தொல்காப்பியம் 483 · எழுத்து 9.77

Section எழுத்ததிகாரம் / 9. குற்றியலுகரப்புணரியல்Poet தொல்காப்பியர்Lines 5

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
5

பொருள் · Meaning in TamilAI

இந்நூலில் கூறப்படாதனவாய், செய்யுளில் மாறி வருவனவும், வழக்கில் மருவி மாறி வருவனவும், முன்பு விளக்கிய இலக்கண முறையிலிருந்து வேறுபட்டுத் தோன்றினால், அவற்றை வழக்கு நடக்கும் இடத்தில் கவனித்து அறிந்து, நல்ல அறிவின் ஆராய்ச்சியால் முடிவு செய்ய வேண்டும் என்று புலவர் கூறுவர்.

இளம்பூரணர்

இவர் இந்நூற்பாவை எழுத்ததிகாரம் முழுவதற்குமான புறனடையாகக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இதற்கு இவர் காட்டும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.

நச்சினார்க்கினியர்

இது எழுத்ததிகாரம் முழுமைக்கும் புறனடை என்று கூறுகிறார். தடவுத்திரை, அதவத்தங்கனி போன்ற செய்யுள் வடிவங்களை இதனால் முடிக்கிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those not stated, which change in verse,
  2. and those which change by usage in the course of speech,
  3. if they appear differing from the nature described,
  4. one should treat them, understanding them in the course of use,
  5. with the search of a good mind, say the learned.

What the poem says

The closing rule of the whole Eḻuttatikāram. Forms that the book has not stated, whether they change in verse or change in everyday usage through custom, and so depart from the rules given, should be handled by observing actual usage and judging with a good mind.

Nacciṉārkkiṉiyar calls this the "outer guard" (puṟaṉaṭai) of the adhikāram and uses it to settle many forms not covered elsewhere, mostly from verse: taṭavuttirai with u and a doubled consonant, attu in atavattaṅkaṉi, am in naṟavaṅkaṇṇi. The rule is an open admission that the description is not complete, and it sends the student to usage and good sense.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது இவ் வதிகாரத்து எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றை யெல்லாம் இதனானே முடிக்க என அதிகாரப் புறனடை கூறுகின்றது.

(இ-ள்.) கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் — முன்னர் எடுத்தோதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத் திரிந்து முடிவனவும், வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் — நால்வகை வழக்கும் நடக்குமிடத்து மருவுதலோடு திரிந்து முடிவனவும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் — முன்னர்க் கூறிய இலக்கண முறைமையினின்றும் வேறுபடத் தோன்றுமாயின அவற்றை, நன்மதி நாட்டத்து — நல்ல அறிவினது ஆராய்ச்சியாலே, வழங்கியன் மருங்கின் — வழக்கு முடிந்து நடக்குமிடத்தே, உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனார் புலவர் — முடிபுவேறுபாடுகளை அறிந்து நடாத்துக என்று கூறுவர் புலவர்; எ-று.

(எ-டு.) ‘தடவுத்திரை’ என உகரமும் வல்லெழுத்தும் பெற்றுந் ‘தடவுநிலை’ (புறம்-௧௪௦) என உகரம் பெற்றும் அகர ஈற்று உரிச்சொல் வந்தது. அதவத்தங் கனி என வேற்றுமைக்கண் அகர ஈறு அத்துப் பெற்றது. கசதபத் தோன்றின் என அகர ஈற்றின் முன்னர்த் தகரங் கொடுக்க.

‘நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன் குரவ நீடிய கொன்றையங் கானல்’

என ஆகார இறுதி குறியதனிறுதிச் சினைகெட்டு இருவழியும் அம்முப் பெற்றன.

‘முளவுமா தொலைச்சிய பைந்நிணப் பிளவைப் பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ’ (மலைபடு-[?])

