கம்பராமாயணம் 1 · பால 1.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆசு அலம்புரி - குற்றத்தை மிகுதியாகச் செய்கின்ற; ஐம்பொறி வாளியும் - ஐந்து பொறிகளாகிய அம்புகளும்; காசு அலம்பு முலையவர் - மணியாரங்கள் ஒலிக்கின்ற மார்பகங்களை உடைய பெண்களின்; கண் எனும் பூசல் அம்பும் - கண்களாகிய போர்த்தொழில் வல்ல அம்புகளும்; நெறியின்புறம் செலாக் கோசலம் - ஒழுக்க நெறிக்கு அப்பால் செல்லாத கோசல நாட்டை; புனை ஆற்று அணி கூறுவாம் - அழகு செய்கின்ற (சரயு) ஆற்றின் அழகினைக் கூறுவோம். ஐம்பொறிகளும் மாதர் கண்களும் பொதுவாக ஒழுக்க நெறிகளை மீறி நடக்கத் தூண்டுவன; கோசல நாட்டின் ஆட்சியிலே செம்மை இருப்பதால் ஐம்பொறி வாளியும் மாதரார் கண்களும் நெறியின் புறம் செல்லாதனவாயின. 'நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே' (புறநா. 312) என்ற வாக்கு நாட்டவரின் செம்மைக்கு ஆட்சியே காரணம் என அறிவுறுத்துதல் காண்க.
இலக்கு நோக்கி விரைந்து பாய்தலின் ஐம்பொறிகளை வாளி (அம்பு) என்றார். ஐம்பொறி வாளி, கண் எனும் அம்பும் இலக்குப் பிழையாது விரைந்து பாயும் இயல்பினது; இதுவும் உருவகமே.
மக்களின் நல்லொழுக்கத்துக்கும் தீயவொழுக்கத்துக்கும் அவர் வாழும் நிலத்தின் தன்மை காரணமாகும் என்பர்; கோசலத்தின் நீர்நிலவளமே அந்நாட்டு மக்களின் ஒழுக்க மேம்பாட்டுக்குக் காரணம் என்பது குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The arrows of the five senses, which work great wrong,
- and the eyes of women whose breasts ring with jewels, those
- warring arrows, never stray beyond the right path in Kōcalam;
- of the river that adorns that land we shall now speak.
What the poem says
This verse opens the Chapter of the River, the first chapter of the Bāla Kāṇḍam. Following the conventions of the Tamil epic, the poet begins by describing the land and its river before the story itself. Here he announces his subject: the Sarayū, the river that adorns the kingdom of Kōcalam.
The five senses are pictured as arrows that fly swiftly to their targets and lead people into wrong, and so are the eyes of beautiful women. In Kōcalam, however, so just is its rule and so rich its land and water that neither ever strays beyond the path of right conduct.