கம்பராமாயணம் 10013 · யுத்த 37.1

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருந்தவப் பயனால் அடைந்தாற்கு - தான் செய்த அரிய புண்ணியத்தின் பயனால் இராமனை வந்து அடைந்தவனாகிய வீடணனுக்கு இராமன்; நீதி மனு நெறி யாவையும் பொருந்து கேள்விப் புலமையினோய்! - நீதி நெறிகளையும் மனு தரும முறைகளையும் ஆகிய யாவற்றையும் நன்கு அறிந்து பொருந்திய கேள்வி ஞானத்தோடு கூடிய அறிவாற்றல் பொருந்திய வீடணனே!; வருந்தல் - வருத்தமுறாதே; எனா - என்று; அறைந்து - எடுத்துக் கூறி அவனை ஆற்றி); இருந்தவத்து இளையோற்கு - பெரிய தவச் செல்வத்தை உடைய இலக்குவனுக்கு; இது - (பின் வருகின்ற) இந்தச் செய்தியை; இயம்பினான் - எடுத்துரைத்தான்.

அறவுணர்வும் தரும சாஸ்திரமும் நிரம்பப் பெற்றவனாதலின் அண்ணன், உறவினர் முதலியோர் இறப்புக்கு வருந்துதல் தகுதியன்று என்பதாம். வீடணனது அருந்தவப் பயனை "நீதியும் தருமம் நின்ற நிலைமையும் புலமைதானும், ஆதி அம் கடவுளாலே அருந்தவம் ஆற்றிப் பெற்றாய்” என்ற கும்பகருணன் (கம்ப. 7406) கூற்றால் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Do not grieve, you whose learning, gained by listening, holds
  2. justice and every path of Manu's law, he said;
  3. having said this to the one who came to him as the fruit of rare penance,
  4. he spoke these words to his younger brother of great austerity.

What the poem says

The Return canto begins. Irāmaṉ tells Vīṭaṇaṉ, who has reached him as the reward of his own great merit, not to grieve: one so learned in justice and the law books should not mourn the death of kin. Earlier Kumpakaruṇaṉ had likewise praised Vīṭaṇaṉ for having won justice, righteousness and learning through severe penance. Irāmaṉ then turns to Ilakkuvaṉ with instructions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘varuntal nīti maṉu neṟi yāvaiyum
poruntu kēḷvip pulamaiyiṉōy! ‘eṉā
arun tavap payaṉāl aṭaintāṟku aṟaintu
irun tavattu iḷaiyōṟku itu iyampiṉāṉ.