தொல்காப்பியம் 46 · எழுத்து 2.13
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தனிமெய்களை வாயால் சொல்லும்போதும் எழுதிக் காட்டும்போதும் அவை அகரத்தோடு பொருந்தியே இயங்கும். வல்லெழுத்தை க, ச, ட, த, ப, ற என்று சொல்வதும், மெய்யை முதலில் அகரத்தோடு கூடிய வடிவில் எழுதிப் பின் புள்ளியிடுவதும் இதற்கு எடுத்துக்காட்டு.
இளம்பூரணர்
இளம்பூரணர் தனிமெய்களை ஒலித்துக் காட்டும்போது அவை அகரத்தோடு கூடியே இயங்கும் என நேர்பொருள் கொள்வார். இறைவன் உவமையும் திருக்குறள் மேற்கோளும் நச்சினார்க்கினியரின் விரிவு; அவை இவர் உரையில் உள்ளனவா என்பது இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
இறைவன் எல்லாப் பொருள்களிலும் கலந்து நிற்பது போல அகரமும் எல்லா எழுத்துகளிலும் கலந்து நிற்கும் என்று கூறி, அகர முதல எனத் தொடங்கும் திருக்குறளை எடுத்துக்காட்டுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The movement of a consonant goes together with a.
What the poem says
A consonant cannot be sounded or set down on its own: whenever it is named or written, a goes with it. One says "ka, ca, ṭa" in listing the hard letters, and the written consonant is first drawn in its a-form and then given the dot.
Nacciṉārkkiṉiyar adds that, as the twelve vowels too are pervaded by a, so a runs through all letters, as God pervades all things; he links this with the first couplet of the Kuṟaḷ, which compares a as first of letters to God as first of the world.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது.
இ-ள்: மெய்யினியக்கம் — தனிமெய்களினது நடப்பு, அகரமொடு சிவணும் — அகரத்தோடு பொருந்தி நடக்கும்; எ-று.
எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப்பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும் மூவகையாற் காட்சிப்பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு.
எ-டு: ‘வல்லெழுத் தென்ப கசடதபற’ (எழு-௧௯) ‘ககார ஙகார முதனா வண்ணம்’ (எழு-௮௯) என்றாற்போல்வன நாவால் இயக்கியவாறு காண்க. எழுதிக் காட்டுமிடத்துக் ககரம் முதலியன உயிர் பெற்று நின்ற வடிவாக எழுதிப் பின்னர்த் தனிமெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக் காட்டுகின்றவாற்றான் வடிவை இயக்குமிடத்தும் அகரங்கலந்து நின்றவாறு காண்க.
இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க. இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்பமுடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணுந் தனிமெய்க்கண்ணுங் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது, ‘அகரமுதல’ என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம் அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானுங், கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே யெனக் கூறியவாற்றானும் பிறநூல்களானும் உணர்க.
இதனான் உண்மைத்தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. இதனை நூன்மரபிற் கூறாது ஈண்டுக் கூறினார், ‘வல்லெழுத்தென்ப கசடதபற’ (எழு-௧௯) என்ற இடத்துத் தான் இடைநின்று ஒற்றென்பதோர் பொருளை உணர்த்தி மொழியாந்தன்மை எய்தி நிற்றலின்.