என அவ்வீறு அவ்வழிக்கண் அம்முப் பெறாத முடிபுபெற்றன. ‘திண்வளி விசித்த முழவொடாகுளி’ (மலைபடு-௩) ‘சுறவெறிமீன்’ ‘இரவழங்கு சிறுநெறி’ (அகம்-௩௧௮) இவை உகரம் பெறாமல் வந்தன. ‘கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அகம் ௧௭) என இகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. ‘தீயினன்ன வொண்செங்காந்தள்’ (மலைபடு-[?]) என ஈகார ஈறு வேற்றுமைக்கண் இன் பெற்றது. ‘நல்லொழுக்கங் காக்குந் திருவத்தவர்’ (நாலடி-[?]) என உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. ‘ஏப்பெற்ற மான்பிணை போல’ (சிந்தா-[?]) என ஏகார ஈறு வேற்றுமைக்கண் எகரம் பெறாது வந்தது. ‘கைத்துண்டாம் போழ்தே’ (நாலடி-௧௧) ‘கைத்தில்லர் நல்லர்’ (நான்மணிக்கடிகை-௪௧) எனவும், ‘புன்னையங்கானல்’ (அகம் - ௮௦) ‘முல்லையந்தொடையல்’ எனவும் ஐகார ஈறு வேற்றுமைக்கண் அத்தும் அம்முப் பெற்றன. ‘அண்ணல்கோயில் வண்ணமே’ (சிந்தா. நாமகள். [?]) என ஓகார ஈறு யகர உடம்படுமெய் பெற்றது.

இனி ‘அஞ்செவி நிறைய வாலின’ (முல்லைப்-௮௧) என அல்வழிக்கட் ககரமும் அகரமுங் கெட்டன. ‘மரவப் பாவை வயிறுரப் பருகி’ ‘மரவ காகம் வணங்கி மாற்கணம்’ என இருவழியும் மகரம் விகாரப்பட்டு அம்முப் பெற்றன. ‘காரெதிர் கானம் பாடினேமாக’ (புறம்-௧௪௪) ‘பொன்னந் திகிரி முன் சமத் துருட்டி’ ‘பொன்னங் குவட்டிற் பொலிவெய்தி’ என னகர ஈறு இருவழியும் அம்முப் பெற்றன ‘வேர்பிணி வெதிரத்துக் கால் பொரு நாலிசை’ (நற்றி-[?]) என ரகர ஈறுவேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. ‘காவலந் தண்பொழில்’ (பெரும்பாண்-[?]) ‘கானலம் பெருந்துறை’ (ஐங்குறு [?]) என லகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. ‘நெய்தலஞ் சிறுபறை’ இஃது அல்வழிக்கண் அம்முப் பெற்றது. ‘ஆயிடையிருபேராண்மை செய்த பூசல்’ (குறுந்-௪௧) என்புழி ஆயிடை என்பது உருபாதலின் ‘நீட வருதல்’ (எழு-[?]) என்பதனான் முடியாது நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது. தெம்முனை எனத் தெவ்வென்புழி வகரங்கெட்டு மகர ஒற்றுப்பெற்று முடிந்தது. அ என்னுஞ் சுட்டு ‘அன்றியனைத்தும்’ எனத் திரிந்தது. ‘முதிர் கோங்கின் முகை’ (குறிஞ்சிக்கலி-௨௦) எனவும் ‘காய்மாண்ட தெங்கின் பழம்’ (சிந்தா-[?]) எனவுங் குற்றுகர ஈறு இன்பெறுதலுங் கொள்க. ‘தொண்டு தலையிட்ட பத்துக்குறை’ என ணகரம் இரட்டாது தகர ஒற்று டகர ஒற்றாய்க் குற்றியலுகரம் ஏறி முடிந்தது.

இங்ஙனஞ் செய்யுளுட் பிறவுந் திரிவன உளவேனும் இப் புறனடையான் முடிக்க. அருமருந்தானென்பது ரகரவுகரங் கெட்டு அருமந்தானென முடிந்தது. சோழனாடு சோணாடு என அன் கெட்டு முடிந்தது. பாண்டி நாடும் அது. தொண்டைமானாடு தொண்டைநாடென ஈற்றெழுத்துச் சில கெட்டு முடிந்தது. மலையமானாடு மலாடு என முதலெழுத்தொழிந்தன பலவுங் கெட்டு முடிந்தது. பொதுவிலென்பது பொதியிலென உகரந் திரிந்து இகரமாய் யகர உடம்படுமெய் பெற்று முடிந்தது. பிறவும் இவ்வாறு திரிந்து மருவி வழங்குவன எல்லாம் இப் புறனடையான் அமைத்துக் கொள்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiḷanta alla ceyyuḷuḷ tirinavum
vaḻaṅku iyal maruṅkiṉ maruvoṭu tirinavum
viḷampiya iyaṟkaiyiṉ vēṟupaṭat tōṉṟiṉ
vaḻaṅku iyal maruṅkiṉ uṇarntaṉar oḻukkal
5naṉ mati nāṭṭattu eṉmaṉār pulavar.