கம்பராமாயணம் 10026 · யுத்த 37.14

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இப்புறத்து இ(ன்)ன எய்துறு காலையில்
அப்புறத்தை உன்னி அனுமனை
‘துப்பு உறு அச் செய்யவாய் மணித்தோகைபால்
செப்புறு இப்படிப் போய் ‘எனச் செப்பினான்.

பொருள் · Meaning in Tamil

இப்புறத்து - இவ்விடத்தில்; இன - இந்நிகழ்ச்சிகள்; எய்துறு காலையில் - நடக்கும் பொழுது; அப்புறத்ததை உன்னி - மேல் நடக்க வேண்டியவைகளை (இராமன்) மனத்தில் கருதி; அனுமனை - அனுமனை அழைத்து; துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால் போய் - பவழத்தை ஒத்துச் சிவந்த வாயை உடைய அழகிய மயில்போல்வாளாகிய சீதையிடம் சென்று; இப்படி செப்புறு - இங்கு நடந்த செய்திகளைச் சொல்வாயாக; எனச் செப்பினான் - என்று கூறினான்.

பட னகர க்க கும். ந ட னமைகள. அவை ப்படி - இதீதனி ர் என்றாகும். இங்கு நடந்த தல ராவணவ பட க் ச ை ட ம. பப ௨ ச தமும் விபிஷேகமும் சிறை மீட்சியும் ஆகும். 'துப்பு உறச் செய்ய வாய்' என்பது பவழத்தைச் சிவப்புறச் செய்யும் சிவந்த வாய் என்றுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While these things were taking place on this side,
  2. thinking of what lay on the other side, he told Aṉumaṉ,
  3. Go to the jewel of a peahen whose mouth is red as coral,
  4. and tell her all that has happened here.

What the poem says

With Vīṭaṇaṉ crowned, Irāmaṉ thinks ahead to what must come next and sends Aṉumaṉ to Cītai with the news: Irāvaṇaṉ's death, Vīṭaṇaṉ's coronation and her release from captivity. Cītai is pictured as a beautiful peahen whose lips are as red as coral, or even redder, putting coral to shame.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ip puṟattu iṉa eytuṟu kālaiyil
ap puṟattatai uṉṉi aṉumaṉai
‘tuppu uṟac ceyya vāy maṇit tōkaipāl
ceppuṟu ippaṭip pōy ‘eṉac ceppiṉāṉ.