடே ஈரெழுத்தையும் இரண்டிறந்ததனையுங் கூட்டி மொழியாகக் கோடலின், ஒற்றினைக் கூட்டி எழுத்தாகக் கோடல் ஆசிரியர்க்குக் கருத்தன்மை யுணர்க. அன்றியும் ‘மொழிப்படுத்திசைப்பினும்’ (எழு-௫௩) என்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்றவாற்றானும் உணர்க. ‘அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப’ (எழு-௧) என ஒற்றினையும் எழுத்தென்றது எழுத்தின் தன்மை கூறிற்று. ஈண்டு மொழியாந் தன்மை கூறிற்று.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōr eḻuttu orumoḻi īr eḻuttu orumoḻi
iraṇṭu iṟantu icaikkum toṭarmoḻi uḷappaṭa
mūṉṟē moḻi nilai tōṉṟiya neṟiyē.