கம்பராமாயணம் 10014 · யுத்த 37.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீ - இலக்குவனே நீ; சோதியான் மகன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; வாயுவின் தோன்றல் - காற்றுக் கடவுளின் மகனாகிய அனுமன்; மற்று ஏது இல் வானர வீரரொடு ஏகி - மற்றுள்ள குற்றம் இல்லாத குரங்கு வீரர்கள் ஆகியோருடன் புறப்பட்டுச் சென்று; நீதியானை - அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு; ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை - முதற்கடவுளாகிய நாராயணன் தந்த வேத விதிப்படி; நெடுமுடி சூட்டுவாய் - சிறந்த கிரீடத்தைச் சூட்டுவாய்;
ஏது - குற்றம். நீதியான் - வீடணன் என்பது முன்னும் கூறப்பட்டது. (கம்ப. 7625) பதினான்கு வருடம் வனவாசம் செய்வதாக மேற்கொண்ட விரதத்தால் இராமன் இலங்கை நகருட் புகாது இலக்குவனைச் சென்று முடிசூட்டச் செய்தான். கிட்கிந்தையில் சுக்கிரீவனுக்கு இலக்குவனைக் கொண்டு முடிசூட்டியதை இங்கு (கம்ப. 4//6) நினைக. நீதியானை - உருபு மயக்கம்; நான்காவதன்கண் இரண்டாவது வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the son of the Sun, the offspring of the Wind, and the rest
- of the faultless monkey warriors, you shall go,
- and by the scripture that the First Lord established
- crown the righteous one with the lofty crown.
What the poem says
Irāmaṉ instructs Ilakkuvaṉ to go with Cukkirīvaṉ, son of the Sun god, Aṉumaṉ, son of the Wind, and the other monkey heroes, and to crown Vīṭaṇaṉ king of Ilaṅkai according to the Vedic rule laid down by the First Lord. Irāmaṉ does not enter the city himself because of his vow to spend fourteen years in the forest, just as earlier he had Ilakkuvaṉ crown Cukkirīvaṉ in Kiṭkintai.