கம்பராமாயணம் 10012 · யுத்த 36.251
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வந்து தாழ்ந்த துணைவனை - (தன்முன்) வந்து அடியிற் பணிந்த தம்பியாகிய வீடணனை; வள்ளலும் - வள்ளலாகிய இராமபிரானும்; தெள்ளியோய் - உலகம் தெளிவுற்ற மேலோனே!; சிந்தை வெம் துயர் தீருதி - (உன்) மனத்தே நிறையும் கொடுந்துயரை நீக்குவாயாக; அது முந்தை எய்தும் முறைமை ஆம் - (இறந்தோரால் எய்தும் துயர் துடைத்து ஆறுதல் கொள்வதே) முந்தையோர் கொண்ட முறைமையாகும்; எனா - என்று; அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான் - (வீடணன் கொண்ட) முடிவற்ற துன்பச்சுமையை (இராமபிரான் தன் இன்னுரைகளால்) நீக்கியருளினான்.
வீடணன் தெளிந்த உள்ளங் கொண்டோனாதலின் உணர்வான் என்று கருதி, பெருமான் "தெள்ளியோய்!" என்று அழைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the companion who came and bowed low, the generous one said,
- Put away the burning grief in your mind, O clear-sighted one;
- this is the way that those of old have followed,
- and so he lifted from him an endless weight of sorrow.
What the poem says
Irāmaṉ comforts Vīṭaṇaṉ, whom he has taken as a brother. He tells him that to wipe away grief for the dead and take consolation is the path the ancients followed. He addresses him as clear-sighted because Vīṭaṇaṉ has a settled, discerning mind and will grasp this. With these kind words Irāmaṉ lifts his boundless burden of sorrow. This verse closes the canto of Irāvaṇaṉ's death.