கம்பராமாயணம் 10017 · யுத்த 37.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மான்முகன் - மானின் முகம் உடையவனாகிய மயன் என்கிற தெய்வத் தச்சன்; வாச நாள் மலரோன் சொல - வாசனையுள்ள அன்றலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் கட்டளையிட; காசும் மாநிதியும் கொடு - மணிகளையும் உயரிய பொன்னையும் கொண்டு; கங்கை சூடு ஈசனே முதலோர் வியந்திட - கங்காநதியைத் தலைமேற் சூடிக் கொண்டுள்ள சிவபெருமான் முதலான தேவர்கள் அதிசயிக்கும்படி; தேசு உலா மணி மண்டபம் செய்தனன் - ஒளி பரவுகிற அழகிய திருவோலக்க பட்டாபிஷேக மண்டபத்தைச் செய்தமைத்தான்.
மயன் மானமுகம் உடையவன் என்பதனை 'மான் முக நலத்தவன், மயன்' (கம்ப. 4578) என்பது கொண்டு அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the word of him who sits on the fragrant fresh flower, the deer-faced one,
- taking gems and great treasure, so that the Lord who wears the Gaṅgai
- and the other gods first among them praised it in wonder,
- built a jewelled pavilion through which splendour flowed.
What the poem says
At Piramaṉ's command, Mayaṉ, the deer-faced architect of the gods, uses gems and gold to build a radiant jewelled hall for the coronation, so splendid that even Civaṉ, who bears the Gaṅgai on his head, and the other gods marvel at it. Piramaṉ is described as seated on a fragrant, newly opened lotus.