கம்பராமாயணம் 10021 · யுத்த 37.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முடி புனைந்த - கிரீடத்தை அணிந்து கொண்ட (பட்டாபிஷேகம் செய்து கொண்ட); நிருதர் முதலவன் - அரக்கர் குலத் தலைவனாகிய வீடணன்; இளவலை அடி வணங்கி - இலக்குவனைக் காலில் வீழ்ந்து வணங்கி; அந்நெடிய காதலினோர்க்கு - அந்த பேரன்பையுடைய இலக்குவனுக்கு; ஆண்டை - அவ்விடத்தே; உயர் நீர்மை செய்து - உயர்ந்த உபசாரங்களை எல்லாம் செய்து; இடிகொள் சொல்லன் - இடிமுழக்கம் போலக் கம்பீரமான குரலை உடையவனாய்; அனலற்கு - தன் அமைச்சர்களில் மூத்தவனாகிய அனலன் என்பானுக்கு; இது இயம்பினான் - பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானான்.
அனலன், அனிலன், அரன், சம்பாதி என்னும் நால்வர் வீடணன் அமைச்சர்கள். (கம்ப. 6377) என்பது முன்னர்க் கூறியது. அனலன் அவர்களுள் மூத்தவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chief of the Nirutar, having put on the crown,
- bowed at the feet of the younger prince, and there to those
- of long devotion he showed the highest courtesy;
- then, with a voice like thunder, he said this to Aṉalaṉ.
What the poem says
Crowned, Vīṭaṇaṉ falls at Ilakkuvaṉ's feet and honours him and his loving companions with every courtesy. Then, in a voice deep as thunder, he turns to Aṉalaṉ, the eldest of his four ministers, Aṉalaṉ, Aṉilaṉ, Araṉ and Campāti, to give him charge of the kingdom.