கம்பராமாயணம் 10022 · யுத்த 37.10

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(வீடணன்) விலங்கல் நாண மிடைதரு தோளினாய்! - மலைகளும் வெட்கமுறும்படி அவற்றினும் பெரிதாக நெருங்கி இருக்கின்ற தோள்களை உடைய அனலனே!; நீ யான் இலங்கை மாநகர் வரும் எல்லை - நீ! யான் (இராமனோடு அயோத்தி சென்று) இலங்கை நகரத்துக்குத் திரும்பி வரும் வரை; கலங்கலா நெடுங்காவல் இயற்று - உயிர்கள் யாவும் கலக்கம் உறாதபடி நீண்ட காவலைச் செய்வாயாக; எனா - என்று சொல்லி (அவனை அரசப் பிரதிநிதியாக ஆக்கி); அலங்கல் வீரன் - மாலை அணிந்த வீரனாகிய இராமபிரானது; அடி இணை எய்தினான் - திருவடி இணைகளை வந்து அடைந்தான்.

வீடணன் இராமனைப் பிரியாது அயோத்தி செல்லும் எண்ணம் உடையவனாய் இருந்தான் என்பது இதனால் விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O you whose crowded shoulders put the mountains to shame,
  2. until I come back to the great city of Ilaṅkai,
  3. keep a long and steadfast watch that lets nothing be troubled;
  4. saying this, he went to the twin feet of the garlanded hero.

What the poem says

Vīṭaṇaṉ appoints his minister Aṉalaṉ, whose shoulders shame the mountains, as regent: Aṉalaṉ is to guard Ilaṅkai so that no one is disturbed until Vīṭaṇaṉ returns. This shows that Vīṭaṇaṉ means to stay with Irāmaṉ and go with him to Ayōttī. He then returns to Irāmaṉ's feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vilaṅkal nāṇa miṭaitaru tōḷiṉāy!
ilaṅkai mā nakar yāṉ varum ellai nī
kalaṅkalā neṭuṅ kāval iyaṟṟu ‘eṉā
alaṅkal vīraṉ aṭi iṇai eytiṉāṉ.